பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலில் பெண்ணியச் சிந்தனைகள் ஆண் , பெண் என்ற இருவரில் உயர்வு தாழ்வு இல்லை . பெண்களுக்கு முதன்மை வழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து . பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் , தொண்டு , கடமை முதலியவற்றை நோக்கும் போது முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும் . ஆண்களின் பேற்றிற்கும் , வளத்துக்கும் , நலத்துக்கும் , பிற ஆக்கத்திற்கும் நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகம் என்பது எவரும் அறிந்த ஒன்று . ஆகையால் முதன்மை வழங்கினால் நேரும் இழுக்கென்ன ? நமது நாடும் பெண்மையும் நம் முன்னோர்கள் கல்வியைக் ‘ கலைமகள் ’ என்றும் , திருவைத் ‘ திருமகள் ’ என்றும் , ஞானத்தைப் ‘ பரை ’ என்றும் கொண்டது ஆராயத்தக்கது . நாட்டைப் பலவழிகளிலும் காட்டைக் காக்கும் காட்டுக் கன்னியை ‘ வனதேவதை ’ என்று வாழ்த்துவதும் , பல்லுயிர்களைத் தாங்கும் நாட்டைத் ‘ தாய் நாடு ’ என்றும் வாழ்த்துவதும் எண்ணவேண்டும் . மாணிக்கவாசகரு...
ஓலை சுவடி – வரலாறு பழங்காலத்தில் பள்ளிகள் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக ( ஆசிரியரின் வீட்டுத் திண்ணை , சத்திரம் , சாவடி , ஊர் மன்றம் , கோவில் ) அல்லது தெருப்பள்ளிக் கூடங்களாக இருந்துள்ளன . இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவாக தான் இருப்பர் . இம்மாணவர்களில் பெரும்பாலோர் தொடக்கநிலைக் கல்வியோடு நிறுத்திவிடுவர் . ஒருசிலர் மட்டும் தனி ஆசிரியரைத் தேடிச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றுள்ளனர் . ஆசிரியர் இவர்களுக்குப் பாடங்களை வாய்மொழிப் பாடங்களாகவே சொல்லித் தருவர் . இக்கல்வி முறையே பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது . அக்காலத்தில் மனன நிலையிலேயே நூல்கள் பயிலப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளன . காட்டாக , நக்கீரரின் ‘ இறையனார் களவியல் உரை ’ பன்னிரண்டு தலைமுறைகளாக வாய்மொழி பாடமாகவே வளர்ந்து ஏட்டு உருவம் பெற்றதை இந்நூல் வரலாறு சுட்டுகிறது . பழங்காலத்தில் மாணவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க நெல் , அரிசி , மணல் போன்றவற்றைப் பரப்பி அவற்றில் எழுத்துக்களை எ...