மொழி வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு
மக்கள்
தொடர்பு சாதனங்கள்
தொடக்கத்தில் தகவல்களைத்
தெரிவிக்கவும், அறிவுறுத்தவும் தோன்றின.
இவற்றிற்கு மேலாக
மூன்றாவதாகப் பொழுது
போக்குக் கூறுகளுடன்
மக்களை மகிழ்விக்க
வேண்டியப் பணிகளை
விரிவடையச் செய்தனர்.
ஆனால் இம்மூன்றாவது
கூறு மனித
சமுதாயத்தின் பண்பாட்டைச்
சிதைத்து சீரழிக்கும்
தன்மையைப் பெற்று
விளங்குகிறது. இதழ்கள்
மக்கள் நலனையும்,
பண்பாட்டு வளர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் கருத்தில்
கொண்டவையாக விளங்குதல்
வேண்டும்.
ஆனால்
இன்றைய இருபத்தோராம்
நூற்றாண்டில் நிலைமை
முற்றும் முரண்பட்டு
விளங்குதல் கண்கூடு.
பணத்தை முதலீடு
செய்துள்ள இதழ்கள்
முதலாளிகள் பணம்
பண்ணுவதற்கும் இதழியல்
ஒரு நல்ல
களம் என்று
கருத வாசகப்
பெருமக்களின் மனத்தைப்
பண்படுத்தி உயர்த்திப்
பண்பாட்டையும் அறிவையும்
வளர்த்துச் சமுதாய
ஒழுக்கத்தைக் கட்டிக்
காப்பதற்கு மாறாகச்
செயல்படுகிறார்கள். இத்தகைய
சூழ்நிலையில் உயர்வான
சமுதாயத்தையும், மொழியையும்
வளர்க்கும் நோக்கில்
உருவானதுதான் சிற்றிதழ்கள். சமூகத்தைச் சீரமைத்து, முற்போக்காக
சிந்தித்து, மானுடத்தின்
விழிப்புணர்வில் துணை
நின்று மொழி
வளரக் காரணமாக
உள்ள சிற்றிதழ்களின் தன்மையைக் காண்போம்.
தமிழ் சிற்றிதழ்கள்
19 – ம் நூற்றாண்டிலேயே தமிழ் இதழ்கள் துவங்கப்பட்டுவிட்டன. எனினும்
இதழியலை அதன்
நுட்பத்தைப் புரிந்து
கொண்டு வெளிவந்த
இதழ்கள் 20 – ஆம்
நூற்றாண்டில்தான் பரவலாக
வெளிவந்தன. சிற்றிதழ்
வரலாறும் 20 – ஆம்
நூற்றாண்டில் தான்
பரவலாக வெளிவந்தன.
ஒரு நூற்றாண்டை
முடித்துவிட்டு மறு
நூற்றாண்டில் காலடி
எடுத்து வைத்துள்ள
நிலையில் சிற்றிதழ்களின் நூற்றாண்டு வரலாறு தொகுக்கப்பட்டுள்ளதா? எனில்
பெரும் ஏமாற்றமே.
தமிழக சிற்றதழ்களின்
வரலாற்றை படம்பிடிக்கும் நூல் இதுவரை வெளிவரவில்லை.
20 – ஆம்
நூற்றாண்டின் துவக்கத்தில்தான் இதழியல் வெகுசன இதழ்கள்
என்றும் சிற்றிதழ்கள்
என்றும் இருவகையாகப்
பிரிந்தன. 20 – ஆம்
நூற்றாண்டுத் தமிழ்
இதழ்களைப் பற்றிய
தகவல்கள் நூல் வடிவம்
பெறவில்லை.
அரசு அதிகாரத்திற்கு ஒத்துப்
போகின்ற வியாபார
நோக்குடைய வெகுசன
இதழ்களால் சாதிக்க
முடியாத கருத்துச்
செறிவை தன்னுள்
அடக்கி ஒரு
வேள்வியாகத் தன்னை
அழித்துக் கொண்ட
போதும் கருத்துக்காக
வாழ்ந்தவைகள் தான்
சிற்றிதழ்கள் என்பார்
பொள்ளாச்சி நசன்.
சிற்றிதழ்கள்,
1.
தனிமனிதர் நடத்தும்
2.
குழுவினர் நடத்தும் இதழ்கள்
3.
இயக்கங்கள் நடத்தும் இதழ்கள்
சிற்றிதழ்களின் தமிழ்ப்பணி
நாட்டுக்கு
– மக்களுக்கு வீர
உணர்வை ஊட்டுவதற்கும்
தமிழ்மொழியில் மறுமலர்ச்சியைத் தூண்டுவதற்காகவும் வ.வே.சு ஐயர்
‘பால பாரதம்‘
இதழை இருபதுகளில்
தொடங்கினார். இதே
காலக் கட்டத்தில்
மகாகவி சுப்ரமணிய
பாரதியார் சமூக
சீர்திருத்த வேண்டி
‘இந்தியா, விஜயா,
சக்கரவர்த்தினி, போன்ற
இதழ்களைத் தொடங்கி
வைத்தார்.
பாரதியார் வழி தமிழை
வளப்படுத்தி, இளைஞர்களை
இலக்கியத் தொண்டில்
ஈடுபடுத்தும் நோக்கத்துடன்
சிந்தனை ஆற்றலை
வளர்த்துப் போலிக்
கருத்துக்களை அகற்றிப்
படைப்பிலக்கியத் தொண்டில்
ஈடுபடும் நோக்கில்
தோன்றியது தான்
மணிக்கொடி இதழாகும்.
இவ்விதழ் சிறுகதை
இலக்கிய வடிவத்தை
வளர்க்கப் பெரிதும்
உதவியது. தேசிய
விடுதலையுணர்வு, சமூகச்
சீர்திருத்தம், தனிமனித
மேம்பாடு, பண்பாட்டுப்
பாதுகாப்பு, மொழி
வளர்ச்சி, போன்ற
குறிக்கோள்களுடன் செயலாற்றிய
இதழ்கள் ‘சுதந்திர சங்கு, காந்திஜி, ஜெயபாரதம், லோகோ, பகாரி‘ போன்றவை
1940 களில் கலா
மோகினி, கிராம
ஊழியன், சக்தி,
தேனி போன்ற
சிற்றிதழ்களும் தமிழ்
மொழி வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் உழைத்தன.
சிற்றிதழ்களின் ஆற்றல்
இந்திய
விடுதலைக்குப் பின்
பணத்தின் ஆட்சி
இந்திய அரசியலில்
தலைத்
தூக்கிற்று. உயர்
குறிக்கோள்களுடன் தோன்றிய
அரசியல் கட்சிகள்
தங்கள் நோக்கங்களையும் காற்றிலே பறக்கவிட்டன. மேல்மட்டம்
முதல் சமுதாயத்தின்
அடிமட்டம் வரை
ஊழல் ஊடுருவிப்
பரவியது. மக்கள்
பகட்டான ஆடம்பரமான
வாழ்க்கையை விரும்பத்
தொடங்கினர். இச்சீரழிவுகளையும், கேடுகளையும்
எண்ணிச் சுட்டிக்காட்டிச் சமுதாய நல்லுணுர்வுடன் சில
அவ்வப்போது கட்டுரைகளையும், சிறுகதைகளையும்,
தொடர்கதைகளையும், வெளியிட்டு
வரத்தான் செய்தன.
ஆனால், அவை
யாவும் சில
நூறு வாசகர்களையே
சென்று சேர்ந்தன.
இவற்றை உணர்ந்த
‘வானம்பாடி‘ என்ற
சிற்றிதழ் கல்வியாளர்கள்
நடுவே ஒரு
புத்துணர்வை, மலர்ச்சியை,
ஏற்படுத்த முனைந்தது.
வானம்பாடி நாடு முழுவதும்
ஒரு பரப்பரப்பை,
தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனிப்பட்ட கட்சிகள்
இயக்க உணர்வுடன்
சிறு பத்திரிக்கைகளைத் தொடங்கி நடத்த முன்
வந்தன. முற்போக்கு
எண்ணமும், வணிக
நோக்குடைய பெரும்
பத்திரிக்கைகளின் போட்டியைத்
துணிந்து
எதிர்க்கும் எண்ணத்துடன்
தோன்றி ‘செம்மலர், அரும்பு, தாமரை, சர்வோதயம்’ போன்ற
இதழ்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
சிற்றிதழ் இயக்கமும் மொழி
வளர்ச்சியும்
எழுத்து இதழின் வெளியீடே
அன்று தொடங்கி
இன்று வரை
ஏராளமான சிற்றிதழ்கள்
தமிழகத்தில் தோன்றக்
காரணமாக அமைந்தது.
அறுபதுகளை விடவும்
எழுபதுகளில் சிற்றிதழ்களின் எண்ணிக்கை பல மடங்கு
பெருகியது. எழுபதுகளில்
வெளிவந்த தீபம்,
கணையாழி, ஞானரதம்,
வானம்பாடி, கொல்லிப்பாவை, யாத்ரா போன்ற இதழ்களுடன்
எண்பதுகளில் வெளிவந்த
ஸ்வரம், மீட்சி, லயம், மன்றில், காலச்சுவடு, விருட்சம், கனவு
போன்ற சிற்றிதழ்கள்
புதுக்கவிதை வளர்ச்சிக்குக் களம் அமைத்துக் கொடுத்தன.
தமிழ்
இலக்கிய வளர்ச்சியில் 90 களில் ஒரு தேக்க
நிலை ஏற்பட்டது.
இக்காலக் கட்டத்தில்தான் அதிக அளவில் பெண்
எழுத்தாளர்களின் படைப்புகள்
வெளிவந்தன. 21 – ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில்
மழை, பன்முகம்,
அட்சரம், பனிக்குடம்,
உயிர்மை போன்ற
இதழ்கள் வெளியீட்டைத்
தொடங்கின. பெண்ணிய
மொழிக்கான பக்கங்களை
விரிவுப்படுத்தும் இதழாகக்
குட்டி ரேவதியை
ஆசிரியராகக் கொண்டு
பனிக்குடம் வெளிவந்தது.
அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக
இணைய தளங்களில்
சிற்றிதழ்கள் பல
தோன்றித் தமிழ்
மொழி வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன.
இவ்விதழ்கள் இன்றைய
சூழலில் பின்
நவீனத்துவம், பெண்ணீயம், மார்க்சியம், தலித்தியம், சமூகவியல், மானிடவியல், பண்பாடு, கலை போன்ற
பல்வேறு துறைகளில்
சிறந்தக் கருத்துக்களை
வெளியிட்டு இலக்கிய
வளர்ச்சிக்குத் தொண்டாற்றி
வருகின்றன.
சிற்றிதழ்களின் நிலை
பல்வேறு
நிறுவனங்களில் பணி
ஆற்றுபவர்களும், மத்தியதர
வர்த்தக அறிவு
ஜீவிகளும், ஓய்வு
நேரத்தை இலக்கியப்
பணிக்காகச் செலவு
செய்பவர்களும், இலக்கிய
ஈடுபாடு உள்ளவர்களும், பணி இல்லாத பட்டதாரிகளும், இன்றைய இலக்கிய சூழலில்
கடந்த பல
ஆண்டுகளாக இலக்கிய
சிறு பத்திரிக்கைகளைத் தோற்றுவித்தனர்.
ஜனரஞ்சக வியாபார
பத்திரிக்கைகளை எதிர்த்து
இப்பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. சுமார் ஆயிரக்கணக்கானோர் இப்பத்திரிக்கைகளை இன்றும் படிக்கின்றனர். வேகமான பிரகடனத்துடன் சிறுசிறு
குழுக்களால் வெளியாகும்
இவ்விதழ்கள் ஓரிரண்டுகளுக்குள் பொருளாதாரக் காரணங்களுக்காகவும், வேறு பிற
காரணங்களுக்காகவும் அல்லது
இலட்சியம் நிறைவேறிய
பின்பு இவை
நின்று போகின்றன.
கணையாழி, தீபம்
போன்றவை சிறிது
வியாபார நோக்கோடு
வெளிவந்தவை. மேலும்
பொதுவுடைமைக் கட்சிகளின்
கலை இலக்கிய
ஏடுகளாகத் தாமரை, செம்மலர், சிகரம், மனிதன், மனஓசை, புதிய
கலாச்சாரம், போன்றவை
வெளிவந்துள்ளன. தாமரை,
செம்மலர், பல
ஆண்டுகளாகச் செயல்பட்டு
வருபவை. இவை
முற்போக்கு எழுத்தாளர்களின் களமாகச் செயல்படுபவை. கட்சிகளின்
கட்டுப்பாட்டிற்குள் கதைகள்,
கவிதைகள், கட்டுரைகளை
வழியாகச் சுரண்டப்படும்
மக்களுக்கு மார்க்சிய
அரசியல் விழிப்புணர்வை
ஊட்டும் நோக்கத்துடன்
செயல்படுபவை, நடை, கசடதபற, அஃயாத்ரா, சதங்கை, கொல்லிப்பாவை, சுவடு, வைகை
போன்ற சிறு
பத்திரிக்கைகள் இலக்கியத்தை
மட்டுமே பிரதானப்படுத்திப் பேசுகின்றன.
இலக்கிய
வெளிவட்டம், படிகள்,
பிரக்ஞை, பரிணாமம்,
போன்றவை இடதுசாரிப்
பண்புகளுடன் பண்பாட்டின்
ஏனைப் பரிமாணங்களையும் சுட்டிக் காட்டுகின்றன. இலக்கியம்
மட்டுமே அவற்றிற்கு
முக்கியமல்ல. சிறு
பத்திரிக்கைகளில் கவிதைக்கென்றே
தனி இதழ்கள்
பல தோன்றியுள்ளன. வானம்பாடி,
ஐ, தெருக்கூத்து, கவனம்,
ழ, ஸ்வரம்
போன்ற இதழ்களின்
பணி குறிப்பிடத்தக்கதாகும். மரபுக்
கவிதைகளுக்காகச் சுரதாவின்
‘கவிதை‘ மற்றும்
சுரதா தெசிணியின்
முல்லைச் சரம்,
வஹாப்பியின் குயில்,
போன்ற இதழ்கள்
செயல்பட்டன.
அரசு என்பது ஆதிக்கவர்க்கத்தின் நலனுக்காகவே அமைந்திருப்பதால் மக்களின்
உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை,
இலக்கியங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால்
சிறுபத்திரிக்கைகள் தொடர்ந்து
நடைபெற முடியாமல்
போகின்றது. மிகப்பரவலாகப்
பெரும்பான்மையோரை வாசகர்களாகப்
பெற்றுள்ள செல்வாக்குள்ள
இதழ்கள் செய்யாமல்
போன, செய்யத்
தவறிய தமிழ்
இலக்கியச் சாதனைகளைச்
சிற்றிதழ்கள் சாதித்து
நிலைநாட்டியுள்ளன. தமிழ்மொழி
மரபுவழிச் சிந்தனைகளையும், பண்பாட்டுப் பாதுகாப்பினையும் கோழி
அடைகாப்பது போல
இவ்விதழ்கள் காத்து
வருகின்றது.
தனித்தமிழ் இதழ்கள்
தமிழ்மொழியின் தொன்மை சிறப்பையும், கருத்து வளத்தினையும் எடுத்துரைக்கும் நோக்கில் பிறமொழி கலவாத
தனித்தமிழ் பரப்பும்
போக்கிலும் தனித்தமிழ்
இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்மொழி,
வளரும் தமிழ்
உலகம், தமிழ்ச்சிட்டு, எழுச்சி,
அறிவு, தமிழ்ப்பணி,
தீச்சுடர், வலம்புரி
முதலான இதழ்கள்
தனித் தமிழுக்காகத்
தோன்றியவை. தமிழ்ப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட
இதழ்களாகும். கடினமான செய்யுள் நடையில்
இருந்த சங்க
இலக்கியக் கருத்துக்களையெல்லாம் எளிய
இனிய உரைநடையில்
வழங்கின.
இலக்கணம்,
இலக்கியம், ஆராய்ச்சி,
திறனாய்வு, அறிஞர்களின்
கருத்து மோதல்கள்,
மரபுக் கவிதைகள்,
கோயில்கள், கல்வெட்டுகள், ஊர்களின் பெயர்கள் ஆகியவற்றின்
வரலாறு முதலிய
இலக்கியப் பணிகளை
இதழ்கள் மேற்கொண்டு
தானும் வளர்ந்து,
மொழி வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. ஞானசாகரம்,
தனித்தமிழ் இயக்கத்
தந்தையும், தமிழறிஞருமான
மறைமலையடிகளால் நடத்தப்பட்டது. இவ்விதழ்
‘அறிவுக்கடல்‘ எனத்
தமிழ்ப் படுத்தப்பட்டு
மதுரைத் தமிழ்ச்
சங்கத்தின் வாயிலாக
வெளியிடப்பட்டது. மேலும்,
குயில், செந்தமிழ்
செல்வி, மணிக்கொடி,
தாமரை, குடியரசு
ஆகியவையும் இலக்கிய
இதழ்களாகும். தமிழ்மொழியில்
வெளிவரும் தலைசிறந்த
இலக்கிய இதழ்களில்
ஒன்றாகவும், செந்தமிழ்
செல்வி விளங்குகின்றது. இவ்விதழில் இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், ச.வே.சுப்ரமணியன், தமிழண்ணல்,
அகத்தியலிங்கம், பொன்.
கோதண்டராமன் போன்றவர்கள்
பெரிதும் பாடுபட்டனர்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டாற்றியதோடு 1925 இல்
தமிழ்ப்பொழில் என்ற
இதழை வெளியிட்டது. இவ்விலக்கிய இதழ்களின் எழுச்சிக்
காலத்தை ‘மணிக்கொடிக்
காலம்‘ என்று
சிறப்பிப்பர். நாவல்,
சிறுகதை, திறனாய்வு,
ஆகியவற்றை இதழ்களில்
புகுத்திய பெருமை
இதற்கு உண்டு.
மேலைநாட்டு இலக்கிய
வடிவங்களை வ.வே.சு.ஐயர், மாதவையா,
வடுவூர் துரைசாமி,
வேதநாயகம் பிள்ளை
போன்றோர்கள் தொட்டுக்
காட்டிய பின்பு
புதினமும், தொடர்கதைகளும், இலக்கிய இதழ்களில் பெரிதும்
இடம்பெற்றன. இதற்குப்
பின்புதான் உலக
இலக்கியப் போக்குகளைத்
தமிழ் இலக்கிய
இதழ்களோடு ஒப்பிட்டுக்
காணமுடிகின்றது.
நிறைவாக,
சிற்றிதழ்களின் வரலாற்றையும், வளர்ச்சியையும் ஆராயுமிடத்து தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் வாழும்
இலக்கிய படைப்பாளர்களின் இலக்கிய வளர்ச்சிப் பணியில்
பங்கு
கொள்ளும் ஆர்வத்தின்
காரணமாக இச்சிற்றிதழ்கள் தோன்றின.
பொதுமக்களின் பொழுதுபோக்காக
அமையாததால், தரக்குறைவான
பசிக்குத் தீனியைப்
போட முடியாததாலும், தரக்குறைவான பசிக்குத் தீனியைப்
போட முடியாததாலும், இவை தமிழகத்தில் நிலைத்து
நிற்க முடியாமல்
போயின. மொழி
வளர்ச்சிக்கும், சமுதாய
வளர்ச்சிக்கும் இவ்விதழ்களில்
சில, குறுகிய
காலத்தில் மடிந்தாலும்
அவற்றின் சில
நாள் வாழ்வு
மறத்தற்கு இயலாத
ஒன்றாகும்.
சிற்றிதழ்கள் பல வழிகளில்
பணிபுரிகின்றது. இதனால்
நாடு வளர்ச்சியடையவும், மொழி வளர்ச்சியடையவும் பயன்படுகிறது. அரசியல்,
சமூகம், பொருளாதாரம், ஆகிய அனைத்துத் துறைகளின்
உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் சிற்றிதழ்கள் ஒரு பாலமாக
இருந்து மொழி
வளர்ச்சிக்கும் உறுதுணையாகும்
என்பதில் சிறிதும்
ஐயமில்லை.
Comments
Post a Comment