வேப்பமரத்தின்
பலன்கள்
ஒரு மனிதன் வாழ பிராண வாயு தேவை. அதற்குப் பல மரங்கள், செடி, கொடிகள் நிறைந்தக்
காடுகளை இயற்கை நமக்காகப் படைத்திருக்கிறது. ஆனால் இதன் உண்மையை உணராது நமது தேவைக்காக
மரங்களை வெட்டி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். இதன் விளைவால் நமக்குத் தேவையான பிராண
வாயு குறைகின்றது. இப்படிப்பட்ட பெருமிகு மரத்தில் வேப்பமரமும் மிக முக்கிய மரமாகும்.அதிகப்படியான
பிராணவாயுவை வெளிவிடக் கூடியது. அதே நேரம் வேப்பமரம் சுற்றுப்புறத்தைச் சுத்திகரிக்கக்
கூடிய சக்தியும் அதிகம் உண்டு. ஆகையால் மஸ்கட் போன்ற பாலைவன நாடுகளில் நெடுஞ்சாலை இருமருங்கிலும்
மற்றும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வேப்பமரம் வைத்து பராமரிக்கிறார்கள்.
வேப்பமரத்தின்
பலன்கள்
வேப்பமரத்தினால் பல நன்மைகள் உள்ளன. வேப்பமர
நிழல் உடலுக்கு நல்லது. அதன் காற்றைச் சுவாசிக்க நலன் பல உண்டாகும். நுரையீரல் மற்றும்
தோல் வியாதிகளைத் தடுக்கும் சக்தி உள்ளது என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
· மேலைநாடுகளில் ஆராய்ச்சி செய்து வேப்பமரக்கட்டை பூச்சி, கரையான்களினால் தாக்கம் பெறாது என்று கூறியுள்ளனர். மனிதர்களுக்குக் குடல்புண்ணை ஆற்றுவதற்கும், வயிற்றுப் பூச்சிகள் அழிப்பதற்கும் வேப்பிலையைச் சாப்பிடலாம். வேப்ப எண்ணெய் இயந்திரங்கள் இலகுவாக இயக்க உதவுகின்றன. இதனைத் தெளிப்பதனால் வீட்டுக்குள் பூச்சிகள் வருவதில்லை.
· எண்ணெய் எடுத்தப்பின்
வேப்பங்கொட்டையைப் பொடி செய்து நிலத்திற்கு உரமாக உபயோகிக்கிறார்கள். இதனால் செடிகளைத்
தாக்கும் பூச்சிகளிலிருந்து செடிகள் காப்பாற்றுப்படுகின்றது.
· முட்டைக்கோஸ்,
காலிஃபிளவரைப் புழு, பூச்சி, வெகுவாகத் தாக்கும். ஆகையால் இவற்றிற்குக் கட்டாயமாக வேப்பம்
புண்ணாக்கை அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
·
இது மிக முக்கிய
இயற்கை கிருமி நாசினி. ஆகையால் மக்களுக்கும், ஆடு, மாடு, நாய், பூனை போன்ற எந்த மிருகங்களுக்கும்
எந்த வகைப் பாதிப்பும் இல்லை.
·
வீட்டின் முன்
வேப்பமரம் வைத்திருந்தால் அக்காற்றைச் சுவாசிக்கும் போது வியாதிகள் வராது.
· பறவைகள் தங்கள்
உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும், இறகுகள் உதிரா வண்ணம் இருக்கவும், இறகுகள்
மென்மையாக, மிருதுவாக, ஆரோக்கியமாக, பளப்பளப்பாக இருக்க வேப்பம் பழங்களை உண்ணுகின்றன.
பேன், பொடுகு உள்ளவர்கள் இதைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நிவாரணம் பெறலாம்.
நிறைவாக,
வேப்பமரத்தினால் எத்தனையோ நன்மைகள் கிடைக்கின்றன.
ஆகவே மக்கள் வாழும் இடங்களில் பயிரிட்டு, நோயுற்ற வாழ்வைப் பெறலாம் என்பதை உணர்வோம்.
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்யிற்காக அலைய தேவையில்லை. வெளிநாடுகளில் ஆராய்ச்சி
செய்து அதன் பலனை உணர்ந்து, உபயோகிக்க வகை செய்கிறார்கள். நாம் நமக்கு இயற்கை தந்த
அபரிமிதமான பெரும் சொத்தை நாம் அலட்சியப் படுத்துவதுடன், செயற்கைப் பொருள்களை உபயோகித்து
அவதிப்படுகிறோம்.
மரங்கள் அதிகம் இருந்தால் நிலத்தில் ஈரத்தை ஈர்த்து வைக்கும். அது குறைவதால்
தான் பூமி வெப்பமயமாதல் அதிகமாகி வருகிறது.
Comments
Post a Comment