Skip to main content

மக்களிடம் வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்கும் முறை

 

மக்களிடம் வாட்டி வதைக்காமல்

வரி வசூலிக்கும் முறை

புறநானூறு – 184

பாடியவர் – பிசிராந்தையார்

பாடப்பட்டவர் – பாண்டியன் அறிவுடை நம்பி

திணை – பாடாண் திணை

துறை – செவியறிவுறூத் துறை

        மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை அழகிய யானை புகுந்த வயல் உவமையால் விளக்கும் இப்பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் பாடலாக அமைந்துள்ளது.

        ”காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

        மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்

        நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

        வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்

        அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே

 

        கொடி யாத்து நாடுபெரிது நந்தும்

        மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

        வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

        பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

        யானை புக்க புலம்போலத்

 

        தானும் உண்ணான் உலகமும் கெடுமே!”

 

        விளைந்த வயலிலிருந்து நெல்லைக் கொண்டு போய்ச சேமித்து வைத்துக் கொண்டு, கவளம் கவளமாகக் கொடுத்து வந்தால், ஒரு ‘மா‘ வுக்கும் குறைவான நிலத்தில் விளைந்த நெல் கூட யானைக்குப் பல நாள் உணவாகத் தரப் பயன்படும். ஆனால், அதே யானையை அதன் விருப்பத்திற்கு மேய்ந்து தின்ன விட்டு விட்டால் நூறு வயலில் விளைந்த நெல்கூட அதன் பசிக்குப் போதாதாகிவிடும். காரணம், யானையின் வாய்க்குள் போவதை விடக் காலில் மிதிபட்டு அழிவமே அதிகமிருக்கும். இந்த உண்மையை அறிவுடைய அரசன் புரிந்து கொள்ள வேண்டும்.

          மக்களிடம் வரி வாங்குவதில் இந்த வழியையே அவன் மேற்கொள்ள வேண்டும். மேற் கொண்டால், நாடு கோடி கோடியாக வருவாய் தந்து வளமும் தழைக்கச் செய்யும். அவ்வாறு அல்லாமல், அரசன் அறிவுத் திறம் அற்றவனாகி, தரமற்ற தன்னுடைய சுற்றத்தார்கள் பேச்சைக் கேட்டு, மக்களை வருத்தி, அன்றாடம் வரி வாங்கிப் பணம் சேர்க்க விரும்பினால் அவனுடைய நாடு யானை புகுந்த வயல் போல் கெடும். அவனும் வாழ மாட்டான். அவனுடைய நாடும் வாழாது - அழியும்.

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...