‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’
ஆறுகளில் வற்றாத ஜீவ நதிகளும் உண்டு. கோடையில்
மிகுந்த வெப்பத்தால் நீர் வரண்டு மணல் திட்டுக்களாக காணப்பெறும் ஆறுகளும் உண்டு.
மண் திட்டு – அதாவது குதிர் என்பதற்கு குன்று,
திடல் என்பது பொருள். இப்போது மணல் குன்றானது மழை பொய்த்த காலங்களிலோ, கோடையிலோ வரண்டிருக்கும்
போது சில ஆறுகளில் இவ்வாறு மணல் குன்றுகள் ஆங்காங்கே நீரினூடே காணக் கிடைக்கும். இப்படிப்பட்ட
மண் குதிரை மணல் குன்றை நம்பி தைரியமாக இறங்கி நடப்போமானால் திடீரென ஆற்றில் வெள்ளப்
பெருக்கெடுக்கும்போது நீர் ஆழம் நம்மைத் திணற அடிக்கும். எனவே இத்தகைய மணல் குன்றை
நம்பி இறங்கித் துன்பப்படக் கூடாது என அறிவுறுத்த இயற்கையின் யதார்த்தத்தைப் புரிய
வைத்த மொழியே ‘மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ என்பது!
பார்வை
நூல்
1. மாணவர்களுக்கான பழமொழி கட்டுரைகள் –
ஹேமா ராமானுஜம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை -14.
Comments
Post a Comment