‘இளைய சமுதாயம் இனிமையாக வாழ’
”உண்மையான நாகரிகத்தின் சின்னம் விஞ்ஞான வளர்ச்சியிலோ, மக்களின்
நடை உடை பாவனைகளிளோ அன்று. மக்களின் ஒழுக்கமும் நேர்மையுமே ஒரு தேசத்தின் நாகரிகத்தை
எடுத்துக் காட்டக் கூடிய சின்னங்களாகும்” – எமர்ஸன்
நம் நாட்டின் முன்னேற்றம் என்பது இன்றைய இளைய தலைமுறையினரின் கையில் உள்ளது. நாகரிகம், ஸ்டைல் என்ற பெயரில்
தன்னுடைய நடை, உடை, பாவனைகள், தலை முடியை விதவிதமாக வெட்டிக் கொள்தல் என்று தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தங்களுக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு பெரியோர்களை மதித்து வாழவேண்டும்.
நம் முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து தாத்தா, பாட்டி
என்று அனைத்து உறவுகளுடனும் பிள்ளைகளைக் கண்டிப்புடனும்,
அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளையும் எடுத்துக் கூறி வளர்ப்பார்கள். தற்பொழுது அந்த
நிலை குறைந்து விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் குறைந்து விட்டது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவச் சமுதாயம் சிறப்புடனும்,
நல் சிந்தனையோடும், நற்குணங்களுடனும் வாழவேண்டும்.
இளையோர்கள் வாழ்வில் பின்பற்ற
வேண்டிய பண்புகள்
· இளமையில் கல்வி
· விடா
முயற்சி
·
நல்ல
பண்பு
·
பெரியோரை
மதித்தல்
·
மன
உறுதி
·
பெருந்தன்மை
·
செல்வத்தில்
தியாகம்
·
பதவியில்
பொறுமை
·
நன்னடத்தை
·
பணிவு
·
தாய்
தந்தையர்க்கு ஊன்று கோலாய் இருத்தல்
·
நன்னெறியுடன்
வாழ்தல்
·
புறங்கூறாது
இருத்தல்
·
மேன்மக்களை
மதித்தல்
·
சத்தியம்
·
புலனடக்கம்
·
சோம்பலின்மை
·
நாவடக்கம்
·
பிறரை
இகழாதப் பண்பு
·
எளியோர்க்கு
ஈதல்
· நல்லோருடைய நட்பு
Comments
Post a Comment