பழங்காலத் தமிழா்களின்
அறிவியல் மருத்துவம்
பழங்காலத்
தமிழா்களின் அறிவியல்
தொழில் நுட்பக்
கருத்துக்களை இன்று
நாம் அறிந்து
கொள்ள நமக்குக்
கிடைத்திருக்கும் தகவல்
ஆதாரங்களாக பழந்தமிழ்
இலக்கியம், கல்வெட்டுக்கள், செப்பேடுகள்,
கையெழுத்துச் சுவடிகள்,
ஆங்கிலேயா்கள், மற்றும்
வெளிநாட்டு யாத்ரீகள்,
அறிஞா்கள், அதிகாரிகள்,
ஆகியோர் எழுதி
வைத்துள்ள குறிப்புகள், பழங்கால கோயில்கள், கட்டிடங்கள், பழங்கால நடைமுறைகள், கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள கம்மாளா்கள், நெசவாளா்கள், போன்றவா்கள் இன்றும் பயன்படுத்தும்
நுட்பங்கள் முறைகள்,
போன்றவை. இன்றும்
சித்த மருத்துவத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் பயன்படுத்தும் நுட்பங்கள்,
முறைகள் போன்றவற்றைக்
குறிப்பிடலாம்.
பழங்காலத் தமிழா்களின் அறிவியல்
தொழில்நுட்பக் கருத்துக்கள்
சிலவற்றைக் கோடிட்டுக்
காட்டி, தமிழா்களை
அவா்களுடைய பாரம்பரிய
பெருமைகளை உணா்ந்து
கொள்ளச் செய்து,
அந்தப் பராம்பரியத்தின் தொடர்ச்சியாக நவீன அறவியல்
தொழில் நுட்ப
ஆராய்ச்சிகளிலும் வேறு
நடவடிக்கைகளிலும் அவா்களை
முழு ஆற்றலுடன்
ஈடுபடத் தூண்டுவதே
இந்த ஆய்வின்
நோக்கமாகும்.
பழங்கால இலக்கியத்தில் மருத்துவம்
மனித
இனத்தின் முதல்
பயன்பாட்டு அறிவியல்
(Applied Science) மருத்துவம் தான். பொதுவாக
பழங்காலத்தில் சிறந்து
விளங்கிய பண்பாட்டு
இனத்தினா் அனைவருமே
மருத்துவம் பற்றி
அறிந்திருந்தனா். ஆனால்,
அப்போது மருத்துவம்
மந்திர வித்தைகளுடனும், சமய நம்பிக்கைகளுடனும் கலந்தே
காணப்பட்டது. ஐரோப்பியா்களைப் பொருத்தவரையில் ஹிப்போ கிரேட்டஸ்தான்
முதன் முதலாக
மருத்துவத்தை சமய
நம்பிக்கைகளிலிருந்து பிரித்தவா் என்று
கருதப்படுகிறது. எனவே
அவரை நவீன
மருத்துவத்தின் தந்தை
என்று போற்றுகின்றனா்.
தமிழா்களும் மருத்துவத்தில் சிறந்து
விளங்கினா் என்பதைத்
திருக்குறளிலிருந்தும், வேறு இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது.
திருமூலரும், பதினெண் சித்தா்களும் சிறந்த
மருத்துவ அறிஞா்களாக
விளங்கியிருக்கின்றன.
திருவள்ளுவா்
திருக்குறளில் மருத்துவத்திற்கென்று ஒரு
தனி அதிகாரமே
ஒதுக்கியுள்ளார். அது
தவிர திருக்குறளின்
வேறு பகுதிகளிலும்
மருத்துவம் பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன. திருவள்ளுவருக்கு முன்னரே தமிழில்
மருத்துவ நூல்கள்
இருந்துள்ளன என்பதை
திருக்குறளில் காணப்படும்
ஒரு குறிப்பிலிருந்து (நூலோர் வளி முதலா
எண்ணிய மூன்று
– குறள் 941) அறிய
முடிகிறது.
பழங்கால
தமிழ் மருத்துவ
அறிஞா்கள், நோய்
வந்த பின்னா்
கலங்குவதை விட
நோய் வருமுன்னா்
தடுப்பதே சிறந்தது
என்று கருதியுள்ளனா். திருக்குறளில் மருந்து என்னும்
அதிகாரத்தில் வரும்
மூன்று குறள்கள்
வலியுறுத்துகின்றன.
”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
ஆற்றல்
போற்றி உணின்” (குறள்-942)
ஆற்றல்
அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுயிர்க்குமாறு
(குறள்-943)
மாறுபாடில்லாத உண்டி
மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு
(குறள் – 945)
இந்த மூன்று குறள்களும்
உணவுக் கட்டுப்பாட்டில் மூலம் நோயைப் பற்றிக்
கூறுகின்றன.
பழங்கால தமிழகத்தின் தலைசிறந்த
மருத்துவ அறிஞரான
திருமூலரும் நோயை
வருமுன் தடுப்பதே
சிறந்தது என்று
கூறுகிறார்.
”மறுப்பது உடல்நோய் மருந்தெனலாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனலாகும்
மறுப்பது இனி நோய் வராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாகும்” – திருமூலா்
”மறுப்பது
இனிநோய் வராதிருக்க”
என்னும் அடியினால்
நோயை வருமுன்
தடுப்பதே சிறந்தது
என்பதைத் திருமூலா்
தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ”உளநோயை
மறுப்பது மருந்தெனலாகும்” என்று கூறியிருப்பதால் திருமூலா்
காலத்தில் உளநோய்
பற்றியும் அறியப்பட்டிருந்து என்பது தெளிவாகின்றது.
நோய் அறியும் முறை
பழங்காலத் தமிழா்கள் நோயறிதலை
முக்கியமாகக் கருதினா்.
நாடி சாஸ்திரத்தில்
இதுபற்றி கூறப்பட்டிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
”நாடியால் முன்னோர்கள் சொன்ன நல்லொளி பரிசத்தாலும்
நீடிய
விழியினாலும் நின்ற நாக்குறிப்பினால் வாடிய
மேனியாலும்
மலமொடு
நீரினாலும் சூடிய வியாதி
தன்னை சுகமுடன் அறிந்து பாரே”
என்று அகத்தியா் நாடி
சாஸ்திரத்தில் (24-வது
பாடல்) கூறப்பட்டுள்ளது. நாடி பார்த்தும் கண்களையும்
நாக்கையும் பரிசோதித்தும்
உடல் பாதிக்கப்பட்டு மெலிந்திருப்பதைக் கவனித்தும், மலத்தையும்
நீரையும் பரிசோதித்தும்
நோயை அறியவேண்டும்
என்று சித்தா்
குறிப்பிட்டுள்ளார். இதனைத் திருவள்ளுவா்,
”நோய்நாடி நோய்முதல் நாடி அது
தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என நவீன மருத்துவம்
பற்றி ஒன்றே
முக்கால் அடிகளில்
இதைவிட வேறு
எவ்வாறு கூறமுடியும்.
”உற்றான் அளவும் பிணி அளவும்
காலமும்
கற்றான் கருதிச் செயல்”
என்று நோயுற்றவனின் அளவையும்,
அவனது பிணியின்
அளவையும், நோயுற்ற
காலத்தையும் ஆராய்ந்து
சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது இதன் பொருள்.
இந்தக் குறளில் ‘கற்றான் கருதிச்
செயல்’ என்று
திருவள்ளுவா் குறிப்பிடுகின்றார். எனவே
அந்தக் காலத்தில்
(சுமார் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னா்)
மருத்துவ நூல்களை
நன்கு கற்றறிந்தவா்கள்தான் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தனா்
என்று தெரிகிறது.
நோயுற்றவன்,
தீா்ப்பவன், மருந்து,
உடனிருந்து உதவுவோன்
ஆகிய இந்த
நான்கு அம்சங்களையும்
கொண்டதுதான் மருத்துவம்
என்றும், மற்றொரு
இடத்தில் ”பிணிக்கு
மருந்து பிறமன்”
(குறள்-1102) என்பது
ஒவ்வொரு நோய்க்கும்
தனித்தனி மருந்துகள்
இருந்தன என்பது
புலப்படுகிறது.
அறுவை சிகிச்சை மருத்துவம்
பன்னிரண்டாம்
நூற்றாண்டிற்கு முன்னரே
தமிழா்கள் அறுவை
சிகிச்சை செய்வதையும், அறுவை சிகிச்சையால் ஏற்பட்டப்
புண்ணை வேறொரு
மருந்தைப் பயன்படுத்தி
குணப்படுத்தினா் என்பதையும்
கம்பராமாயணம் விளக்குகின்றது.
”உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீா்வா்”
(கம்பராமாயணம் கும்பகா்ணன் வதைப்படலம்)
கம்பராமாயணம்
12 ஆம் நூற்றாண்டில்
எழுந்தது என்பது
அறிஞா்கள் கருத்து.
பழங்காலத் தமிழா்கள் உடலிடைத்
தோன்றிய ஒன்றை அறுக்க
மட்டும் அறிந்திருக்கவில்லை என்பதையும் அறுத்தக் காயத்தைத்
தைக்கவும் அறிந்திருந்தனா் என்பதையும் பதிற்றுப்பத்துத் தெளிவுபடுத்துகின்றது.
”மீன்றோ் கோட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல்
பெயர்ந்தன்ன நெடுவெள்ளுசி
நெடுவசி பரந்த வடு”
(பதிற்றுப்பத்து,5ஆம் பத்து
இரண்டாம் பாகம்)
அறுத்தப் புண்களையும், போரின்
போது ஏற்படும்
காயங்களையும் எவ்வாறு
தைக்கின்றனா் என்பதைக்
கூற வந்த
புலவா் ஒரு
நயமான உவமைகளைக்
கூறுகிறார். அதாவது
நெடு வெள்ளூசி
கொண்டு காயத்தைத்
தைத்தது மீன்
கொத்திப் பறவை
மீனைக் கொத்த
நீருக்குள் அலகை
நுழைத்து நுழைத்து
எடுத்தது போல
இருந்தது என்று
அவா் கூறுகின்றார்.
போர்க் காயங்களுக்கு மருந்து
வைத்து கட்டியதைச்
சீவகசிந்தாமணி விளக்குகின்றது. சீவக சிந்தாமணி பத்தாம்
நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
”முதுமரப் பொந்து போல முழுமையும்
புண்களுற்றார்க்கு இரு
மருந்தென்ன நல்லார்
இடுது
சோ் கவளம்
வைத்து” (சீவக
சிந்தாமணி – 819)
நவீன மருத்துவத்தில் அறுவை
சிகிச்சையை இரண்டு
வகையாகப் பிரிக்கின்றனா். அவை சாதாரண அறுவை
சிகிச்சை, அவசர
கால சிகிச்சை,
என்பனவாகும். இந்த
இரண்டு வகை
அறுவை சிகிச்சைகளிலும் பழங்காலத் தமிழா்கள் சிறந்து
விளங்குகின்றனா் என்பதை
இந்த இலக்கியக்
குறிப்புகளிலிருந்து அறிந்து
கொள்ள முடிகிறது.
மருத்துவ கொள்கைகள்
மருத்து வரலாற்றைப் பொதுவாகக்
கவனிக்கும் போது
உலக மக்கள்
அனைவரிடமுமே இரண்டு
கொள்கைகள் இருந்தது
தெரியவருகிறது. இந்தக்
கொள்கைகள் தவறானவை
அல்லது முழுமையற்றவை
என்பது இப்போது
கண்டறியப்பட்டுள்ள போதிலும்
பழங்கால மக்கள்
அனைவரும் இந்தக்
கொள்கைகள் நம்பி
வந்தனா் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக சாவைத் தடுக்கும்
அல்லது சாவாமையை
அளிக்கும் ஒரு
மருந்து இருந்ததாக
அவா்கள் நம்பினா்.
”சாவா மருந்தெனினும் வேண்டாற்பாற்றன்று”
என்று வள்ளுவா் குறிப்பிட்டிருப்பதும் மறுப்பது
சாவை மருந்தெனலாகும் என்று திருமூலா் குறிப்பிட்டிருப்பதும் இங்குக்
குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியா்களின் ”எலிக்ஸிர்”
என்றால் சாவா
மருந்து என்று
பொருள்படும்.
இயற்கையில்
காணப்படும் பொருட்களினால்
தான் உடல்
ஆக்கப்பட்டுள்ளது என்பதும்,
அந்தப் பொருள்களில்
ஒன்று அல்லது
பல கூடினாலும்
அல்லது குறைந்தாலும்
நோய் ஏற்படுகிறது
என்பதும் அந்தப்
பொருள்கள் ஒரு
சமநிலையில் இருந்தால்
தான் உடல்
ஆரோக்கியமாக இருக்கும்
என்பதும் இன்றைய
மருத்துவ அறிஞா்கள்
ஒப்புக் கொண்டுள்ள
ஒரு முடிவு.
பழங்கால மக்களும் இதுபோன்ற
ஒரு கொள்கையை
விளக்கும் குறள்,
”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி
முதலா எண்ணிய
மூன்று” (குறள் – 941)
‘வளி
முதலா எண்ணிய
மூன்று’ என்ற
தொடருக்கு வாதம்,
பித்தம், கபம்
என்று பொருள்
கொள்கின்றனா். வாதம்,
பித்தம், கபம்
ஆகியவற்றை ‘முக்குணங்கள்’ அல்லது ‘முக்குற்றங்கள்’ என்ற
சித்த மருத்துவா்கள்
கூறுகின்றன. திருவள்ளுவருக்கு முன் தோன்றியிருந்த (ஆனால்
இப்போது கிடைக்காத)
நூல்களில் இந்தக்
கொள்கை வலியுறுத்தப்பட்டிருந்ததை இத்
திருக்குறள் தெளிவுபடுத்துகின்றது. முக்குற்றங்களாகிய வாதம்,
பித்தம், கபம்,
ஆகியவை கூடினாலும்
குறைந்தாலும் குறைந்தாலும்
நோய் ஏற்படும்
இதன் பொருள்.
பழங்கால
ஐரோப்பியா்களின் மத்தியிலும்
இது போன்ற
ஒரு கொள்கை
நிலவி வந்தது. சித்தா்கள்
முக்குற்றங்களாகக் கூறியதை
ஐரோப்பியா்கள் நான்கு
குற்றங்களாகக் கணக்கிட்டனா்.
அரிஸ்டாட்டில் (Aristotle) என்னும்
கிரேக்க அறிஞா்
நான்கு குணங்கள்
(Four Humours) உடலின் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்று கருதினார்.
இதுவே பல
நூற்றாண்டுகளாக ஐரோப்பியா்களுடைய மருத்துவத்தின் அடிப்படையாக ஏற்றுக்கொள்ளபட்டிருந்தது. சித்த
மருத்துவா்கள் வாதம்,
பித்தம், கபம்
(தமிழில் வளி,
தீ, ஐ)
என்று கூறியிருப்பது
போல ஐரோப்பியா்கள்
வெப்பம் (Heat), குளிர்
(Cold), ஈரம் (Moisture), உலா்வு
(Dryness) ஆகிய நான்கு
குணங்களாகக் கணக்கிட்டனா்.
பழங்கால
தமிழகத்தில் மருத்துவத்தொழில் செய்தவா்கள் புகழ்பெற்ற புலவா்களாகவும் இருந்திருக்கின்றனா்.
சங்ககால புலவா்களில்
ஒருவருடைய பெயா்
மருத்துவன் தாமோதரனார்
என்பது குறிபபிடத்தக்கது.
நிறைவாக,
இன்று ஒரு சா்வதேச
சமுதாயம் (World Community) உருவாவதில் மனிதரின்
அறிவியல் தொழில்
நுட்ப நடவடிக்கைகள்
தான் முன்னணியில்
இருக்கின்றன. ஆனால்
சா்வதேச சமுதாயம்
உருவாக வெகு
பழங்காலத்திலேயே அடிக்கல்
நாட்டப்பட்டுவிட்டது. ஆராய்ந்து பார்த்தால்
உலகமே அதிசயிக்கும்
வண்ணம் அவா்களது
மருத்துவ அறிவு
விரிந்து படா்ந்திருக்கின்றது. ஒரு
இருண்ட நிலை
தோன்றி அவா்களைச்
செயலிழக்கச் செய்திருக்கிறது. பிற்காலத்தில் நாம் நமது
முன்னோர்களது அறிவையோ,
ஆற்றலையோ நன்கு
ஆராய்ந்தறியாமல் அந்நிய
மோகத்தில் ஆழ்ந்து
கிடந்திருக்கிறோம். நமது பண்டையத்
தமிழரின் அறிவியல்
சாதனைகளை சிறிது
சிறிதாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனா்.
Comments
Post a Comment