Skip to main content

வேளாளர் வீடுகள்

 

வேளாளர் வீடுகள்

         தம் வாழ்வியலுக்கு ஏற்ப குடியிருப்புகளைத் திட்டமிட வேண்டும் என்னும் கொள்கைக்கு ஏற்ப வேளாளர் வீடுகள் அமைக்கப்பட்டன.

குதிர்கள்

  வேளாண்மை, சார்ந்த வாழ்க்கை வேளாளர் வாழ்க்கை, விளைந்த தானியங்களைப் பாதுகாக்கவும், சேமிக்கவும் குதிர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். குதிர்கள் பெண் யானைகளைப் போன்று அளவில் பெரியதாக இருக்கும். அக்குதிர்களைக் கட்டி விடுவதற்கு ஏற்ற வண்ணம் முன்றில்களைப் பழந்தமிழர்கள் அமைத்துக் கொண்டனர். இதனை,

          பிடிக் கணத் தன்ன குதிருடை முன்றில்” (பெரும்பாண். 186)

என்று பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.

கொட்டில்கள்

      கலப்பை சார்த்தி வைத்துக் கொள்ள வலிமையான நெடிய சுவர்களுடன் கூடிய கொட்டில்களைக் கட்டி விட்டனர். இதனை,

          ”குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி

           நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில்” (பெரும்பாண்.188-189)

என்னும் பெரும்பாணாற்றுப்படையின் வழி அறியலாம்.

படப்பை

          படப்பை என்றால் வீட்டுத்தோட்டம் என்று பொருள். பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வீட்டிலேயே விளைவித்துக் கொண்டனர். படப்பைக்குத் தேவையான இடம் விட்டு இல்லிடத்தைக் கட்டினர் என்பதை,

          ”மஞ்சள் முன்றில் மணநாறு படப்பைத்

           தண்டலை உழவர் தனிமனை” (பெரும்பாண்.354-355)

பெரும்பாணாற்றுப்படை பாடல் மூலம் அறியலாம்.

முன்றில்

     வீட்டிற்கு முன்னே மரம் செடி கொடிகளும், புல்வெளியும் அமைத்துக் கொள்வது நாகரிகத்தின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. வீட்டிற்கு முன்புறம் மரம், செடி, கொடி பந்தல் முதலானவைகளை அமைத்து இயற்கை இன்பம் தோய்ந்த வாழ்வு நடத்தினார்கள் பண்டைத் தமிழர்கள்.

       குறிஞ்சி நிலத்தில் இல்லத்தின் முன் விளாமரத்துடன் நிகழ்ந்த அழகிய முன்றில் காணப்படுவதனை,

          ”பார்வை யாத்த பறைதாள் விழவின்

           நீழல் முன்றில்”    (பெ.பா.95-96)

என்றும்,

”கூதுளம் கவினிய குளவி முன்றில்” (புறம்.168)

”பஞ்சி முன்றில்”     (புறம்.116)

என்றும் முன்றில் பற்றி இலக்கியங்கள் பலவாறு தெளிவுறுத்துகின்றன.

தூண்

      வீட்டு முற்றத்தில் தூண்கள் நாட்டப்பட்டு இருந்தன. தூண்கள் வீட்டுக் கூரையின் முற்பகுதியைத் தாங்கி நின்றன. தூண்களில் கன்றுகளைக் கட்டி வைத்தனர். சில வேளைகளில் தூண்கள் சாய்ந்து கொண்டு நிற்பதற்கும், பேசுகையில் பற்றி கொண்டிருப்பதற்கும் எனப் பலவித பயன்பாட்டிற்கு உரியதாக இருந்தது.

          பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருத்தி வந்து வீட்டின் தூணைப் பற்றி நின்று கொண்டாள். நின் மகன் நெடுநாளாய் காணோமே, எங்கே? என்று வினவினாள். இத்தகைய காட்சியை,

          ”சிற்றில் நல்தூண் பற்றி நின்மகன்

           யாண்டு உளனோ? என வினவுதி” (புறம்.86)

என்று புறநானூற்றுப் பகுதி சித்தரிக்கின்றது.

பந்தல்

       வெயிலின் கதிர்கள் நேரடியாகத் தாக்காமல் ஓய்வெடுக்கவும் உறங்கவும் பந்தல் பயன்பட்டது. தானியங்கள் முதலானவற்றைக் காய வைக்கவும் பயன்பட்டது. விருந்தினர்களை வரவேற்று அமரச் செய்து அளவளாவி மகிழவும் வாய்ப்பாகப் பந்தல் அமைந்தது.

          ”கூவை தூற்ற நாற்கால் பந்தர்ச்

           சிறுமனை வாழ்க்கை” (புறம்-29,19-20)

என்னும் பாடல் கூவையினால் மூடி நான்கு கால்களை உடைய பந்தலாகிய சிறிய படைவீடுகள் அமைக்கப் பெற்ற நிலையினை எடுத்துரைக்கின்றது

       புன்னை மரத்தின் கொம்பை வெட்டி அமைக்கப்பட்ட பந்தல், பந்தலில் சுரைக்காய், பாகற்காய், புடலங்காய் முதலான காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. கீழே புதிய மணல் பரப்பப்பட்டுள்ளது. பந்தலின் நிழலில் இளையவரும் முதியவரும் சுற்றத்துடன் கூடி மகிழ்ச்சியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

        வீட்டின் முற்றத்தில் முஞ்ஞைக் கொடியோடு முசுண்டைக் கொடியும் தழைத்து வளர்ந்திருக்கின்றது. வேறு புதிதாகப் பந்தர் அமைக்கத் தேவையில்லை என்னும் அளவில் பந்தல் போலக் கொடிகளே காட்சித் தருகின்றன. பலரும் உறங்கி ஓய்வெடுக்க அப்பந்தலில் நிழல் உதவியாக உள்ளது. அந்நிழலில் யானைகளை வேட்டையாடும் வேடன் ஒருவன் ஆழந்த உறக்கத்தில் கிடந்தான்.

          ”முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி

         பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்

         கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்து” (புறம்,1-3)

என்னும் பகுதி இக்காட்சியினைப் படம் பிடிக்கின்றது.

குதிர், கொட்டில், படப்பை, முன்றில், தூண், பந்தல் என்று வேளாளர் வீடுகள் காணப்பட்டதை இலக்கியச் சான்றுகள் மூலம் அறியலாம்.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...