அநுசூயா
அத்திரி
முனிவரின் பத்தினியே அநுசூயா, ‘பொறாமை இல்லாதவள்’ என்பது அவள்
பெயரின் பொருள். அவள் மிகவும்
கற்புள்ளவள் என்று புகழப் பெற்றாள். இதை உலகம் அறியச் செய்ய எண்ணினார் நாரதமுனி.
இரும்பினால்
செய்த கடலைகளை எடுத்துக்கொண்டு, பார்வதி தேவியிடம் போனார். ”அம்மா! இக்கடலைகளைத்
தங்களால் வறுத்துத் தர முடியுமா?” என்று கேட்டார். இவ்வாறு, சரசுவதி, இலக்குமி ஆகிய இருவரிடமும் கேட்டார். அவர் உள்ளக்
கருத்தை அறிந்து கொண்ட முப்பெருந்தேவியர்களும் ‘எங்களால் ஆகாது’ என்று மறுத்துவிட்டனர்.
நேரே
அநுசூயையிடம் வந்தார் நாரதர். அம்மா இந்த இரும்புக் கடலைகளை வறுத்துத் தர வேண்டும் என்றார்.
கணவர்
அத்திரி முனிவரின் நினைவுடன், கற்பரசி அநுசூயா வாணலியிட்டு அவற்றை வறுத்துக் கொடுத்து விட்டாள்.
அவற்றை
எடுத்துச் சென்ற நாரதர், ”பாருங்கள், நீங்கள் வறுக்க முடியாது என்று விட்டதை வறுத்து விட்டாள்
ஒருத்தி” என்று லஷ்மி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூவரிடமும் காட்டினார்.
”இக்கடலைகளை வறுத்தது யார்?” என்று அவர்கள் கேட்டனர்.
”வேறு யார்? கற்புக்கரசி அநுசூயா தான்!” என்ற செய்தியைக் கூறினார். இதனால் முப்பெரும் தேவியரைவிட அனுசுயாவின் கற்பு சிறந்தது
என்பது போலத் தோன்றுகிறதல்லவா? அப்படியில்லை அநுசூயா சாதராணப் பெண். அவளுடைய சிறப்பை
எடுத்துக் காட்டவே, தேவ தேவியர் சோதனை செய்கின்றனர்.
தத்தமது தேவியர் தூண்டுதலால் அநுசூயா எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூடக் கற்புத்
தவறாமல் இருப்பாளா என்று அறிய மும்மூர்த்திகளும் அத்திரி முனிவரின் ஆசிரமத்தை, அவரில்லாத
போது அடைந்தனர்.
பைராகிகளைப் போன்ற தோற்றத்தில் இருந்ததால் அநுசூயாவால் அவர்களை விஷ்ணு, பிரம்மா,
சிவன் என்று அறிய முடியவில்லை.
அதிதிகளை பூஜித்து விருந்திற்கு ஏற்பாடு செய்தாள்.
மும்மூர்த்திகள் அவள் கற்பைச் சோதிக்க, ”விருந்து பரிமாறுகையில் நீ பிறந்த மேனியில்
இருக்க வேண்டும்” என்றனர். விபரீதமாக இருந்தாலும், பாதியில் அதிதிகளான பைராகிளை விரட்ட
வேண்டாம் என்று நினைத்தாள். தனது ஆடையை அவிழ்த்துவிட்டு, குதிங்கால்வரை நீண்டிருந்த
தன் கூந்தலைப் பிரித்து முன்னும் பின்னும் விட்டு மறைத்துக் கொண்டு வந்து உணவைப் பரிமாறினாள்.
மும்மூர்த்திகளின் சோதனை இன்னும் அதிகமானது.
காற்றடித்து அநுசூயாவின் கூந்தலை ஒதுக்கியது.
நிலைமை சங்கடமானதால், தன் கணவரை எண்ணி நீரைத் தெளித்து மும்மூர்த்திகளையும்
சிறு குழந்தைகளாக்கி விட்டாள். பின் குழந்தைகளுக்கான உணவை அளித்து உற்சாகப்படுத்தினாள்.
நாரதர் மூலம் செய்தியறிந்த முத்தேவியரும் ஓடிவந்து, அநுசூயாவின் கற்பை மெச்சி
நடந்ததைக் கூறவே, குழந்தைகளான மும்மூர்த்திகளை – கணவரின் பெயரால் மீண்டும் பழையபடி
ஆக்கி வணங்கி அனுப்பினாள்.
அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு இராமர் வந்தபோது, சீதைக்குக் கற்பரசிகளைப்
பற்றி அநுசூயாஅறிவுரைக் கூறியவள்.
”கணவனைத் தவிர கனவிலும் பிற ஆடவரை நினையாதவள் முதல்வகை.
கணவரைத் தவிர மற்றவரை அண்ணன், தந்தை என்ற உறவில் அன்பு செய்பவள் இரண்டாம் வகை.
வாய்ப்புக் கிடைக்காததாலும் பிற ஆடவரைக் கூடாதவள் மூன்றாம் வகை.
கள்ளத்தனமாக, கணவனைவிடக் காதலனையே நேசிப்பவள் நான்காம் வகைப் பெண்ணாவாள் என்பது
அநுசூயா கூறியது.
பார்வை நூல்
1.
இராமாயணக் கதைகள்
– ஸ்வாமி, அபி புக்ஸ், காந்திபுரம், கோயம்புத்தூர் -641 018.
Comments
Post a Comment