புறநானூறு காட்டும்
பழந்தமிழர் தொழில்நுட்பம்
நாட்டின் வளமைக்கும், வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்வது அடிப்படையாக
அமைகிறது. மனிதனின் அடிப்படைத்
தேவைகள் விரிவடையும் ஒவ்வொரு காலத்திலும் நிறைவு செய்யப் புதிய வழிமுறைகளைக் கையாளவும், புதுப்புதுக்
கருவிகளைக் கண்டுபிடிக்கவும் முற்படுகிறான். அத்தேவைகளின் நிரந்தரத் தன்மைக்கும் வேலைப் பளுக்குறைப்பு
மற்றும் கால மேலாண்மைக்கும் புதிய நுட்பங்களைக் கையாள வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது.
புறநானூறு
காட்டும் பழந்தமிழ் தொழில் நுட்பமானது அடிப்படைத் தேவைகளின் தன்னிறைவிற்குத் துணையாக,
·
வேளாண் தொழில்
நுட்பம்
·
நெசவுத் தொழில்
நுட்பம்
·
கட்டுமானத்
தொழில் நுட்பம்
·
உலோகத் தொழில்
நுட்பம்
·
எந்திரத் தொழில்
நுட்பம்
என்று பெரும் பகுப்புகளையும்
அவற்றுள் பல உட்பகுப்புக்களையும் கொண்டு தொழில் புரிந்தமை விளக்குகின்றது.
வேளாண் தொழில்
நுட்பம் (Agriculture)
நாட்டின்
இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களுள் முதன்மையானது வேளாண்
தொழிலாகும்.
”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” (குறள்.1033)
என்ற குறள் உழவுத் தொழிலால், உணவைப் பெற்று
உண்டு வாழ்பவர் உயிர்வாழ்கின்றவராவர். அவரல்லாத மற்றவர்களுக்கெல்லாம் பிறரை வணங்கி உண்டு அவர் பின்னே
செல்கின்றனர்.
சமுதாய
வறுமை நிலையினைப் போக்கவும் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றுள்
முதன்மையானதாகிய உணவின் தேவையை நிறைவு செய்யவும் வேளாண் தொழில் இன்றியமையாததாகிறது.”வேளாண் தொழிலுக்கு
அடிப்படை ஆதாரமாக விளங்குவது மழை நீராகும். இம்மழை நீரினைச் சேகரிக்க குளங்கள், அணைகள், ஏரிகள் போன்ற
நீர் நிலைகளை ஏற்படுத்துதல், சேமிப்பு நீரினை முறையாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மைக்கு
வழிவகுத்தல், தரிசு நிலங்களைப் பண்படுத்துதல், சுழற்சி முறையில்
பலவித பயிர்களைப் பயிரிடுதல், மானாவாரி பயிரிடு முறையைக் கையாளுதல், நிலத்தை உழுதல்
தொடங்கி அறுவடை வரையிலான வேளாண் செயல்பாடுகளில் பலவித கருவிகளைப் பயன்படுத்துதல்” போன்ற பல்வகை
நிலைகளிலும் பழந்தமிழர் தொழில் நுட்பத்தினைக் கையாண்டுள்ளனர்.
ஒரு
நாட்டின் வளமான நிலைக்கும் சிறந்த ஆட்சி முறைக்கும் வீரர்கள் போர்க்காலத்தில் வெற்றியை
ஈட்டி வருவதற்கும் அடிப்படையாக அமைவது உழுது விளைவித்த நெல்லின் பயனே. ஆதலால் ஏரைக்
காப்பவரின் குடியைக் காப்பதே நல்லரசின் கடமையாகும் என்பதை மன்னர்க்கு உணர்த்தினர். இதனை வள்ளுவர்,
”சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” (குறள்.1031)
என்கிறார். நிலத்தை உழும்
கலப்பையே அல்லாது வேறு படைக்கலத்தை அறியமாட்டார்கள் என்பதை,
”திருவில் அல்லது கொலைவில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்” (புறம்.20:10-11)
குளிர்ந்த மழைநீர் கொள்ளை
விதைக்க உழப்பட்ட நிலத்தில் வாய்க்காலாக ஓடும் இதனை, ”கொள்ளுழு வியன் புலத்து” எனக் கொள் விதைத்ததைக் கூறுகின்றது. நீர் இல்லாத
காலத்தும் குளத்தில் இட்ட விதை கரும்பு போலத் தழைக்கும். இதற்குக் காரணம் மண்ணில் உள்ள ஈரப்பசைதான் என்பதை புறம் 137 ஆம் பாடல் வழி
அறியமுடிகிறது.
”ஏரிபுனக் குறுவன் குறையில்அன்ன
கரிபுற விளகின் ஈமஒள் அழல்” (புறம்.231:1-2)
என்ற வரியில் மரங்களைச்
சுட்டவிடத்தே திணையை விதைத்ததைக் கூறுகின்றன.
போர்க்களத்தில்
குருதி தோய்ந்து ஈரமாயுள்ள செருக்களத்தே தேர்கள் ஏர்களாகவும் விடியலில் புகுந்து, நின் நீண்ட
வேல் முதலிய படைக்கலங்களை நீட்டிப் பகைவரின் கலங்கள் கீழ் மேலாக ஆக்கப்பட்ட பசுமையான
படைச்சாலில் பிடித்து வீசும் வெண்மையான வேலும் கணையாகும் ஆன படைகளைத் தூளாகச் சிதைத்து
எறிதலால் அவை விதைபோன்று நிலத்தே புதையுமாறு செய்து பெருந்தலைகளை வெட்டி வீழ்த்தி, மூளை நிணம்
என்ற இவை குழம்பிய கண்டார்க்கு அச்சத்தைத் தருகின்ற பிணங்கள் என்ற பயிரிடையே பேய் மகளிர்
சூழும் பிணங்கள் குவிக்கப்பட்டது என்ற போர்க்கள நிகழ்ச்சியை (புறம்.269) வேளாண்மையோடு
பொருத்திக் கூறியுள்ளார்.
குடபுலவியனார்
(புறம்.18) என்னும் புலவர்
நீர்நிலையைப் பெருக்கவும் அதன் மூலம் உணவின் ஆக்க வேலைகளைச் செய்ய வேண்டுமென பாண்டியன்
நெடுஞ்செழியனுக்குக் கூறுகின்றார். நீர் இன்றியமையாத ஒன்று நீர் இல்லாமல் வாழ முடியாது. உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே என்னும் பொன்மொழிக்கேற்ப அமைந்துள்ளன. இவ்வுணவால்தான் மக்கள் வாழ்கின்றனர். நிலத்தையும்
நீரையும் ஒன்றுபடுத்தியவர்களை உயிரையும் உடம்பையும் படைத்தவர்கள் என்பர்.
மானாவாரிப்
பயிர்
நெல்
முதலியவற்றை நிலத்தில் விளைத்து மழை எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டு
இருந்தனர். அகன்ற நிலம்
பயன்படாது எனவே நிலம் குழிந்த இடத்தில் நீர்நிலை பெருகும்படி செய்ய வேண்டும் (புறம் 18) என்று கூறுகின்றார்.
மதகின் கதவு
நீர்
மெலிதாகப் போக ‘வாய்த்தலைகள்’ அமைத்தனர். நீர்ப்பாசனத்திற்கு
வேண்டிய அளவு நீரைப் போக விடவும் நிறுத்தவும் ஒரு கதவு உதவியாக அமைந்துள்ளது. இதனை, ”புனலம் புதவின்
மிழலையொடு’ என்ற வரி சுட்டுகிறது. புன்செய் நிலத்தில்
நெல் விளையாது என்பதை, ”புன்புலச் சீறூர், நெல் விளையாதே” என்ற இவ்வரி
உணர்த்துகின்றது.
ஊடுபயிர்
நெல்
வயலிலே கரும்பினை நட்டனர். இது ஊடுபயிர் முறையைச் சார்ந்து கரும்பிலிருந்து சாறு எடுக்கப்பட்டது. இவ்வகை தலைமைச்
சிறப்பு வாய்ந்த வேளாண் தொழிலின் இன்றியமையாமையை மக்களும் உணர்ந்திருந்தனர். இதனால் அத்தொழிலின்
பல தொழில் நுட்பங்களைக் கையாண்டு வேளாண் உற்பத்திப் பெருக்கத்திறகு வழிவகுத்தனர்.
கருவிகள்
நிலத்தினை
ஆழ உழவும் களைகளை எடுக்கவும், தானியங்களைப் பிரித்தெடுக்கவும் பலவிதக் கைக் கருவிகளையும்
எந்திரங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
தளம்பு
கார்க்காலத்தில்
பெய்த மழையின் ஈரம் உலர்வதற்குள் நிலத்தைப் பலமுறை உழுவர். நன்செய் நிலமாயின் அந்நிலத்தை உழும்போது ஏற்படும் கட்டிகளை
உடைக்க தளம்பு என்ற ஒருவித கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை, ”மலங்கமிளிர் செறுவிற் றளம் படிற் திட்ட பழன வாளை” (புறம், 61:3-4) என்ற புறநானூற்று
அடிகள் காட்டுகின்றன.
கலப்பை
நிலத்தைப்
பண்படுத்திப் பலமுறை உழுது விதைத்த பயிரை ஒழுங்கு செய்வதற்கும் களையெடுப்பதால் பல சினைகளை
உடைய ஒருவித கலப்பையைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,
”பூமி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி
யாடிய பல்கிளைச் செல்விக்
களைகளால் கழாலிற் நோடொலிபு நந்தி” (புறம்,120:2-3)
என்ற புறநானூற்று அடிகள்
சுட்டுகின்றன. விளைந்த கரும்பினை
வெட்டி எடுத்த அதிலிருந்து சாறினைப் பிரித்தெடுக்கக் கரும்புபிழி எந்திரம் பயன்படுத்தப்பட்டதை,
”கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல
திருஞ்சுல் வாளை பிறழும்” (புறம்,
322:7-8)
என்ற அடிகள் சுட்டுகின்றன.
நெசவுத் தொழில்
நுட்பம்(Textile)
இயற்கை
நிலையிலிருக்கும் ஒன்றைத் தேவைக்கேற்ப மாற்றி அமைத்து, அவற்றைப் பயன்படுத்த முனையும் நிலையில் மனிதனின் தொழில் நுட்ப
அறிவு வெளிப்படத் தொடங்கியது. ஆள்பாதி, ஆடைபாதி மற்றும் ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதற்கேற்ப
தழை, மரப்பட்டை போன்றவற்றை
உடையாகப் பயன்படுத்தினர். அதற்கு அடுத்த நிலையில் விலங்குகளின் தோலினையும் பின்பு பருத்தி, பட்டு போன்றவற்றையும்
பயன்படுத்தத் தொடங்கிய நிலையிலேயே அவனின் தொழில்நுட்ப அறிவு மலரத் தொடங்கியது.
”இவற்றில் மூலப் பொருள்களை உற்பத்தி செய்து (பட்டுக்கூடு, பருத்தி அவற்றிலிருந்து இரண்டாம் நிலை உற்பத்திப் பொருளாகிய
நூல், பட்டு இழையை
உருவாக்கி மூன்றாம் நிலை உற்பத்திப் பொருளாகிய துணியை நெய்து பின்னர் பயன்பாட்டுக்கு
ஏற்ப பல வடிவமைப்புடனும் கூடிய ஆடைகளை நெய்யத் தொடங்கிய நிலையிலேயே தொழில் நுட்பத்தின்
உயர்நிலையாக முன்னிறுத்தப்படுகிறது” என்கிறார் ஆ.மணவழகன் (பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, ப.4) பழந்தமிழர்
உடையின் தேவை பொருளாதாரத்தை நிறைவு செய்து கொள்ளும் வகையில் நெசவுத் தொழிலைச் சிறப்பாகச்
செய்தனர். நெசவுத் தொழிலில்
ஈடுபட்ட பெண்களைப் புறநானூறு பருத்திப் பெண்டிர் எனக் குறிப்பிடுகிறது. இதனை, ”பருத்திப் பெண்டின்
பனுவலன்ன” என்ற பாடலடிகள்
உறுதி செய்கின்றன.
நெசவுத்
தொழிலுக்கு மூலப் பொருளான பருத்திப் பஞ்சைப் பெறுவதற்கு பருத்திச் செடியை உள்நாட்டிலேயே
விளைவித்த வேளாண்மை நுட்பத்தைக் காட்டுகிறது. ஊரைச் சுற்றிலும் பருத்திவேலி மிகுதியாகப் பயிரிட்டதை ”பருத்தி வேலிச்
சீறூர்” என்பதலிருந்து
அறியமுடிகின்றது. பருத்திச் செடியிலிருந்து பெறப்பட்ட பஞ்சை உலர்த்திப் பயன்படுத்தி
இல்லத்தின் முன்றிலில் பரப்பி வைத்திருந்த காட்சியை, ”பஞ்சி முன்றிற் சிற்றலாங்க” என்ற புறநானூறு அடி சுட்டுகிறது.
தன்னை
நாடி வரும் வறியவர்க்கு பாணார்க்கும் அவர்களின் கிழிசல் ஆடைகளைக் களைந்து புத்தாடைகளை
உடுக்கச் செய்யும் பழந்தமிழ் அரசர்களின் செயல்களைப் புறநானூறு வெளிப்படுத்துகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட
ஆடைகள் பலவகை நுண்வேலைப்பாடுகளைக் கொண்டவையாகவும் பாம்பின் தோல் போன்ற தன்மையுடையனவும்
பூ வேலைப்பாடுகளுடன் கூடியனவுமாகிய தொழில் நுட்பம் கொண்ட ஆடைகளை வறியவர்க்குக் கொடுத்து
உடுக்கச் செய்த சிறப்பினை,
”பாம்புரி யன்ன வடிவின் காம்பின்
கழைபடு சொலியினிழையணி வாரா
ஒண்பூங் கலிங்க முடீஇ” (புறம்.383:9-11)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள்
காட்டுகின்றன. ”நீலக்
கச்சைப் பூவாராடை”(புறம்.274:1) பூத்தொழில்
நிரம்பிய ஆடையுடன் நீலக்கச்சையை இறுகக் கட்டியிருந்தனர். ”கோட்டம் கண்ணியும் கொடுந்திரை
ஆடையும்” மெல்லிய ஆடையை (Transperment) அணிந்தனர். பழந்தமிழர்
நெசவுத் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை இவ்வரிகள் உறுதிச் செய்கின்றன.
கட்டுமானத்
தொழில் நுட்பம்
(Construction)
உணவு, உடைக்கு அடுத்த
இடத்தினைப் பெறுவது இருப்பிடத் தேவையாகும்.
இயற்கையாக அமையப் பெற்ற மலைக் குகைகள், மரப்பொந்துகளில் மனிதன் ஒளிந்து வாழ்ந்த நிலையிலிருந்து
நாகரிகம் அடைந்த மனிதன் செயற்கையாக இருப்பிட வசதியினை ஏற்படுத்திக் கொண்டான்.
பழந்தமிழர் குடியிருப்பினைத் திணை சார்ந்த
குடியிருப்புகள், சிற்றூர் குடியிருப்புகள், பேரூர் (அ) நகரக் குடியிருப்புகள் என வகைப்படுத்திக்
காண்பது பொருத்தமாகிறது. இவ்வகைப்பாடு ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தன்மையிலான குடியிருப்புகளைக்
காணமுடிகிறது.
தினை சார்ந்த குடியிருப்புகள் என்பதில்,
திட்டமிட்ட கட்டுமான அமைப்பு இல்லாமல் வாழும் நிலப்பகுதிகளில் கிடைக்கும் அல்லது உருவாக்கும்
பொருள்களைக் கொண்டு அதாவது கரும்புத் தோகை வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு இருப்பிட வசதியை
ஏற்படுத்திக் கொள்வர் என்பதற்கு,
”அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த
ஆய்
கரும்பின் கொடிக் கூரை” (புறம்,22:14-15)
என்ற பாடல்வரிகள்
சான்றாகின்றன.
சிற்றூர் குடியிருப்புகள் மற்றும் நகரக்
குடியிருப்புகள் என்பதில் திட்டமிட்ட தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வீடுகளும்,
அரண்களும், மதில்களும் காணப்படுகின்றன. ”தூண்களுடன் கூடிய சிற்றில்களைக் கட்டுதல்,
பட்டங்களின் உறுதிபாட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேவையான மாடங்களை உருவாக்குதல்,
பாதுகாப்புடன் கூடிய போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட அரண்களை அமைத்தல், வானுயர்ந்த மதில்களை
ஏற்படுத்துதல் இவையல்லாமல் அணைகள் போன்ற நீர்நிலைகள் கட்டுமானங்களில் தொழில் நுட்பத்தினைப்
பயன்படுத்துதல்” போன்ற பல தொழில்நுட்பத்தினைப் புறநானூறு கூறுகின்றது (ஆ.மணவழகன்,
பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை,ப.7)
சிறிய இல்லமாயினும் அதன் உறுதிப்பாட்டிற்கு
வேலைப்பாடமைந்த தூண்களை நிறுவியதை, ”சிற்றில் நற்றூண் பற்றி” என்ற அடி சுட்டுகிறது.
நற்றூண் என்பதால் நல்ல வேலைப்பாடமைந்த தூண் என்பது பெறப்படுகிறது. நகரில் கட்டடங்கள்
மிக உயரமானதாகவும் மலைகளின் கூட்டத்தைப் போன்று நெருக்கமானதாகவும் அமைக்கப்பட்டிருந்தன
என்பதை, ”மலைக்கணத்தன்ன மாடஞ்சிலம்ப” என்ற அடியும், உயர்ந்த மணியை விட அதிகமாக
ஒளிவீசும் மாடத்தினை, ”கதிர்விடு மணியிற் கண்பொரு மாடம்” என்ற பாடலடியும் காட்டுகின்றன.
நெடிய உயரமான சுவர்களைக் கொண்ட இல்லங்களைக் கட்டும் தொழில்நுட்பம் இருந்தது. இதனை,
”நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து” என்ற அடி சுட்டுகிறது.
கோட்டைகளை உருவாக்குதல்
செம்பை உருக்கி ஊற்றி வலுவான கோட்டைகளை உருவாக்கும்
செயல்திறனை,
”கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புறழ்
புரிசைச் செம்மல் மூதூர்” (புறம்,37:9-10)
என்ற வரிகளில்
அறிய முடிகின்றது. அதே போல,
”குரூஉக் கெடிற்ற குண்டகழி
கூனுட்கும்
வடிநீண்மதில்” (புறம்,18:10-11)
என்பதில் வானம்
வரையில் நீண்டு உயர்ந்த கோட்டை மதிலைக் கட்டும் பழந்தமிழர் கட்டுமானத் தொழில் நுட்பம்
வெளிப்படுகிறது. பாதாளத்தை எட்டுவது போன்றுள்ள அகழியையும் வானை முட்டும் உயரமான மதிலையும்
ஏற்படுத்தியிருந்ததை,
”நிலவறை யிறந்த குண்டுகண் ணகழி
கூன்
நோய் வன்ன புரிசை” (புறம்,21:2-3)
என்ற புறநானூற்று
அடிகள் சுட்டுகின்றது.
”..... .... பருந்துயிர்த்
திடைமதிற்
சேக்கும் புரிசைப்
படைமயங் காரிடை நெடுநலூரே” (புறம்,343:15-17)
என்பதில் பருந்துகள்
தங்கி இருக்கும் உயர்ந்த மதிலை உடைய படைக் கருவிகள் பொருத்தப்பட்ட அரண்கள் இருந்தன.
உயர்ந்த மதில்கள் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களையும் வெளியில் அறியாவண்ணம் பொருத்தப்பட்ட
படைக்கருவிகளையும், அவற்றை இயக்கும் எந்திரங்களையும் கொண்டதாகும்.
கட்டுமான தொழில்நுட்பத்தில் நீர்நிலை கட்டுமானங்களும்
புறநானூற்றில் காணப்படுகின்றன.
”அறையும் பொறையு மணந்ததனைய
எண்ணாட்
டிங்க னைய கொடுங்கரை” (புறம்,118:1-2)
என்பதில் பாறைகளையும்
சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட கட்டிடங்களையும், குளக்கரைகளையும் கட்டினர்.
”வேட்டச் சிறாஅர் சேர்புலம் படராது
படமடைக்
கொண்ட குறுந்தாளுடும்பின்” (புறம்,326)
என்ற வரிகளில்
அணைக் கட்டும் பகுதியும் அங்கு சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது.
அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்த நீர், கட்டப்பட்ட கால்வாய்களின்
வழியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காக
திறந்துவிட்டதை, ”இதுமென வொலிக்கும் புனலம்பதவில்” என்ற வரி உணர்த்துகிறது.
இன்றும் அணைகளில் நீர் நிரம்பியதும் பாசனத்திற்கு
நீர்த்திறந்துவிடும் முறை உள்ளது இவண் கருதத்தக்கது. மண்ணை அரைத்து அரண் அமைத்திருந்தமையும்
அரணில் கொடி பறக்கவிடப்பட்டதையும், ”அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்” என்ற புறநானூற்று
அடியும் சுட்டுகின்றன.
உலோகத் தொழில்
நுட்பம் (Metal Technology)
பழந்தமிழர் இரும்பை உருக்கிப் படைக்கலன்கள்,
வேளாண் கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை செய்யும் திறன் பெற்றிருந்தனர்.
இரும்பு உலைகள் ஆங்காங்கே இருந்த செய்திகள் அதிகமாக உள்ளன. பெண் யானை மூச்சுவிட்டது
போல கைக் கோப்புப் பொருந்திய உரையின் வாயினை,
”பிடியியிர்ப் பன்ன கைகவ ரிரும்பின்
நோவுற ழிரும்புறங்காவல் கண்ணி” (புறம்,345:8-9)
என்று புறப்பாடல்
மூலம் அறியலாம். வன்மையான கையை உடைய கொல்லன் இரும்பைக் காய்ச்சி வடிவமைத்து அதனை நீரில்
வைத்து வன்மையாக்கிய காட்சி புறம் 21 ஆம் பாடல்
சுட்டுகிறது.
வலிய கையினால் விசையுடன் அடித்த சம்மட்டி
அடியை ஏற்று மாறுபடும் உலைக் களத்தில் உள்ள அடைக்கல் குறிக்கப்படுகிறது. புறம்170 ஆம்
பாடலில்,
”கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை
நெடுவேல் வடித்திசி னெனவே” (புறம்,180:12-13)
என்ற அடிகளில்
கொல்லனைப் போர்க்கருவிகளுள் ஒன்றான வேலினை வடிக்கச் சொல்லுதல் கூறப்படுகிறது. இரும்பு
உருக்கும் உலைக்கலனும் அத்தொழிலில் ஈடுபட்டவனைக் கருங்கைக் கொல்லன் என்று அழைத்தனர்
என்பதை,
”கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு
ணீரினு மீட்டற் கரிதென்” (புறம்,21:7-8)
என்ற வரிகளால்
அறிகிறோம்.
எந்திரவியல்
நுட்பம் (Mechanical)
”ஆழமான அகழிகளையும், நீண்ட மதில்களையும்
வலிமையான கோட்டைகளையும் வடிவமைத்ததோடு, கோட்டைகளில் தானே எய்தக் கூடியதும், தொடர்ச்சியாக
தாக்கவல்ல ஆயுதங்களை வெளியிடக் கூடியதுமான பலவித எந்திரப் பொறிகளைப் பொருத்தினர்”.
(ஆ.மணவழகன், பண்டைத் தமிழரின் தொலைநோக்குப்
பார்வை.ப.12) இத்தன்மை வாய்ந்த அரண்கள் குன்றுகள் போல அருகருகே அமைக்கப்பட்டிருந்ததை,
”தமரெனின் யாவரும் புகுப வமரெனிற்
றிங்களு
நுழையா வெந்திரப் படுபுழைக்
கணமாறு நீட்ட நணிநணியிருந்த
குறும்பல் குறுபில்” (புறம், 177:4-7)
என்ற அடிகள்
கூறுகின்றன. அம்புகள் பொருத்தப்பட்ட காவல் மிக்க அரணை, ”அமபுதுஞ்சுஞ் கடியரண்”
என்ற அடி எடுத்துரைக்கிறது.
ஓட்டுநர் தேவையில்லாத வானவூர்தியை சிந்தித்துப்
பார்த்த பழந்தமிழர் தொழில் நுட்ப அறிவினை, ”வலவ னேவா வானவூர்தி” (புறம்,27:7-8)
என்ற புறநானூற்றில் பலவிதமான தொழில் நுட்பங்கள் காணப்படுகின்றன.
பார்வை நூல்கள்
1.
முனைவர் க.முருகேசன்
– சங்க இலக்கியத் தேனமுதம், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை -600 004, நவம்பர்
2008.
Comments
Post a Comment