இலக்கியங்களில் - ‘இலை’
இலைகளில்
உருவம், மென்மை, ஓரம், நிறம் முதலிய நிலையைச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.
புன்னை
புன்னை மரத்தின் இலை அழகாகவும், மென்மையாகவும்
இருப்பதை,
”பொரிப்பூம்
புன்கி னெழிற்றகை யொன்முறி” (நற் ,9)
நற்றிணை பாடல்வழி அறியலாம். புன்கை ‘Pongamia Glabra’ என்று
ஆங்கிலத்தில் அழைப்பர். ’Glabra’ என்பதற்குப் பொருள் வழவழப்பான தன்மை என்பதாகும். ‘Pongamia’
எனும் சொல்லே தமிழ்ச் சொல் ‘புன்கனின்’ மறு உருவமாகும்.
புன்னையின்
இலை கரும்பச்சை நிறமுடன் பளபளப்புடன் பார்ப்பதற்கு அழகுடன் காணப்படும். இதை இலத்தீனில்
‘Calophyllum Inophyllum’ என்று அழைப்பர். ‘Calophyllum’ என்பதற்கு அழகிய இலை என்று
பொருள். இதன் அழகை உணர்ந்து நற்றிணையில்,
”நீலத்
தன்ன பாசிலை யகந்தொறும்” (நற், 249)
”மின்னிலைப்
பொலிந்த விளங்கிண ரவிழ்பொற்
.... ............ ....... ......... ...............
புன்னையங் கானல்” (அகம்,80)
”பசைபடு பச்சை
நெய்தோய்த் தன்ன” (அகம்,244)
மேற்சொன்ன வரிகளில் புன்னை இலையின் நிறம் பளப்பளப்பான தன்மை
முதலியன கூறப்படுகின்றன.
நீர் வாழ் செடிகளின் இலை
நீரில் வாழும்
செடிகளின் இலைகள் அகலமாகவும், மேல் தோல் பூசப்பட்டாற் போன்றும் தோன்றுகின்றன. நீர்ப்போக்கு
மிகுந்திருப்பதற்காக (Transpiration) இலைகள் அகலமாக இருக்க வேண்டும்.
நீர்ப் போக்கு
நடக்கும் இலைத்துளைகள் நீரால் மூடப்படாதிருப்பதற்காக, இலையின் மேல் நீர் நிற்காதவாறு,
மெழுகு பூசப்பட்டாற் போன்றதொரு தோலால் மூடப்பட்டிருக்கின்றன. இத்தோலை ‘Waxy
Cuticle’ என்று நற்றிணையில்,
”முயப்பிடிச்
செவியி னன்ன பாசடை” (நற், 230)
”களிற்றுச்
செவியன்ன பாசடை மருங்கிற்
.........
.................. .............
பூத்த தாமரை புள்ளிமிழ் பழனத்து” (அகம்,176)
”விளக்கி னன்ன
சுடர்விடு தாமரைக்
களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க” (நற், 310)
என்ற பாடல்களில் ஆம்பல், தாமரை இவற்றின் இலைகள் வருணிக்கப்படுகின்றன.
யானைக் காதின் அகலம், கருநிறம், வழவழப்பான பரப்பு, கனம் ஆகியவை தாமரை இலையின் அகலம்,
கருபச்சை நிறம், வழவழப்பான பரப்பு இவைகளுடன் ஒத்து வருவது கவனிக்கத் தக்கது.
ஆம்பல் போன்ற
நீர்வாழ் செடிகளுக்கு வெப்பம் மிகவும் வேண்டும். ஆகையால் இச்செடிகளுக்கு இலைகளின் அடிப்பாகம்
கூடுதல் வெப்பத்தைக் கவர மேற்புறத்தை விட மிகவும் கறுப்பாக இருக்கும் என்று குறுந்தொகைப்
பாடலின் வழி அறியலாம்.
”நெடுநீ
ராம்ப லடைபுறத் தன்ன
கோடுமென் சிறைய
கூருகிர்ப் பறவை” (குறுந், 352)
ஆம்பல் இலையின்
அடிப்பகுதி வௌவாலின் இறக்கை போல் இருக்கின்றது. ஆம்பல் இலையின் அடிப்புறத்தில் காணப்படும்
நரம்புகள், வௌவாலின் இறக்கையில் காணப்படும் கருமை, நரம்புகள் ஆகியவற்றிற்கு உவமைப்படுத்தப்படுகிறது.
தாழை
தாழஞ் செடியின்
இலைகள் வாள்போன்ற உருவம் உடையன. ஓரத்தில் முட்களையுடையன.
”சுறவுக்
கோட் டன்ன முள்ளிலைத் தாழை” (நற், 19)
”அரவு வாள்
வாய முள்ளிலைத் தாழை” (நற், 235)
”சுறவு மருப்பன்ன
முட்டோ டொசிய” (நற், 131)
என்று நற்றிணையில் தாழையின் வாள் போன்ற இலையின் உருவத்தையும்,
அதன் இரு ஓரங்களிலும் முட்பற்கள் இருப்பதையும் சேர்த்துத் தாழை மடலைச் சுறாமீனின் கொம்புடன்
உவமித்துக் கூறப்பட்டுள்ளது.
வேப்பிலை
அரம்போன்ற
ஓரமுடையது வேப்பிலை. இதனை இலக்கியங்களில்,
”அரவாய்
வேம்பி னங்குழைத் தெரியலும்” (பொருநராற்றுப்படை, 144)
”அரவாய்க்
கடிப்பகை யையவிக் கடிப்பகை” (மணிமேகலை, 7,33)
”அயவெள் ளாம்ப
லம்பகை நெறித்தழை” (குறுந், 293)
“கழனி யாம்பன்
முழுநெறி பகைத்தழை” (அகம், 156)
”அம்பகை நெறித்தழை
யணிபெறத் தைஇ” (நற், 96)
என்று இதனைப் பகைநெறி தழை என்னும் தொடர் குறிக்கின்றது.
செடிகள்
நிழலிலே இருந்தால் இலைகளிலுள்ள இலைப்பச்சை (Chlorophyll) அழிந்து போய் இலை வெண்மை அடையும்.
இதைத் தாவர நூலில் ‘Etiolation’ என்பர். இதனைக் கலித்தொகையில்,
”நீணிழற்
றளிர்போ னிறனூழ்த்த லறிவேனும்” (கலித், 20)
இடம்பெற்றுள்ளது.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியத்தில்
செடிகொடி விளக்கம் – திரு.பி.எல்.சாமி, கழக வெளியீடு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.
Comments
Post a Comment