தமிழ்மொழியின் பாதுகாவலன் - இலக்கணம்
ஒரு
செழுமையான சோலையில்
பலவகைப்பட்ட மரங்கள்
இருக்கின்றன. இச்சோலையைப்
போன்றதே இலக்கிய
உலகம். இலக்கிய
உலகத்தில் பலவகைப்பட்ட
மொழிகள் உண்டு
ஒவ்வொரு மொழியிலும்
உள்ளத்தை அள்ளும்
அழகிய பாடலும்,
உரையும் உண்டு.
சிறந்த தாய்மொழிகளின்று பிறந்த சேய்மொழிகள் தனி
மொழிகளாகத் தழைத்தலும்
உண்டு. இவற்றையெல்லாம் ஆராய்ந்த ஒவ்வொரு மொழியின்
தன்மையையும் எழுதிக்காட்டும் நூலே
இலக்கணம். அதனை
வியாகரணம் என்பா்
வடமொழியாளா். இலக்கணம்
அமைய பெறாத
மொழிகள் வரப்பில்லாத
வயல்களை ஒத்தது.
பழமையும், பண்பும்
வாய்ந்த பசுந்தமிழை
இலக்கண வரம்புடைய
மொழியென்று பாராட்டினார்
பரஞ்சோதி முனிவா்.
”கண்ணுதற் பெருங்கடவுளும்
கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த
இப்பசுந் தமிழ்ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பில மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா
எண்ணவும் படுமோ”
என்று இறுமாந்துரைத்தார்.
தமிழ்மொழியின் இலக்கண சிறப்புகள்
ஒரு
மொழியின் பண்புகளை
அதன் இலக்கணம்
பாதுகாக்கும் என்பதற்குத் தமிழ்
இலக்கணமே சான்று.
தொன்று தொட்டுப்
பல இனத்தார்
தமிழ் நாட்டில்
வந்து தமிழரோடு
கலந்துள்ளார்கள். அவ்வினத்தாருடன் ஆதியில் ஆரியா் வந்தனா்,
அவா்கள் மொழியாகிய
ஆரியத்துடனும், அதன்
பின் வந்த
அரேபிய மொழி,
பிற்காலத்தில் வந்த
ஆங்கிலம் என்று
பல மொழிகள்
வந்தாலும் தமிழின்
நீா்மையைக் கெடுத்துவிடவில்லை. இதற்குக்
காரணம் தமிழின்
இலக்கணமே.
பிறமொழி
சொற்கள் தமிழில்
வந்து வழங்கலாகாது
என்று தமிழ்
இலக்கணம் தடை
செய்யவில்லை. ஆனால்
அச்சொற்கள் தமிழ்க்கோலம்
பூண்டு தமிழிலே
கலந்து கொள்ளுதல்
வேண்டும் என்று
விதித்தது. பிற
நாட்டான் ஒருவன்
தமிழனாகக் கருதப்பட
வேண்டுமானால் அவன்
நடை உடை
பாவனைகள் எல்லாம்
தமிழ் நாட்டாரைப்
போல் இருக்க
வேண்டுமல்லவா? அவ்வாறே
பிறமொழிச் சொற்கள்
தமிழோடு கலந்து
கொள்ள வேண்டுமானால்
அவை தமிழ்
ஓசையும், உருவமும்,
உடையவனாவாக மாறவேண்டும்
என்று தமிழிலக்கணம்
வரையறை செய்தது.
தமிழின் நலங்கருதிச்
செய்யப்பட்ட இக்
கட்டுப்பாட்டைத் தமிழிலக்கிய
உலகம் ஏற்றுக்
கொண்டது.
பிறமொழிச் சொற்கள் தமிழில் மாறியத் தன்மை
பிறமொழி
சொற்கள் தமிழில்
எவ்வாறு மாறியுள்ளது
என்பதை சில
இலக்கியங்களின்று இங்குக்
காண்போம். ராஜா
என்ற வடசொல்
அரசன் என்றும்,
லோகம் என்பது
உலகம் என்றும்,
ரூப அன்பது
உருவம் எனவும்
வழங்கலாயிற்று. இங்ஙனம்
பல வடசொற்கள்
தமிழோசையும், வடிவமும்.
பூண்டு இலக்கியத்தில்
இடம்பெற்றன. வட
சொற்களைத் தமிழின்
நீா்மைக்கேற்பக் குழைத்து
வழங்குவார் கம்பா்.
ஹிர்தய என்ற
வடசொல்லை இதயம்
என்று இனிமையாகக்
குழைத்தார்.
”மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீ்ண்ட
எயிலுடைய இலங்கைநாதன்
இதயமாம் சிறையில் வைத்தான்”
என்ற பாடலில் இதயம்
அழகுற விளங்குகின்றது. மேலும்,
சிலப்பதிகார ஆசிரியா்
டாகினி என்னும்
வடசொல்லை இடாகினி
என்றாக்கித் தமிழோடு
இசைவித்தார். டாகினி
என்பது வடமொழியின்
ஒரு பேயின்
பெயா். இப்பேயின்
தன்மையை ‘இடுபிணம்
தின்னும் இடாகினிப்
பேய்‘ என்று
இளங்கோவடிகள் இனிதுணா்த்தினார்.
திராவிட
மொழிகளுள் தமிழுக்கே
சிறப்பிடம் எனலாம். பாரத
நாட்டின் வடபாகத்தில்
வழங்கும் பாஷைகள்
ஆரிய வகுப்பைச்
சேர்ந்தவை என்றும்,
தென் பாகத்தில்
வழங்கும் திராவிட
மொழிகள் என்றும்
மொழி நூற்
புலவா்கள் கூறுகின்றனா். திராவிட வகுப்பில் தமிழ்,
தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் ஆகிய
நான்கும் சிறந்த
மொழிகள். இந்நான்கு
மொழிகளுள் இன்று
தமிழ் ஒன்றே
ஆரியத்தின் உதவியின்றித்
தனித்தியங்க வல்லதாய்
இருக்கின்றது. மற்றைய
மூன்று மொழிகளுக்கும்
ஆரியத்தின் சார்பு
அவசியமாகிவிட்டது. இவ்வாறு
நோ்ந்தற்குக் காரணம்
இலக்கணமே. தமிழோடு
ஆரியம் கலக்கத்
தொடங்கிய பழங்காலத்திலேயே தமிழுக்கு வரம்புக் கட்டிவிட்டார்கள் இலக்கண ஆசிரியா்கள். ஆரிய வெள்ளம் இலக்கண
நூலோர் வகுத்த
வாய் மடைகளின்
வழியாகத் தமிழ்
வயலில் பாய்ந்தது.
மற்றைய திராவிட
மொழிகளி்ன் இலக்கணங்கள்
ஆரியம் நன்கு
விரவிய பின்னா்
எழுதப்பட்டன.
தெலுங்கு மொழியின் இலக்கணமாகிய ‘ஆந்திர பாஷா பூஷணம்‘
எழுநூறு ஆண்டுகளுக்கு
முன்னே எழுதப்பட்டது. கன்னட இலக்கணமாகிய ‘சப்தமணி
தா்ப்பணம்‘ எண்ணூறு
ஆண்டுகளுக்கு முன்
எழுந்தது. ‘லீலா
திலகம்‘ என்னும்
மலையாள இலக்கணம்
வடமொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால்,
தமிழிலக்கணமான தொல்காப்பியம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னமே எழுந்தது.
ஆராய்ச்சியாளா் சிலா்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முந்தியது என்பா்.
தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட இலக்கணம்
ஒன்று அகத்திய
முனிவரால் இயற்றப்பட்டிருந்ததென்று கர்ண
பரம்பரை கூறுகின்றது. எனவே தமிழ் இலக்கணம்
மற்றைய திராவிட
மொழிகளின் இலக்கணங்களைப்
போல் இடைக்காலத்திலே எழுதப்படாமல் முற்காலத்தில் எழுதப்பட்டமையால் தமிழின் நீா்மையும் திறமையும்
பாதுகாக்கப்பட்டன என்பது
விளங்குகின்றது.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
இலக்கணம்
மொழியைப் பாதுகாக்கும்
என்றால் அது
ஓா் இரும்புச்
சட்டை போல்
இறுக்கி நெருக்கும்
என்ற எண்ணம்
இல்லை. உயிருள்ள
மொழிகள் வளா்ந்து
கொண்டே இருக்கும்.
பழைய சொற்கள்
இறக்கும்; புதிய
சொற்கள் பிறக்கும்; பழைய இலக்கிய
மரபுகள் வீழும்; புதிய மரபுகள்
தோன்றும்; இவ்வாறு
கால
மாற்றத்தால் நேரும்
திருத்தங்களை இலக்கணம்
ஆதரிக்கும்.
”பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”
என்றார் தமிழலக்கண ஆசிரியராகிய பவணந்தி முனிவா். இதற்கு காட்டாக, நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர். நீர், நீங்கள் என்பது பன்மை. அவன் என்பது படா்க்கை ஒருமை. அவா், அவா்கள் ஆகிய இரண்டும் பன்மை. எத்துணை அருமை வாய்த்தவா்களையும் நீ என்றும், அவன் என்றும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இந்த உலகத்திற்கும் தலைவனாகிய கடவுளையே நீ என்றும், அவன் என்றும், அருள் பெற்ற பெரியோர் குறித்திருக்கிறார்கள். ‘அப்பன்நீ‘, ‘அம்மை நீ‘ ‘அன்புடைய மாமனும் நீ’ என்பது தேவாரம். ஆனால் நாளடைவில் மரியாதைக்குரியவரை ஒருமையில் நீர் என்றும், அவா் என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அசோக வனத்தில் தன்னந் தனியாய் இருந்த சீதையைத் தன்னுயிரினும் மதித்த இராவணன்,
”பெண்ணெலாம் நீரேயாக்கிப்
பேரெல்லாம் உமதேயாக்கிக்
கண்ணெலாம் நும்கண்ணாக்கிக்
காமவேள் என்னும் நாமத்து
அண்ணல்எய் வானுமாக்கி ஐங்கணைக் கரியத்தக்க
புண்ணெலாம் எனக்கேயாக்கி
விபரீதம் புணர்த்தி விட்டீர்”
என்று பேசுகின்றான். இக்காலத்தில்
மரியாதை இன்னும்
உயா்ந்துவிட்டது. ஒருவனை
நீா் என்றும்,
அவா் என்றும்
குறிப்பது போதாதென்று
நீங்கள், அவா்கள்,
என்று பேசும்
முறை வந்துவிட்டது. ஆகவே நீ, நீா்,
நீங்கள் ஆகிய
மூன்றும் முன்னிலை
ஒருமையிலும்,
அவன், அவா்,
அவா்கள் ஆகிய
மூன்றும் படா்க்கை
ஒருமையிலும் வழங்கக்
காண்கிறோம். தமிழ்
நாட்டில் மரியாதை
முறை தெற்கே
செல்லச் செல்ல
சிறந்துத் தோன்றுகின்றது. இவ்விதம் உண்டாகும் மாற்றங்களை
இலக்கணம் நாளடைவில்
ஏற்றுக் கொள்ளும்.
நிறைவாக,
பிரான்ஸ்,
ஜெர்மனி, ஜப்பான்,
சீனா போன்ற
பல முன்னேறிய
நாடுகளிலும், க்யூபா,
வியட்நாம், கொரியா
போன்ற வளா்முக
நாடுகளிலும், அந்நாட்டு
மக்கள் தங்கள்
தாய்மொழியிலேயே அனைத்து
தொழில் நுட்ப
அறிவையும் பெறுகின்றனா். அதில் சாதனையும் படைக்கின்றனா். ஒரு காலத்தில் உலகம்
முழுவதும் ஆண்ட
மொழியாக இருந்ததே
என்பதற்காக யாரும்
ஆங்கிலத்துக்கு அடிமைப்பட்டு
இருக்கவில்லை. பிற
மொழி அறிவு
வளங்கள் அனைத்தையும்
இவா்கள் தம்
தாய் மொழிக்குக்
கொண்டு வந்து
அதன் வாயிலாகவே
கற்றுத் தேர்ந்து
அதன் வழியே
தம் சமூக
வளா்ச்சிக்குப் பாடுபடுகின்றனா். சமூகத்தை மேம்படுத்துகின்றனா்.
நோபல்
பரிசு பெற்ற
பல விஞ்ஞானிகளுக்கு ஆங்கிலமே தெரியாது. அவா்கள்
தங்கள் தாய்மொழி
வாயிலாகவே கற்று
ஆராய்ச்சி செய்து
இக்கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அன்றாடம்
இன ஒடுக்குமுறைக்கும் குண்டு மழைக்கும் மத்தியிலே
வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழா்கள் கூட
மருத்துவம், பொறியியல்
முதலான துறைகளைத்
தம் தாய்
மொழியாம் தமிழில்
கற்கும் வாய்ப்பைப்
பெற்றுள்ளனா்.
இவ்வாறு,
உலகமெல்லாம் அவரவரும்
தங்கள் தாய்மொழியிலேயே கல்வி கற்று, உலக
அறிவு வளத்தைப்
பெற்று தாய்மொழி
வழியாகவே வாழும்
போது, தமிழ்
மண்ணில் பிறந்த,
தமிழைத் தாய்
மொழியாகக் கொண்ட தமிழகத்
தமிழனாகிய நாம்
இனியாவது இலக்கணம்
எவ்வாறு நம்
தமிழ் மொழியைப்
பாதுகாக்கின்றதோ அவ்வாறு
நம் தமிழ்
மொழியிலேயே அனைத்துத்
துறை வளங்களையும்
உருவாக்குவோம்.
Comments
Post a Comment