சிற்பம் - படிமம்
செப்புப் படிமம்
செப்புப் படிமம் செய்வதன் ஆரம்ப நிலை மெழுகுப் படிமம் செய்வது. தேவையான உருவத்தை
மெழுகில் செய்து அதன் மேல் மண் கலவையைப் பூசுவர். அது காய்ந்ததும் உட்பகுதி மெழுகை
உருக்கி எடுப்பர். பின்னர் உள்ளீடற்ற மண் உருவினுள் உலோகங்களை உருக்கி ஊற்றுவர். உலோகம்
ஆறியபின் மண்பகுதியை எடுத்து விடுவர். அந்த உலோக உருவத்தை அரத்தால் ராவிசீர் செய்வர்.
இது உலோக படிவம் செய்யும் முறையாகும். செப்புப் படிவத்தின் ஐந்து படிநிலைகளாக, மெழுகு பிடித்தல், கருக்கட்டுதல்,
வார்த்தல், வெட்டி ராவுதல், தீர்மானம் செய்தல் ஆகியன.
மெழுகின் வகைகள்
மெழுகு உருவத்தை உருவாக்க தேன்மெழுகு, குங்கிலியம்,
எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவர். தேன் மெழுகு என்பது வேட்டை மெழுகு எனப்படும்.
இது தேன் அடையிலிருந்து எடுக்கப்படுவது. குங்கிலியம் என்பது ஆச்சாமரத்தின் பால் அல்லது
பிசின் ஆகும். இக்கலவைக்கு கடலை எண்ணெயைப் பயன்படுத்துவர். மெழுகுப் படிமத்தைச் செய்வதில்
தான் சிற்பியின் கலை வண்ணம் வெளிப்படும். இதை தலைமைச் சிற்பியே உருவாக்குவர்.
மெழுகு உருவத்தில்
பூசப்படும் மண்
ஆற்றுப் படுகையில் உள்ள வண்டல் மண், பசும்
சாணம் ஆகியவற்றைக் கலந்து தயாரிப்பது. இக்கலவையைக் கலக்கும்போதும் நுட்பம் தேவை. மண்
உரு காய்ந்தபின் மெழுகை உருக்கி எடுத்துவிட்டு, உலோகத்தை உருக்கிவிட்டு ஆறும் வரை காத்திருந்து
மண்ணை அகற்றுவர். இது கனமான படிவம்.
பஞ்சலோகம்
பஞ்சலோகம் எனப்படும் ஐம்பொன் மடிமங்களுக்கு செம்பு, பித்தளை, ஈயம், வெள்ளி, தங்கம் ஆகியன
கலக்கப்படும். தங்கம் வெள்ளி குறைவாகவும் பிற உலோகம் அதிகமாகவும் இருக்கும். உள்ளீடற்ற
வார்ப்புப் படிமம் செய்யும் முறை கனமான படிமம் செய்யும் முறையிலிருந்து வேறுபட்டது.
கடு சர்க்கரைப்
படிமம்
வைணவக் கோவில்களில் நின்று அமர்ந்து கிடந்த
கோலத்தில் உள்ள கருவறைப் படிமங்கள் சுதை அல்லது கடுசர்க்கதையால் ஆனதாக இருக்கும். இப்படிமங்கள்
மிகவும் நேர்த்தியாகவும், அழகுடனும் கூடியவை. இத்தகு படிமங்களுக்கு அபிஷேகம் கிடையாது.
எண்ணெய் காப்பு செய்வர்.
சிற்பக் கலைஞர்கள் கடுசர்க்கையைக் கண்ட சர்க்கரை
என்றும் கூறுவர். கடினமான சுக்கான் கற்களைப் பொடித்துக் கிடைக்கும், சிறு மணலையும்,
மண்ணையும் பல வகையான மூலிகைகளின் சாற்றையும் கலந்து தயாரிக்கப்படும் சாந்து கடுசர்க்கரை
எனப்படும். கடு சர்க்கரைச் சாந்தை மரச்சட்டத்தில் பூசி உருவாக்கப்படும் படிமம் கடுசர்க்கரை
படிமம் எனப்படும். இதைத் தயாரிப்பதற்கும் பல கட்டங்கள் உண்டு.
படிமத்தின் அளவை தீர்மானித்த பின் மரச் சூலக்கூடு
தயாரிப்பது முதல் கட்டம். இந்தக் கூட்டின் மேல் கயிறு அல்லது தாமரக் கம்பிக் கட்டுதல்,
அதன் மேல் எட்டுவிதக் கலவைக் குழம்பை பூசுதல் அதன் பின் கலவை சாந்தைப் பூசி படிமத்தை
உருவாக்குதல் வர்ணம் பூசுதல் என ஆறு கட்டங்களாக கடுசர்க்கரை படிமம் தயாரிக்கப்படும்.
பார்வை நூல்
1.
தமிழர் கலையும்
பண்பாடும் - அ.கா.பெருமாள், பாவை பப்ளிகேஷன்ஸ்,
இராயப்பேட்டை, சென்னை 600 014.
Comments
Post a Comment