பச்சைக் குத்துதல்
பச்சை வண்ணத்தில் மக்கள் தம் உடம்பில் பல வடிவங்களை வரைந்து
கொள்வதனைப் பச்சைக் குத்துதல் என்பர். அழகுக்காகவும் அடையாளத்திற்காகவும் இக்கலையைப்
பயன்படுத்துவர். மார்பு, மேல் கை, முன்னங்கை, கால் முதலான உடற்பகுதிகளில் பச்சைக் குத்துதல்
வழக்கம்.
மஞ்சள் பொடி,
அகத்திக்கீரை ஆகியவற்றை அரைத்துத் துணியில் வைத்து திரியாக்கி எரித்துக் கரியாக்குவர்.
அக்கரியினை நீர் அல்லது தாய்ப்பாலுடன் கலந்து மையாக்குவர். ஊசிகளால் விரும்பிய இடத்தில்
பச்சைக் குத்துவர்.
தமிழ்நாட்டில்
குறவன், குறத்தியர் பச்சைக் குத்துதலைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். முன்பு இதற்குக் கூலியாக
அரியினைப் பெறுவர்.
ஒருமுறை
பச்சைக் குத்திக் கொண்டால் சாகும்வரை அந்த அடையாளம் மறையாது. எனவே, கட்சி விட்டு கட்சி
தாவாமல் இருக்க சில நேரங்களில் அரசியலாளர்களும் கூடப் பச்சைக் குத்திக் கொள்ளுதல் உண்டு.
காதலர்கள் தங்கள் காதலின் வலிமையினைப் பலப்படுத்த பச்சைக் குத்தி மகிழ்வர். துப்பறியும்போது
பச்சைக்குத்திய அடையாளம் துப்புத்துலக்கப் பெரிதும் கை கொடுக்கும் நிலையினையும் காணலாம்.
Comments
Post a Comment