இலக்கியத்தில்
ஆலி (ஆலங்கட்டி)
மழைப் பொழிவில் நீர்த்துளி மட்டுமின்றி,
வெப்ப மண்டலப் பகுதியிலும் பனிக்கட்டிகள் விழுவது ஆலி – ஆலங்கட்டி எனப்படுகிறது. காற்று
மண்டலத்திலுள்ள நீராவி சுருங்கும் போது நீராக மாறாமல் திடப்பொருளாக மாறும் நிலையில்
இது உருவாகிறது. நீராவி குளிர்ந்து சுருக்கமடைந்து ஏற்படும் நீர்த்துளிகள் மேகமாகவோ
மழையாகவோ பனியாகவோ கல்மாரியாகவோ படிவதில் இந்நிலை உருவாகிறது. பனி மழைத்துளிகளின் அளவில்
கோள வடிவத்திலுள்ள உறுதியான பனிக்கட்டி சிறுகல்மாரியாகும். இவை தூறல் மழை பெய்யும்
போது அமையும்.
காற்று மண்டலம் மிகவும் நிலைபாடற்ற நிலையில் இருக்கும் போதும், இடி மின்னலுடன் கனத்தமழைப் பெய்யும் பொழுதும் பெரிய பனிக்கட்டிகள் கல்மாரியாக விழுகின்றன.
இலக்கியத்தில்
ஆலி
உறை வீழ் ஆலி (ஐங்.213,3) என்பதால் மழைத்துளியுடன் ஆலியும் விழுவது புலப்படுத்துகிறது.
நுங்கின் கண் போன்று அமையும் ஆலி என்பது,
”இரு விசும்பு இவர்ந்த கருவி மாமழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தலை போல்
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை”
(அகம்,304,1-5)
கழங்கின் வடிவில்
விழுந்த ஆலி பற்றியும் அறிய முடிகிறது.
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி
பெயல் தொடங்கின்றால் வானம் (அகம்.334,8-9)
இவை ஆலங்கட்டி
மழையாகிய பெருங்கல் மாரி நிலையின என இலக்கியங்கள் வழி அறியலாம்.
Comments
Post a Comment