Skip to main content

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

 

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

 

பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும்,

உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து

உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று

உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு

பாரோர் போற்றும் பண்பு பெற்று

இடும்பை இல்லா இன்பம் போற்றி

நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம்

என்ற வாழ்த்துக்களுடன், நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம்.

இயற்கையை வணங்குதல்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள்,

·        அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள்,

·  விண்ணையும், மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள்,

·     வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள்.

·        நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும்,  பலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள்.

·        உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள்.

· கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்று கண்டுபிடித்தவர்கள்.

அதனால்தான் கழனி விளைந்து கதிரைப் பறித்ததும் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.  புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள்.   செந்நெல், வெண்நெல் என நிலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த நெல்மணிகளைக் கொண்டு கரந்தப்பாலினைச் சேர்த்து பொங்கல் வைத்து  நெல்லரி பறையிசையில் சூரியனையும் மற்றும் மருதநில கடவுளான இந்திரனையும் வழிப்பட்டனர்.

தைத் திருநாள்

 தைத்திருநாளை போற்றும் வகையில் சங்க இலக்கியத்தில் பல்வேறு பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி,
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!” (புறம்:168)

என்று புறநானூற்றுப் பாடலில், புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம்பாலிலே புத்தரிசியிட்டு, சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகக் கூறிகின்றார். இந்த பாடலின் மூலம் மருதநில மக்கள் மட்டுமன்றி குறிஞ்சி நில மக்களும் கொண்டாடியுள்ளனர் என்பது அறியமுடிகிறது.

கதிரவனுக்கு நன்றி செலுத்தும் முறை

கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

அலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக்கூரை

சாறு கொண்டகளம் போல
வேறுவேறு பொலிவு தோன்றக்

குற்றானா உலக்கையால்

கலிச்சுமை வியல் ஆங்கண்’  (புறம்:22)

என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில்  நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் குறுங்கோழியூர் கிழார்.  

ஒவ்வொரு காலத்திலும் பெயர்கள் தான் மாறியுள்ளதே தவிர வழிமுறையும், வழிப்பாட்டு முறையும் மக்களிடம் மாறவில்லை. அதேபோல் அறுவடைத் திருவிழாவில்  பொங்கல் வைத்து வழிப்பட்டு வந்தனர். காலப்போக்கில் தைப்பொங்கலாய்  கொண்டாடி வருகிறோம்.

நிறைவாக,

"முப்பது கோடி முகமுடையாள்

 உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்

 இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள்

எனிற் சிந்தனை ஒன்றுடையாள்'

என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க  மொழியாலும், கலாசாரத்தாலும் பிரிந்திருந்தாலும்  நாம் சிந்தனையில் ஒன்றுப்பட்டு இருக்கிறோம். அதற்கு உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள் சிறந்த சான்றாக விளங்குகிறது.

கதிரவனின் ஒளி ஒன்று, வண்ணங்கள் ஏழு, அதுபோல் நாமும், அன்பு, பாசம், நேசம், நட்பு, பற்று, கருணை, காதல் என ஏழு குணங்களைப் பெற்று வாழ்வோமாக

         அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...