திருப்பூர்
குமரன்
தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் குமரன் இந்திய
விடுதலைக்காகத் தன் இன்னுயிரையே ஈந்த தியாகச் செம்மலாக விளங்குகிறார். குமாரசாமி என்னும்
இயற்பெயரைக் கொண்ட திருப்பூர் குமரன் 1904 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். இவருடைய
பெற்றோர்கள் நாச்சிமுத்து கருப்பாயி அம்மாள். சென்னிமலையில் பிறந்து பள்ளிப்பாளையம்
சென்று நெசவுத் தொழில் கற்று வந்தார். 14 வயதில் இராமாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய வாழ்க்கையில் வறுமையும், இன்னலும் வந்தது. அப்பொழுதே இறைப் பற்றுடையவராக விளங்கினார்.
”சைவம் தழைக்கும் சென்னிமலையில் பிறந்த குமாரசாமி
திருவாசகம் படித்தார். வீட்டிற்கு அருகே காமாட்சி அம்மன் கோயிலில் நண்பர்களோடு சனிக்கிழமை
தோறும் பஜனை பாடுவார்” என்னும் வரிகளில் திருப்பூர் குமரனின் தெய்வ பக்தியை எடுத்துரைப்பர்.
வறுமையின் காரணமாக பிழைப்பதற்காக பெற்றோருடன் திருப்பூர் வந்தார். காந்தியடிகளின் சித்தாந்தம்
அவருக்குப் பிடித்தது. எனவே கதர் அணிந்தார்.
மனைவியையும் அணிய செய்தார். அந்நிய துணிக்கடை மறியல், மதுக்கடை மறியல் போன்ற போராட்டங்களில்
கலந்து கொண்டார்.
காந்தியடிகளை ஆங்கிலேய அரசாங்கம் கைது செய்து
சிறையில் அடைத்தது. திருப்பூரில் இருந்த ‘தேசபந்து வாலிபர் சங்கம்’ அதற்காகப் போராடியது.
போராட்டத்தில் திருப்பூர் குமரனும் கலந்து கொண்டார். கதர் கொடி ஏந்தி ‘வந்தே மாதரம்’ என்று முழங்கிக் கொண்டே
குமரன் வந்தார். அப்போது மகமது என்ற காவல் துறை அதிகாரி அவரைத் தடிகொண்டு தாக்கினான்.
மண்டை பிளந்தது. இரத்தம் பீறிட்டது. அப்போதும் ‘வந்தே மாதரம்’ என்றே முழங்கினார். கொடியை
கீழே போடும்படி காவல்துறை அதிகாரி கட்டளை இட்டார். அப்போதும் முடியாது என்றே கொடியை
உயர்த்திப் பிடித்தார். மயங்கி விழுந்த குமரனை மருத்துவமனையில் சேர்த்தனர். 1932 –
ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 – ஆம் தேதி அத் தியாகியின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது.
பார்வை நூல்
1.
இலக்கியப் புதையல்
– பேராசிரியர் டாக்டர் க. இந்திரசித்து, ரேவதி பதிப்பகம், சென்னை -600 017.
Comments
Post a Comment