இன்பமும்
துன்பமும் கலந்தது தான் இவ்வுலகம்
புறநானூறு –
194
பாடியவர் –
பக்குடுக்கை நன்கணியார்
திணை – பொதுவியல்
திணை
துறை – பெருங்காஞ்சித்
துறை
பாடலின் உட்பொருள்
- உலக வாழ்வின் இயல்பை உள்ளபடி விளக்கும் பாடல்.
”ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூஅணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப்பண்பி லாளன்
இன்னாது அம்மஇவ உலகம்
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே”
ஒரு வீட்டில் சாவு மேளம் ஒலிக்கிறது. இன்னொரு
வீட்டில் இனிமையான மங்கல இசை முழங்குகிறது. மகிழ்வில் கூடியவர்கள் மலர் மாலை சூடி மகிழ்கின்றனர்.
துணையைப் பிரிந்தவர்கள் துன்பத்தில் வருந்துகிறார்கள். இந்த நேர்மாற்றங்கள் நிகழக்
காரணம் உலகைப் படைத்தவனுடைய இரக்கமற்ற தன்மையே ஆகும். இன்பம் – துன்பம் என்னும் இரண்டும்
நிறைந்தது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள், இந்த இரண்டிலிருந்து விடுபட்டு உண்மையான இன்பம்
எதுவெனக் கண்டறியவே முயலுவர்.
Comments
Post a Comment