கோலம்
கோலம் என்றால் அழகு என்று பொருள். இந்தியா முழுவதிலும் உள்ள
இவ்வழக்கம் இந்துக்களிடம் சிறப்பாகக் காணப்படுகின்றது. தமிழர்கள் கோலமிடுதல் என்றும்
மலையாளிகள் அஸ்தம் என்றும், கன்னடர் ரங்கவல்லி அல்லது ரங்கோலி என்றும் அழைப்பர்.
நாள்தோறும்
வைகறையிலும், மாலையிலும், கோயில் விழாக்களிலும் பொங்கல், நவராத்திரி முதலான விழாக்களிலும்,
திருமணம் பூப்பு முதலான சடங்குகளிலும் கோலம் போடுவது வழக்கம். வீட்டின் முற்றம் அல்லது
முக்கிய உட்பகுதியில் கோலமிடுவர். அரிசிமா, கல்மா, மண், சுண்ணப்பொடி ஆகியவை பல வண்ணங்களில்
கோலப்பொடியாகப் பயன்படுகிறது. திருவிழாக்களில் பல வண்ணங்கள் எடுப்பாகத் தெரியவும் காற்றில்
கலைந்து விடாமல் இருக்கவும் உப்பில் பல வண்ணப் பொடிகளைக் கலந்து கோலமிடுவர்.
பொதுவாகப்
புள்ளி வைத்துக் கோலமிடுவதுதான் தமிழர் வழக்கம். புள்ளி வைக்காத கோலவகை ரங்கோலி எனப்படும்.
இம்முறை கன்னட நாட்டிலிருந்து பரவியது.
Comments
Post a Comment