Skip to main content

Posts

Showing posts from January, 2026

தமிழ் நாடகங்களில் மொழிநடை

                                                                             தமிழ் நாடகங்களில் மொழிநடை ஆய்வுச் சுருக்கம்           பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடகங்கள் பெரும்பாலும் பாடலும் உரைநடையும் கலந்தே எழுதப்பெற்றுள்ளது . நாட்டார் நாடகங்கள் முதல் முதலில் தெருக்கூத்துக்கள் நடத்தப்பெற்றன . ஆகையினால் , அவை அவற்றிற்குத் தகுந்த முறையில் தாம் எழுதப்பெற்றன . பின்னர் அவை அரங்கத்தில் நடிக்கப் பெற்றன . மாற்றங்கள் அதிகமின்றிப் பாடல்களாகவே அவை அமைந்து இடையிடையே சிறிய சிறிய உரைநடைப் பகுதிக் காணப்பெறும் . மேலும் நாடகங்களில் மக்களின் வாய்மொழிகள்   வடமொழிக் கலப்பு மிக மிக அதிகமாகிக் கொண்டிருந்தது . அந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது . மேலும் பக்கத்து மாநில மொழிகளான தெலுங்கு போன்றவை...

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

    பொங்கல் திருநாள் வாழ்த்துகள்   அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் . பொங்கல் திருநாள் ·          தமிழர்களுக்கு   உழைப்பின் பயனை கொண்டாடும்   திருநாள் , ·          இயற்கைக்கும் விவசாயிக்கும் நன்றி செலுத்தும் நாள் ·          தமிழர்களின் பண்பாடு , ஒற்றுமை , மனிதநேயம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் நாள் . பொங்கல் திருநாளின் சிறப்பு பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். வயல்களில் விளைந்த நெல்லை அரிசியாக மாற்றி , புதிய பானையில் பால் பொங்கச் செய்து , சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் நாளாகும் . "பொங்கலோ பொங்கல்" என்ற மகிழ்ச்சிக் குரல் , இல்லங்களிலும் மனங்களிலும் மகிழ்ச்சியை நிரப்பும் நாள் . பொங்கலுக்குத்     தலைநாள்   போகி பண்டிகை .  போகி என்றால் இந்திரன் .  அவன் மேகங்களை இயக்கும் இறைவன் .  தமிழ்நாட்டார் பழங்காலத்தில் விளைநிலங்களை இறைவனாக வைத்து வணங்கினார்கள் .  சோழ நாட்டில் இ...

விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை (புத்தக மதிப்புரை)

  விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை) (முனைவர் வெ. இறையன்பு )             புத்தக மதிப்புரை யில் இறையன்பு அவர்கள் எழுதிய விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை என்னும் நூலை பார்ப்போம் . இந்நூலை சென்னை கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 200, விலை 200 ரூபாய்.   நூலாசிரியர் முனைவர் வெ . இறையன்பு ஐயா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிறந்தவர் . ·        வணிக மேலாண்மையியல் , ஆங்கில இலக்கியம் , தொழிலாளர் மேலாண்மையியல் , உளவியல் என்று நான்கு துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  வர்த்தக நிர்வாகம் , ஆங்கில இலக்கியம் என்ற இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்.  மேலாண்மையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் . பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றியவர் .  நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் . ·                           ...

Popular posts from this blog

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...