இலக்கியங்களில்
நட்பு
மனிதன் என்பவன் சூழ்நிலைக் கைதி. சுற்றி
இருப்பவர் சூழ்நிலைக்கேற்பத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியவளாகிறான். உறவுக்கு
வெளியே, அதற்கும் மேலே நட்பு என்கிற குணம் அவனுக்கு அமைந்துவிடுகிறது. ஒருவரையொருவர்
புரிந்துகொண்டு உதவி செய்து வாழக் கடமைப்பட்டவனாகிறான். அந்தக் கடமைப்பாட்டையே நட்பு
என்கிறார்கள். மற்றைய உறவுகளைவிடவும் இந்த நட்பு என்னும் உறவே புனிதமானது. அதனால்தான்
உயிர்காப்பான் தோழன் என்னும் உயர்வு அந்த நட்புக்குச் சூட்டப்படுகிறது.
· உறையூரிலிருந்தக்
கோப்பெருஞ்சோழனும், மதுரையிலிருந்த பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் புலவர் வாயிலாய்
அறிந்து ஒத்த உணர்ச்சியால் நண்பர்களாயிருந்து, கோப்பெருஞ்சோழன் இறந்தபோது பிசிராந்தையாரும்
உடனுயிர் நீத்தது. ”உணர்ச்சிதான் நட்பாம்” என்பதற்கு மிகச்சிறந்த சான்று.
·
தீ நட்புக்கு
எடுத்துக்காட்டாகப் பாரதத்தில் சகுனி, இராமாயணத்தில் கூனி.
·
இராமனுக்கு
ஆற்றைக் கடக்க நாவாய் ஓட்டி நண்பனானான் குகன் – எதிர்பாராத நட்பு.
· பாரியின் மறைவிற்குப்
பின் பாரி மகளிர்க்குத் தந்தைபோல் இருந்து கபிலர் அப்பெண்களுக்குத் திருமணம் செய்து
வைத்தார்- உயிர் நட்பு.
·
சாவா மருந்தாகிய
அருநெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்த அதியமானின் நட்பு – தியாகத்தின் அடையாளம்.
உண்மையான நண்பனாக இருப்பவன் நண்பன் தவறு செய்யுங்கால் அவனை
இடித்துரைத்துத் தடுத்து நிறுத்துதல் வேண்டும்.
”நகுதல் பொருட்டன்று
நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்றி
டித்தற் பொருட்டு” (குறள்-784)
”வாளால் அறுத்துச்
சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்
நோயாளன் போல” (குறள் -688)
என்றும்,
அரிசினத்தால்
ஈன்றதாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழுங் குழவி” (குறள்-691)
என்றும் நாலாயிரத்
திவ்ய பிரபந்தம் உரைக்கின்றது. இவையனைத்தும் நண்பரின் கடமையை, உறுதியை, நட்பின் உறுதியை
எடுத்துக்காட்டும்.
வாழ்க்கை நிலையாமை உடையது. முட்டையினுள்
இருந்த உயிர் பக்குவமடைந்த்தும் அதனை உடைத்துப் புள்ளாகப் பறந்துசென்று விடும். ஆகவே
உயிருடன் கூடி இருக்கும் கொஞ்ச நாளில் நன்னெறிகளை நாடி மனிதகுலம் நன்மையடையும்படி நல்லவற்றைச்
செய்து நன்னிலையடைதல் வேண்டும். இதனை,
”குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு
உயிரிடை நட்பு” (குறள்-338)
என்று திருக்குறள்
பக்குவமான நட்பினை எடுத்துக் காட்டுகிறது. இதனை உணர்ந்தாயினும் நன்னெறிகளை நாடி நல்வழிகாட்டும்
நல்ல நண்பர்களாக வாழப் பழகவேண்டும்.
Comments
Post a Comment