மணமற்ற மலர்
நல் திறமை கொண்டு பல நூல்களைக் கற்றறிந்தும் அடுத்தவர்களுக்குக் கற்றுத்தராமல்
இருக்கும் மக்களைப்
”இணரூழ்த்தும் நாறா மலர்அனையர் கற்ற
துணர
விரித்துரையா தார்”
பற்றி இவ்வாறு
கூறுகின்றார். கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணமில்லாமல் இருந்தால்
பயனழிதல் போலத் தாம் கற்றக் கல்வியை அடுத்தவர்களுக்குப் பயன்படுத்தாதவர்கள் பயனற்றவர்
ஆவார்கள் என்பது இக்குறளின் பொருளாகும். ஒரு மலரைக் காணும் போது அதன் அழகையும், இதழ்களையும்,
நிறத்தையும், கண்டு ஆனந்தமடைகின்றோம். ஆயினும் ஒரு மலரின் நலம் அதன் மணமேயாகும். மணமற்ற
மலர் மாண்புடையதாகக் கொள்ளப்பட மாட்டாது. அதுபோல், பல நூல்களையும் கற்றுணர்ந்த நல்லாரைக்
காண்பது நன்றேயாகும். கல்வி அழகைத் தம்மிடத்தில் கொண்டு விளங்குதலால் அவரைக் காண்பது
மனதிற்குப் பெரிதும் மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் தாம் கற்ற கல்வியைப் பிறருக்கு எடுத்து
சொல்ல இயலாத விடத்து, அவர் கல்வி மணமற்ற மலர் போல் பயனற்றதாகும். இக்கருத்தைப் பிற்காலத்தில்
புலவர் பெருமக்கள் கல்வியோடு சொல்வன்மையும் அமைந்திருப்பது பொன்மலர் மணமும் உடையது
போலாகும் என்கிறார்.
பார்வை நூல்
1.
திருவள்ளுவர்
நூல்நயம் – ரா.பி.சேதுப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், லிமிடெட், சென்னை -18.
Comments
Post a Comment