பாண்டிச்சேரி
சென்ற அனுபவங்களாக...
(மணக்குள
விநாயகர்)
எங்கள் குடும்ப நண்பர் பாண்டிச்சேரியில்
பிரெஞ்ச் கார்னர் என்ற பேக்கரி வைத்துள்ளார்கள். பிரெஞ்ச் கார்னர் பேக்கரி பல கிளைகள்
கொண்டு செயல்படுகிறது. அவர்களின் இரண்டாவது மகன் மிதுன் அவர்களின் திருமணத்திற்குச்
சென்றோம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று (27.08.2025) விநாயகர் சதுர்த்தி விடுமுறை
என்பதால் காலை 6 மணிக்குத் திருச்சியிலிருந்து காரில் பாண்டிச்சேரி சென்றோம். புதுசேரி
– திண்டிவனம் மெயின் ரோடில் இருக்கும் சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் என்ற இடத்தில்
திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமணம் மகாகாளீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் விடியற்காலை
4.30- 6.00 மணியில் நடைபெற்றது. சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் இடத்திற்கு நான்
சென்றேன். வரவேற்பு வைப்பதற்கு ஏற்ற இடம். காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டோம். மணமக்களைப்
பார்த்து விட்டு மணக்குள விநாயகரைப் பார்க்கச் சென்றோம்.
மணக்குள விநாயகர்
காலை 10.00 மணிக்கு நாங்கள், நண்பரின் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. இருந்தாலும் வரிசையில்
நின்று அரை மணிநேரம் காத்திருந்து விநாயகரைத் தரிசித்து விட்டு வந்தோம். நன்கு திருப்தியாகவும்,
மனமகிழ்ச்சியாகவும் இருந்தது. பிறகு பிரசாதம் கொடுத்தார்கள். நன்கு சிறப்பாக விநாயகர்
சதுர்த்தி முடிந்தது.
கோவிலில் அழகான ரங்கோலி வரைந்திருந்தார்கள். அந்த ரங்கோலியில் பார்வதி விநாயகரை மடியில் வைத்திருப்பதைப் போன்று அழகாக வரைந்திருந்தார்கள். அந்த ரங்கோலி மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் வரைந்திருந்தார்கள். மிகவும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.
விநாயகர் சதுர்த்தி
மணல் குளத்து விநாயகர் என்ற பெயர்
மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத்
தலங்களில் இதுவும் ஒன்று. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும்
ஆகும். கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர்
பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும். கோவில்
சுற்றுபுற சுவர்களில் அதைபோல் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளது.
இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி
நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக்
கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகள் பல்வேறு அளவுகளில், வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள்
பொதுவாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாலேயே தயாரிப்பதால், அவை இயற்கை அமைப்புக்கு எவ்விதமான பாதகத்தையும் விளைவிப்பதில்லை.
புரொமனேட்
கடற்கரை
புரொமனேட் கடற்கரை (Promenade Beach) பாண்டிச்சேரியை ஒட்டிய கடற்கரையில் மிகவும் பிரபலமானது.
இது வங்காள விரிகுடாவுக்கு கரையாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கடற்கரைக்குச்
சென்றேன்.
கடற்கரைக்குச்
சென்று வந்துத் திருச்சிக்குக் கிளம்பினேன். காலை 11.30 மணியளவில் கிளம்பினேன். திருச்சிக்கு
மதியம் 2.30 மணியளவில் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் பெரம்பலூர் – திருச்சி பைபாஸில் உள்ள சங்கீதாஸ் ஓட்டலில் மதியம் உணவை முடித்து வீட்டுக்கு வந்தோம்.
இந்த நாள்
மிகவும் சிறப்பாக இனிதே அமைந்தது.
அனைவரும் விநாயகர் தின வாழ்த்துகள்!
.
Comments
Post a Comment