Skip to main content

இலட்சிய இல்ல(ற)ம்

 

இலட்சிய இல்ல(ற)ம்

        ஒரு வீடு சிறப்பாகவும் கலகலப்பாகவும் இன்புற்றிருக்க வேண்டுமெனில் அவ்வீட்டில் தாய், தந்தை, குழந்தைகள், தாத்தா, பாட்டி, மாமன், மாமி போன்றோர் வசிக்கவேண்டும். இவ்வண்ணம் நம் முன்னோர் ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடாத்தி, இயற்கை வழி செழிப்புறச் செய்யவேண்டுமென்று கூறினர். இத்தகைய இல்லற வாழ்வில் அன்பும், பிறருக்கு உதவும் எண்ணமும் தோன்றும். ஊரும் நாடும் செழிக்கும்.

          கட்டடம் எல்லாம் இல்லம் ஆகாது. இல்லம் சிறக்கின் அங்கே ஒரு நற்குடும்பம் வாழவேண்டும். நற்குடும்பம் என்பது அங்கே ஓர் ஒத்தத் தலைவனும், ஒத்தத் தலைவியும், ஒத்த நோக்கத்துடனும், ஒத்தக் கருத்துக்களுடனும் இல்லறம் நடத்தும் செயலெனலாம். இவ்வில்லத்தில் மலரும் இல்லற வாழ்வு பல இல்லங்களுக்கு முன்மாதிரியாக அமைந்து நல்ல சமுதாயம் உருவாகக் காரணமாக அமைகின்றது.

தமிழ் இலக்கியங்களில் இல்லறம்

·        திருக்குறளில் ‘இல்வாழ்க்கை’, ‘வாழ்க்கைத் துணைநலம்’ ஆகிய இரு அதிகாரங்களிலும் இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடைத்து, அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என்று திருவள்ளுவர் இல்லறம் குறித்துக் கூறியுள்ளார்.

·        சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. மணமக்களை வாழ்த்தி நகரமே மகிழ்கிறது. இல்வாழ்க்கை இனிதே சில ஆண்டுகள் நடைபெறுகின்றது. அவர்களின் இல்வாழ்க்கை இலட்சிய இல்லமாகத் திகழ்ந்தது.

·        தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களில் குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும், பாலையில் பிரிதலும் நிகழ்த்தி அங்கு வாழ்ந்த மக்கள் தம் வாழ்வியலில் மேன்மை பெற்று இல்வாழ்க்கையை நடத்தி இன்புற்றிருந்தனர்.

”புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே” (பொருள் .16)

          தன் கணவன் மாண்டான் எனக் கேட்டதும் மனைவியானவள் உடன் உயிர் நீத்ததும் (மூதானந்தம்), தன் கணவன் தீச்சதையில்  பாய்ந்து உடன்கட்டையேறி மனைவி உயிர் துறந்ததும் (முதுபாலை), தன் மாண்ட கணவனை நினைந்து மனைவியானவள் கற்பு நெறி நின்று கைம்மை பூண்டு வாழ்ந்ததும் (தாபதம்), மனைவியை இழந்த கணவன் அவளை நினைந்து துயருற்று வாழ்ந்ததும் (தபுதாரம்) ஆகிய செய்திகளைத் தொல்காப்பியர்,

                             ”.... கணவனோடு மடிந்த படர்ச்சி நோக்கிச்

                        செல்வோர் செப்பிய மூதானந் தமும்

                        நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து

                        தனிமகள் புலம்பிய முதுபா லையும்

                        கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ

                        ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்

                        காதலி இழந்த தபுதார நிலையும்

                        காதலன் இழந்த தாபத நிலையும்...”

          இவ்வாறு தம் கணவருக்காக மனைவி தம் உயிரை நீத்ததும், கைம்மை பூண்டு வாழ்ந்ததும் ஆகிய செயல்கள், அவர்கள் தம் கணவருடன் மருவி வாழ்ந்த இல்வாழ்வின் உச்சநிலையின் தன்மையினையும், பெருமிதத்தையும் நன்கு விளக்குகின்றன.

திருமணம் குறித்து மேலை நாட்டினரின் கருத்துகள்

          மேலும், திருமணம் குறித்து மேலை நாட்டினர் கருத்துக்களையும், மேற்கோள்களையும் காணலாம்.

·        ”காதலைக் கண்ணால் பார்க்கக் கூடாது. அதை மனத்தால் பார்க்க வேண்டும்”  ( வில்லியம் சேக்ஸ்பியர்)

·        ”தனி மனிதனின் கால மாறுபாட்டுக்கும், வளர்ச்சிக்கும், அவர்கள் தம் காதலின் கருத்தை வெளிப்படுத்துவதற்கும், இசைவு கொடுக்கக் கூடியது தான் ஒரு சிறந்த திருமணமாகும்.” (பேர்ள் எஸ்.பக் )

திருமணத்திற்கு சில கூற்றுகள்

·        புரிந்துணர்வும், தொடர்பும்

·        தர்க்கம் தவிர்த்துத் தேவைக்கேற்ப அன்பாகப் பேசுதல்.

·        உணர்ச்சிவசப்படாதிருத்தல்.

·        தொட்டுப்பழகல்.

·        ஒருவரை ஒருவர் மதித்தல்.

·        திருமணத்தில் தேவைக்கேற்ப மாற்றம் செய்தல். (அந்தோணி பிறாட்லி)

நிறைவாக,

        இல்லறமே நல்லறமாகும் என்பது முதுமொழி. அன்று சங்க கால மக்கள் அறநெறி நின்று வாழ்ந்தனர். அக்கால ஆண்கள் இயற்கை வழி நின்று திருமணங்களை நடத்தி சிறந்ததோர் இல்வாழ்க்கையில் என்றும் இன்புற்றிருந்தனர். அதனால் அவர்கள் வாழ்வில் செப்பம் நிறைந்திருந்தது.

       ஆனால் இன்று மக்கள் மத்தியில் பொய்யும் வழுவும், வீண் ஆசையும், கோபமும் நிறைந்து காணப்படுகின்றன. திருமணங்கள் நல்லனவாய் அமையாவிடத்துக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு சிதைவு உண்டாகும். எனவே நாடு முன்னேற்றம் அடைய குடும்ப அமைப்பு முறை அவசியமான ஒன்றாகும். நல்லதொரு குடும்பம் சிறந்ததோர் பல்கலைக் கழகம் என்றக் கூற்றிற்கு ஏற்றவாறு குடும்ப வாழ்வு அமைக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...