இரப்பதிலும்
இறப்பது மேல்!
புறநானூறு - 74
பாடியவர் –
சேரன் கணைக்காலிரும் பொறை
திணை – பொதுவியல்
திணை
துறை – முதுமொழிக்
காஞ்சித் துறையைச் சார்ந்தது
”குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள்அன்று
என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு
ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல்
கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை
இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம்
இரந்து உண்ணும் அளவை
ஈன்ம
தோஇவ் வுலகத் தானே”
குழந்தை இறந்து பிறந்தாலும், பிறக்கையிலேயே
குறைப் பிண்டமாகப் பிறந்தாலும், அவற்றை முழு ஆள் அல்ல என்று கருதி வாளால் வெட்டிய பின்பே
மண்ணில் புதைப்பர் மறக்குடியினர். அப்படியிருக்கப் பகைவர் கை வாளுக்கு இரையாகிச் சாகாது,
சங்கிலியில் கட்டி நாய் போல் இழுத்து வந்து சிறை செய்த பின்னும், அவர்கள் தரும் தண்ணீரைக்
குடித்து, வேட்கையைத் தணித்துக் கொண்டு, உயிர் வாழ எண்ணும் என்னைப் போன்ற மன வலிமை
அற்றவர்களையும், இரந்துண்டு உயிர் வாழ நினைப்பவர்களையும், மன்னன் என்று இவ்வுலகம் ஏற்றுக்
கொள்ளுமோ? என்று மனம் புழுங்கிச் செத்த சேரன் கணைக்காலிரும் பொறையின் பாடலாகும்.
Comments
Post a Comment