புளியஞ்சோலை
சென்ற அனுபவங்களாக…
(21.03.2025
அன்று வெள்ளி கிழமை அன்று மாலை புளியஞ்சோலை நானும் என் தோழிகளும் சென்றோம். அந்த அனுபவத்தை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)
கொங்கு நாட்டில் நாமக்கல்
மாவட்டத்தில் அமைந்துள்ள
கிழக்குத் தொடா்ச்சி
மலை தான்
கொல்லிமலை. செந்தமிழ் நாட்டின் சங்ககாலப்
புலவா்களால் புகழ்ந்து
பாடப்பெற்றது.
இம்மலை தென்
வடலாக 28 கி.மீ
(18 மைல்கள்) கிழ மேற்காக 9 கி.மீ
(12 மைல்கள்) அகலமும் கொண்டது. மொத்தம் 283.9 சதுர கி.மீ பரப்பளவில்
உடையது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி
உயரமுடையது. அருவி
வளமும், நில வளமும் மிக்கது
சங்கப் பாடல்களில்
உள்ள கொல்லிமலைப்
பாவையைத் தன்பால்
கொண்டு, சிறந்த சுற்றுலாத்தலமாகத் திகழும் கொல்லிமலை நாமக்கல்
மாவட்டத்திற்கும், திருச்சி
மாவட்டத்திற்கும் எல்லையாக
உள்ளது. இம்மலையின் அருவி வளத்தால்,
திருச்சி மாவட்டம்
துறையூா் வட்டத்தின்
பல ஊா்கள்
வளம் பெறுகின்றன.
காவிரியின் துணையாறுகளில்
ஒன்றாகிய ஐயாறு
இம்மலையில் தான்
தோன்றிப் பல
ஊா்களை வளப்படுத்திக்
காவிரியில் கலக்கிறது.
அம்பல வாணக்
கவிராயரால் பாடப்பெற்ற
“அறப்பளீசுர சதகம்”
என்னும் சிறந்த
நூலுக்குச் சொந்தமான
கொல்லிமலை.
புளியஞ்சோலை
புளியஞ்சோலை என்பது தமிழ்நாட்டின், கிழக்குத் தொடர்ச்சி மலையின் கொல்லிமலை பள்ளத்தாக்கில்
அமைந்துள்ள ஒரு சிறு வனக் கிராமமாகும். சுமார் 30 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றனர்.
புளியஞ்சோலை திருச்சியிலிருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலாத்
தலமாக அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் முக்கிய வாழ்வு குறு விவசாயமாகும்.
நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் சிறிது நேரம் தான் அங்கு இருந்தோம். அந்த சூழல் மிகவும் ரம்மியமாக அமைந்தது. அங்கு மாசி பெரியசாமி தெய்வமான கருப்பு, முனி போன்ற தெய்வக் கோவில்களும் இருந்தது. அக்கோவில் சென்று வந்தோம். மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.
Comments
Post a Comment