அனைவருக்கும் வணக்கம்,
எனது வலைதளத்தில் இடம்பெறும் அனைத்துத் தரவுகளும், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவ- மாணவியர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் நம் தமிழ் இலக்கியங்கள் வழி நம் மொழியின் சிறப்புக்கள், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், தொழில் நுட்ப செய்திகள், வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தையும் வெளியிட்டு வருகிறேன்.
எனது நோக்கம் நம் தமிழ் மொழியின் சிறப்புக்கள் அனைத்தும் நம் சந்ததியினர் மட்டுமல்லாமல், நம் வருங்கால சந்ததியினரும் அறிந்து பயன்பெறும் வகையில் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிபாட்டில் உருவானது தான் இந்த அறிவுச்சாரல் என்னும் வலைதளம்.
இவ்வலைதளத்தில்,
படைப்புகள் - என்னும் பக்கத்தில் நான் வெளியிட்டுள்ள நூல்களின் பட்டியல், மற்றும் நான் கலந்து கொள்ளும் கருத்தரங்கக் கட்டுரைகளின் பட்டியலும் இணைத்துக் கொண்டு வருகிறேன்.
கட்டுரைகள் - என்னும் பக்கத்தில் பல நூல்களிலிருந்து இளங்கலை, முதுகலை, மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரைகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுளளது.
இலக்கியப் பேழை - என்னும் பக்கத்தில் எனக்குப் பிடித்தப் பகுதிகளையும், எனது எண்ணங்களின் வெளிபாடுகளையும் பகிர்ந்துள்ளேன். அவை மட்டுமல்லாமல் நம் தமிழ் இலக்கியங்களில் கல்வி, தொழில், மருத்துவம், நாகரிகம், பண்பாடு என்று அனைத்து நிலைகளையும் படம்பிடித்துக் காட்டும் பாடல்கள் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் விதமாகப் புலவர்கள் படைத்துள்ளனர். அப்பாடல்களில் எனது மனதைக் கவர்ந்தப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறேன்.
அறிவுச்சாரல் வலைதளத்தை எனக்கு அழகாக உருவாக்கிக் கொடுத்துப் பெரிதும் உறுதுணையாக இருந்தது எனது மருமகன் சபரிநாத் மற்றும் எனது புதல்வி சங்கீதா அவர்கள். மிக அருமையான ஒரு வலைதளத்தை உருவாக்கிக் கொடுத்த அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எப்பொழுதும் உற்சாகமாகவும், மகிழ்வுடனும் இருக்கப் பெரிதும் காரணமாக உள்ள எனது பெயர்த்தி சாரா சபரிநாத் அவர்களுக்கும், என் வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும், உதவியாகவும் உள்ள எனது கணவர் சந்திரசேகரன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலைதளம் துவங்கி (சூலை - 2022 - சூலை- 2024) இரண்டு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்து ஊக்கம் கொடுத்துவரும் அனைத்துத் தமிழ் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. எனது வலைதளத்தில் இடம்பெறும் பதிவுகளைப் படித்துத் தங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்தால், உங்களது வேண்டுகோளுக்கிணங்க பதிவினை மெருகேற்றிக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் ஏதுவாக அமையும் என்று நினைக்கின்றேன்.
என்றும் அன்புடன்,
கி.கீதா
Comments
Post a Comment