‘துளசி’
- வரலாறு
‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘அழகில் ஒப்பில்லாதது’ என்பது பொருள். துளசியில் நல்
துளசி, கருந்துளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி என பலவகைகள்
உண்டு. இதற்கு அரி, ராம, துளசி, கிருஷ்ண துளசி போன்ற பெயர்களும் உண்டு. நம் நாட்டிற்கே
உரிய மணமுள்ள செடியாகும்.
துளசி – வரலாறு
மநு வம்சத்து அரசனாகிய தர்மத்துவசனின் மனைவி
மாதவி நூறு வருடம் கருக்கொண்டு, அழகில் ஒப்பில்லாத ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
அவளின் பேரழகைக் கண்ட பெற்றோர் அவளுக்குத் துளசி எனப் பெயரிட்டனர்.
துளசி வளர்ந்து ஆளாகிப் பருவ மங்கையானாள்.
ஸ்ரீமத் நாராயணனைக் கணவனாக அடைய எண்ணி துளசி பதரிவனம் சென்று தவம் செய்தாள். அப்பொழுது
பிரம்மன் அவளுக்குக் காட்சித் தந்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? எனக் கேட்க, நாராயணனைக் கணவனாக அடையும்
வரம் வேண்டும்? என்றாள் துளசி.
அதற்குப் பிரமன், அம்மா துளசி, முன்னொரு
முறை கிருஷ்ணன் தேகத்தில் தோன்றிய சுதர்மன் என்னும் கோபாலன் உன்னைக் கண்டு மோகித்து,
அவ்வாசை நிறைவேறாமல் வருந்தினான். அதனால் அவனை பூமியில் பிறக்குமாறு ராதை சபித்தாள்.
அவன் இப்பொழுது சங்கசூடனாய் பூமியில் பிறந்திருக்கிறான். நீ அவனை மணந்து பின் விருட்ச
ரூபமாய் பிருந்தாவனத்தில் பிருந்தாவணி என்னும் பெயருடன் கிருஷ்ணனுடன் இருப்பாயாக” என்றருளி
பிரமன் மறைந்தார்.
பின்னர் துளசி தன்னை நாடி வந்த சங்கசூடனை
மணந்தாள். காலப்போக்கில் சங்கசூடன் சங்கரருடன் போரிட்டு மாண்டான். இச்சமயத்தில் மகாவிஷ்ணு
சங்கசூடனைப்போல் உருமாறி துளசியைப் புணர்ந்தார். பின்னர் உண்மையை உணர்ந்த துளசி, ”என்
கணவனைப் போல் உருமாறி, என் கற்பைக் கெடுத்ததால் நீ கல்லாகிப் போ” என சபித்தாள்.
இதைக் கேட்ட விஷ்ணு தன் பூர்வ விருத்தாக்கங்களைக்
கூறி அவளைச் சமாதானப்படுத்தி, நீ கண்டகி நதியுருவாய். உன் உடம்பு துளசி விருட்சமாகும்.
அது எல்லோராலும் கொண்டாடப்படும். அதில் நான் ஒரு மலையுருவாவேன். என்று அருளினார். பின்னர்
துளசி வைகுண்டமடைந்தாள். துளசிக்குரிய நாமங்களுடன் கார்த்திகை பௌர்ணமியில் இவளைப் பூஜிப்போர்
எல்லா பாக்கியங்களையும் பெறுவர் என தேவிபாகவதம் கூறுகிறது.
துளசியின் மருத்துவ
குணங்கள்
·
துளசியினால்
அனைத்து வகை காய்ச்சல் தீரும்.
·
இருமல், தோல்
நோய்கள் நீங்கும்.
·
துளசியுடன்
மஞ்சள் மற்றும் பச்சைக் கற்பூரம் கலந்து உபயோகித்தால் புத்திக்கூர்மை, நல்ல நினைவாற்றல்,
நோய் எதிர்ப்புத்திறன், நுரையீரல் பலமடையும்.
Comments
Post a Comment