Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

மயில் & கான மயில்

 

மயில் & கான மயில்

      இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினம் மயில். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் பல நாடுகளிலும் இப்போது மயில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

            ஒரு காலத்தில் காடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த மயில், தற்பொழுது கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும் பச்சையும் கலந்த மிக நீண்ட கண் போன்ற சிறகுகளில் அமையப் பெற்றுக் காணப்படும். உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோகையைக் கொண்டு இருக்கும். ஆண் மயில் வால் பகுதியில் மேலாகக் காணப்படும்.

            நீண்ட வண்ண மயமான இறகுகளில் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பள்ளி பருவ மாணவர்களை இது மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இந்த அழகிய மயிலிறகு பல கருநீலம் போன்ற பல வண்ணங்களை ஒருங்கேப் பெற்ற இயற்கை ஓவியமாகக் காட்சி அளிக்கும்.

         இந்து கடவுள்கள் பலரை மயிலிறகு அலங்கரிக்கும். அதனாலும் ”தமிழ்க் கடவுள் முருகனின் வாகனமாகவும்” வரலாறுகள் உரைப்பதால் மயில் தெய்வீகத் தன்மை பொருந்தியதாகக் கருதப்படுகிறது. சீனாவில் இது அதிர்ஷ்டத்தின் சின்னமாகப் போற்றப்படுகிறது. இது நேர்மறையான எண்ண அலைகளை ஈர்க்கும் என்பது நம் முன்னோர்களின் வாக்காகும்.

            மயில்களில் ஆண் மயில் ஆடம்பரமான தோகைக்குப் பெயர் பெற்றது. ஆண் மயில் பெண் மயிலைக் கவர்வதற்குத் தன் தோகையை விரித்து ஆடி கவரும் என்றாலும், பெண் மயிலுக்குத் தோகை கிடையாது. நீண்ட தூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்களில் ஏறி அமர்ந்து கொள்ளும். தேசிய பறவையான மயில் நீண்ட காலம் வாழும். அத்தகைய மயிலை 1963 ஆம் ஆண்டு இந்திய அரசு தேசியப் பறவையாக அறிவித்தது. வேகமாக அழிந்த வரும் மயில் இனத்தை வேட்டையாடுவது மிகப்பெரிய குற்றம் என்றும் தண்டனைக்குரியது என்று 1972 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. மயிலை பாதுகாப்பது நம்முடைய கடமை என்று அரசு உரைத்தது.

            இந்திய மயில்- இது பிரகாசமான பெரிய கோழி இனப் பறவையாகும். மயில்கள் தோகைக்காகவே பிரபலம் அடைந்தன.  நீண்ட தோகையும், கொண்டையும் கொண்ட விசிறி போன்ற இறகுகளை உடையது. கண்ணுக்கு அடியில் வெள்ளை நிறப்பட்டை புருவம் போல கழுத்தும் உறுதியான மார்பும் இருக்கிறது. ஆண் மயில் பெண் மயிலை விட பெரியது. அழகானது. ஆண்மயில் வண்ண மயில் வண்ணமயமாகவும் சற்று ஒளிரும் நிறத்திலும் இருக்கும். இது பெண் மயிலைக் கவர்ந்து இழுப்பதற்காக தோகை விரித்து ஆடும். சுமார் 200 நீண்ட தோகைகள் இதன் வால் பகுதியில் இருக்கிறது.

       ஒவ்வொரு தோகையிலும் கண் வடிவங்கள் உள்ளது. இவை மிகவும் அழகாக அனைவரையும் கவரும் வகையில் காட்சி தருகிறது. ஆண் மயில் தன் துணையைக் கவர்ந்து இழுக்க, கார்மேகம் சூழ்ந்திருக்கும் சமயத்தில் தோகையை விரித்து ஆடும். மயில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

            சருகுகளை ஒன்று சேர்த்து லேசான பள்ளத்தை உண்டாக்கி, அதில் நான்கு முதல் ஆறு, முட்டை இடும். தனது உணவாக புழுப்பூச்சிகளை உட்கொள்ளும். அரசர்கள் காலத்தில் மயிலை பொன்னுக்கு சமமாக மதிப்பார்கள். சாலமோன் மன்னனுக்கு இந்திய மன்னர்கள் மயில்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து தன் நாட்டிற்கு மயில்களைக் கொண்டு சென்றார்.

கான மயில்

                    ”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

                    தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்

                    பொல்லாச் சிறகை விரித் (து) ஆடினால் போலுமே

                    கல்லாதான் கற்ற வழி!

என்கிறது மூதுரை. இங்கு, ஔவையார் பேசியிருப்பது தோகை விரித்தாடும் மயில் குறித்தல்ல. மயில் என்றழைக்கப்பட்ட கான மயில் பற்றிதான். இனப் பெருக்கக் காலங்களில் ஆண் கான மயில் தன் உடலின் முன் பகுதியில் இறகுகளை விரித்து நின்ற இணையை ஈர்க்கப் பாடும்.

            கானமயில் தற்பொழுது எங்குமே இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். 1970 வாக்கில் விமானி ஒருவரால், சூலூரில் கான மயில்கள் பார்க்கப்பட்டதாக பதிவுகள் காணப்படுகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் போன்ற பகுதிகளில் கான மயில்கள் தற்போது வாழ்ந்து வருகின்றன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்த கான மயில்கள் அதிக அளவு வாழ்ந்த வருகின்றன. தற்போதைய கணக்குப்படி  200 கான மயில்கள் மட்டுமே உள்ளது என்றும் அவற்றில் இரண்டில் ஒரு பகுதி ராஜஸ்தானில் வாழ்கின்றன என்றும் மற்றவை குஜராத், ஆந்திரா என்றும், கர்நாடகா போன்ற இடங்களில் மிகச் சிறிய அளவில் வாழ்கின்றன. தன் இனத்தின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டு இருக்கின்றன.

    நாட்டின் தேசியப் பறவையாக நிர்ணயிப்பதற்கு மயிலோடு கான மயிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இதன் பெயர் திகிரேட் இந்தியன் பாஸ்டர்டு. இந்த வார்த்தையில் உச்சரிப்பு சிறிது தவறினாலும், ஆங்கிலம் கெட்ட வார்த்தையாக மாறிவிடும் என்ற ஒரே காரணத்தாலேயே கான மயிலைத் தவிர்த்து மயிலைத் தேர்ந்தெடுத்தார்கள்.

     கான மயில்களுக்கு நேர்ப்பார்வை கிடையாது. அதன் கண்கள் பக்க வாட்டில் அமைந்திருக்கும். வேட்டைக்கு வரும் விலங்குகளை அறிய இந்த மாதிரியான பார்வை அமைப்பை, பெற்று இருக்கின்றன. அவ்வளவு உடலைத் தூக்கிக் கொண்டு இவற்றால் பறக்க இயலாது. குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும். இந்த கான மயில்கள் நேர் கொண்ட பார்வை இல்லாமல் மின் கம்பிகளில் சிக்கி இறந்து போகின்றன. பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியோடு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பார்வை நூல்

1.   மறந்து போனோமே... – கவிஞர் சுந்தர பழனியப்பன், சகுந்தலா பதிப்பகம், பண்ணுருட்டி, முதல் பதிப்பு ஆகஸ்ட் 2021.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...