இல்லற
வாழ்வே இனிது
புறநானூறு –
193
பாடியவர் –
ஓரேருழவர்
திணை – பொதுவியல்
திணை
துறை – காஞ்சித்
துறை
பாடலின் உட்பொருள்
- இப்பாடல் தனி மனிதர் துறவு பற்றி எண்ணலாம். சுற்றத்தாருடன்
கூடி வாழ்பவன் இருக்க வேண்டியது இல்லறத்தில் தான் என்னும் சீறிய கருத்தை உணர்த்துகிறது.
”அதன் எறிந்தன்ன நெடுவெண் களரின்
ஒருவன்
ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே”
தோலை உரித்துத் திருப்பிப் போட்டது போலிருக்கும்
நீண்ட வெள்ளை களர் நிலத்தில், வேடன் ஒருவனால் விரட்டப்படும் மான் ஒன்று உயிர் பிழைக்க
இங்கும் அங்கும் ஓடி அலைந்து தவிக்கும். பின் உயிர் தப்பிப் பிழைக்கவும் கூடும். ஆனால்
குடும்பத்தோடு கூடி வாழும் என் இல்லற வாழ்வில் நான் அப்படித் தப்பிப் பிழைக்க வழியில்லை.
தப்பி ஓட நான் முயன்றாலும் என் உறவும் சுற்றமும் தடையாய் நின்று என் காலை தடுக்கும்.
Comments
Post a Comment