விவேகானந்தரின்
சிந்தனைகள்!
விவேகானந்தர்
ஒரு துறவி; வீரமும் விவேகமும்
மனிதநேயமும் எதிர்கால இந்தியாவைப் பற்றிய தொலை நோக்குப் பார்வையும் கொண்டவர். ஆசைகளை வென்றவர். தவமுனிவராகத்
திகழ்ந்தவர். எனினும் விவேகானந்தரின்
சொற்பொழிவுகளில் ஆசையின்மை, தவம் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியதைவிட அதிகமாக மக்கள்
நல சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.
ஏழைமக்களைப்
பற்றிக் கவலைப்பட்டார். அவர்களுக்கு உணவும் உடையும் இருப்பிடமும் கிடைக்கவேண்டும்
என்று வலியுறுத்தினார்.
”சோறு வேண்டும், சோறு வேண்டும். இங்கே ஒரு பிடி சோறு தரமாட்டாராம். சொர்க்கத்தில்
நித்தியானந்தத்தைத் தருவாராம் – இத்தகைய ஒரு கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று இதயம்
குமுறினார் விவேகானந்தர்.
விவேகானந்தரின்
வாழ்க்கை
நாடு
முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏழை எளிய, இன்னல் பல பெற்ற உழைக்கும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் பொருளாதார
நிலையை நன்கறிந்தவர். சொந்தத் தந்தை இறந்தபின் வறுமையின் கொடுமையை, இளமையில் வெறுமையை
நேரடியாக அனுபவித்தவர். பதினைந்து ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் கூட போதும்
என்று முயற்சி செய்தவர். வேலையில்லா திண்டாட்டம் குடும்பங்களில் எத்தகைய துயரங்களை
சுமத்திவிடும் என்று அறிந்தவர். பசி, பட்டினிக் கொடுமையை அணிந்தவர்.
·
அவர் நேரில்
தரிசித்த இந்தியாவை மாற்றி அமைக்க விரும்பினார். இந்தியர்களுக்குத் தேவை மதம் அல்ல. தொழிற்கல்வி
என்று முழங்கினார்.
·
”நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப்
பலவீனன் என்று நினைத்தால் நீ பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே
ஆகிவிடுவாய்.
இக்கருத்து
சோர்ந்து கிடக்கும் உள்ளங்களில் வலிமை சேர்க்கும். தன் பலம் இன்னதென்று அறியாமல் விழுந்து கிடக்கும் மனங்களை
எடுத்து நிறுத்தும் ஆற்றல் விவேகானந்தரின் சொற்களில் காணப்படுகின்றனர்.
”இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே
என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை
இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும், எல்லாவற்றையும்
சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
கல்வியின் முக்கியத்துவத்தை
உணர்த்தியவர்
”பொதுமக்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்கு தகுதியானவர்களாகக் கூடிய கல்வி
வேண்டும் என்று விரும்பினார் விவேகானந்தர். அந்தக் கல்வி அவர்களைத் தங்கள் சொந்தக்காலில் நிற்கும்படிச்
செய்யவேண்டும் என்பது அவருடையக் கருத்து. பாமர மக்களாகிய பொது மக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத்
தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்லொழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற
மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகை கல்வி
தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தன் சொந்தக் காலில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான
கல்வி.”
”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் விவேகானந்தர். 1902 சூலை 4 ந் தேதி விவேகானந்தர்
மறைந்தார். அவர் 39 ஆண்டுகளும் 5 மாதங்களும்
இவ்வுலகில் வாழ்ந்தார். பத்தாண்டு காலம் பொதுத்தொண்டில் ஈடுபட்டது, உலக வரலாற்றில்
இடம்பெற்றுவிட்டது.
·
சிகாகோ, மாநாட்டுக்கு
அறிமுகமே இல்லாத துறவியாகச் சென்று, மாநாட்டில் பேசிய அந்தக் கணத்திலிருந்து உலகம் அறிந்தவரான
மாபெரும் மனிதநேயச் சிந்தனையாளர் விவேகானந்தர்.
·
உலக அரங்கில்
இந்தியா இழந்திருந்த சுயமரியாதையை மீட்டெடுத்தவர்.
·
இந்தியச் சுதந்திரத்தின்
விடிவெள்ளி!
பார்வை நூல்
1.
விடிவெள்ளி
விவேகானந்தர் – பசுமைக்குமார், அறிவுப் பதிப்பகம், ராயப் பேட்டை, சென்னை
-14.
Comments
Post a Comment