Posts

ஓலை சுவடி – வரலாறு

  ஓலை சுவடி – வரலாறு             பழங்காலத்தில் பள்ளிகள் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக ( ஆசிரியரின் வீட்டுத் திண்ணை , சத்திரம் , சாவடி , ஊர் மன்றம் , கோவில் ) அல்லது தெருப்பள்ளிக் கூடங்களாக இருந்துள்ளன . இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவாக தான் இருப்பர் . இம்மாணவர்களில் பெரும்பாலோர் தொடக்கநிலைக் கல்வியோடு நிறுத்திவிடுவர் . ஒருசிலர் மட்டும் தனி ஆசிரியரைத் தேடிச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றுள்ளனர் . ஆசிரியர் இவர்களுக்குப் பாடங்களை வாய்மொழிப் பாடங்களாகவே சொல்லித் தருவர் . இக்கல்வி முறையே பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது . அக்காலத்தில் மனன நிலையிலேயே நூல்கள் பயிலப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளன . காட்டாக , நக்கீரரின் ‘ இறையனார் களவியல் உரை ’ பன்னிரண்டு தலைமுறைகளாக வாய்மொழி பாடமாகவே   வளர்ந்து ஏட்டு உருவம் பெற்றதை இந்நூல் வரலாறு சுட்டுகிறது .           பழங்காலத்தில் மாணவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க நெல் , அரிசி , மணல் போன்றவற்றைப் பரப்பி அவற்றில் எழுத்துக்களை...
Recent posts