சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம், நூல் வெளியீட்டு விழா ...
சேலம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(த) மற்றும் சேலம், மகிழம் தமிழ்ச்
சங்கம், டுடே பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் 2025 – ஐ முன்னிட்டு
நிகழ்த்தும் முப்பெரும் விழா – 2025 சேலம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
நடைபெற்றது. இவ் முப்பெரும் விழாவில் விருது வழங்கும் விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம்,
ஆறாவது பல்துறை சார்ந்த மாபெரும் புத்தக வெளியீட்டு விழா என்று மூன்று
விழாக்களும் ஒரே மேடையில் நிகழ்ந்தது. இவ்விழாவில் SPJ SING PTE LTD, Singapore Dr
P.Nalini. அவர்களும், பேராசிரியர், தலைவர், சமூகவியல் துறை, தங்கவயல் சட்டக் கல்லூரி,
கோலார் தங்க வயல், கருநாடக மாநிலம், முனைவர் பெ.கணேஷ் அவர்களும், விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.
இத்தகைய சிறந்த நூல் வெளியீட்டு
விழாவில் என்னுடைய நூலான தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலும் வெளியானது. ஆகையால் இன்றைய தினம் எனக்குச் சிறந்த
நாளாக அமைந்தது. இந்நூலை சிறந்த முறையில் நூலாக்கம்
செய்து வெளியிட்ட சேலம், மகிழம் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி நவில்வதில் பெருமையடைகிறேன்.
இந்நூல் சிறந்த முறையில் வெளிவரக் காரணமாக இருந்து உதவிய சேலம், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறையில்
பணிபுரியும் உதவிப் பேராசிரியர் முனைவர் ப.கற்பகராமன் ஐயா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்விழா சிறந்த முறையில் நன்கு நேர்த்தியாக நடத்தினார்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும்
இல்லாமல் குறித்த நேரத்தில் சிறந்த முறையில் நடத்தினார்கள். நல்ல சிறப்பானதொரு மதியம்
விருந்துடன் இனிதாக நிறைவடைந்தது. இவ்விழாவை ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(த),
துணை முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்த்துறை பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களும்
இணைந்துச் சிறப்பாக நடைபெற உறுதுணையாகச் செயல்பட்டார்கள். கல்லூரி இயற்கைச் சூழலில்
மிகவும் ரம்மியமாக இருந்தது.
இன்றைய நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாளாக அமைந்தது.
Comments
Post a Comment