சுருங்கை
வீதிகள் (சுரங்கப் பாதைகள்)
பழங்காலம் முதல் அரண்மனைகளிலும் பிற இடங்களிலும் சுருங்கை வீதிகளை அமைத்துள்ளனர்.
சுருங்கை வீதிகளை அமைத்துள்ளனர். சுருங்கை வீதிகளில் யானை வரிசைகள் நடந்து செல்கின்ற
அளவிற்கு இடப்பரப்பு உடையதாக இருந்தது.
”பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை
வீதி மருங்கில் போகி” (சிலம்பு14:64-65)
என்று சிலம்பு
மூலம் அறியலாம்.
மன்னர்கள் தமது பெரும் நிதிக் குவியலை நிலவரை
(சுருங்கை) யில் மறைத்து வைத்தனர். நிலவறைக்குச் செல்லும் சுருங்கைப் படிக்கட்டு இயற்கையான
நிலப்பரப்பு போன்ற மேற்புறத் தோற்றத்துடன் காணப்பட்டது. நிலவறைக்கு வரும் அந்நிய மாந்தரை
அச்சுறுத்தும் இருள், முட்டுத்திருப்பம், திடீர்க்குழிகள், வழியடைப்பு முதலான இடர்பாடுகள்
நிலவறையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இதனை,
”பெருங்கல நிதியம்பெய்து வாய் அமைத்த
அரும்பிலத்து
யாத்த அச்ச மாந்தர்
வாயில்
பெற்றுவழிப் படர்ந் தாங்குப்
போக
அமைந்த பொய்ந்நிலச் சுருங்கை” (பெருங்கதை 17:91-94)
என்று பெருங்கதையின்
பகுதி விவரிக்கின்றது.
குடிமக்களுக்கு நீர் வசதிக்கு உரிய ஏற்பாடுகள்
சுருங்கை மூலம் செய்து கொடுத்திருக்கின்றனர். இதனை,
”நீணிலம் வகுத்து நீர்நிரந்து வந்து இழிதரச்
சேணிலத்து
இயற்றிய சித்திரச் சுருங்கை” (சீவக சிந்தாமணி-142)
என்று விளக்குகிறது.
மாடம் மீதிருந்து சுருங்கைக்கான வழிகள் அமைக்கப்பட்டன.
இத்தகைய சுருங்கைகள் ஆபத்துக் காலங்களில் அரச மகளிர் தப்புகை வழிகளாகச் செயலாற்றின.
இச்சுருங்கைப் பற்றி,
”மாடமேற் சுருங்கையில் இருந்து” (சீகாளத்திப் புராணம் -30)
என்று கூறிகின்றது.
பொதுவாகச் சுருங்கைகளை,
·
நிலவறை வழிகளாகவும்
·
நிதியம் காக்கும்
அருங்கலன் இருக்கையாகவும்
·
குடிநீர் வழங்கும்
புழையாகவும்
·
அரசர்களின்
அவசர காலத் தப்புகைத் தடமாகவும்
·
சாய்க்கடை வழிகளாகவும்
பயன்படுதியுள்ளனர்.
தஞ்சைக் கோட்டையில் 16 – ஆம் நூற்றாண்டினைச்
சேர்ந்த அவசர காலத் தப்புகை வழிகளில் இரண்டு இன்றும் காணத்தக்க நிலையில் உள்ளன. அவை
அரண்மனை மராட்டியக் கொலுக்கூட்டத்திலும், சார்ஜா மாடிக் கட்டிடத்தின் மேற்குப் புறத்திலும்
காணப்படுகின்றன.
குடிநீர்ப் புழைத் தொடர்களாக உள்ளவை சிவகங்கைக்
குளத்திலிருந்துத் தொடங்கித் தஞ்சைக் கோட்டைக்குள் இருக்கும் நகர்ப்பகுதியின் பல பகுதிகளில்
தொடர்ந்து காணப்படுகின்றன.
நிலவறைக்கான சுருங்கைகள் அரண்மனையின் வேறு
சில குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன.
சுருங்கைகளின்
இயல்புகள்
·
இவை தரை மட்டத்திற்குக்
கீழ் அமைந்துள்ளன.
·
பெரும்பாலும்
செங்கல் காரைப் பற்றாகப் பொருட்களால் ஆனவை.
·
வளைவுக்கூரை
முகட்டைக் கொண்டவை
·
சில நூறு அடிகள்
வரை நீட்சியுடையவை.
தப்புகை வழிகளில்
பொது இயல்புகள்
·
ஒரு ஆள் செல்லத்தக்க
வகையில் இரண்டு அல்லது இரண்டரை அடி அகலமும், ஆறுமுதல் ஏழடி உயரம் கொண்ட சந்தாக அமைகின்றது.
·
நடுநடுவே கிளை
வழிகள் உள்ளன.
· கிளை வழிகளினூடே
முட்டுச் சந்துகள் போன்ற மயக்கு வழிகள் காணப்படுகின்றன.
·
ஒளி, காற்றுப்பழக்கம்
வேண்டி பக்கவாட்டிலோ, கூரைப் பகுதிகளிலோ சிறு ஓட்டைகள் காணப்படுகின்றன.
·
தரைப்பகுதி
பாவுக்கற்கள் அல்லது நடைக்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.
·
சுவர்கள் செங்கற்களால்
அமைக்கப்பட்டுள்ளன.
· பக்க அணைவு
மண்திணிப்பின் தகுதிக்கேற்ப சுவர்க்கனம் கூடியும் குறைந்தும் உள்ளன.
·
முட்டுத் திருப்பங்களுடன்
மேல், கீழ் இறக்கங்களும் காணப்படுகின்றன.
·
பக்கச் சுவர்கள்
கூரையின் உட்புறம் முதலியவை இருவகைக் களிமண் பூச்சு வடிவங்களைக் கொண்டுள்ளன.
·
முட்டுத் திருப்பங்களை ஒட்டிய மூலைப் பகுதிகளில் துளை அல்லது
காடி அடிக்கப் பெற்ற கருங்கற்துண்டுகள் பதிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் தீவட்டிகள் செருகும்
வரையில் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுமானத் தொழில் நுட்பங்களைப் பார்க்கும்போது,
”உயர்வுஅகலம்
திண்மை அருமை இந்நான்கும்
அமைவரண் என்றுரைக்கும் நூல்” (குறள்-743)
என்னும் குறளுக்கேற்ப அமைந்துள்ளன எனலாம்.
Comments
Post a Comment