அரசும்
வேம்பும்
பிள்ளையில்லாதவர்கள் அரசும், வேம்பும் இணைந்த
மரத்தைச் சுற்றி வந்தால் பிள்ளை உண்டாகும் என்பர். இதை அஞ்ஞானம் என்பர். இதை விஞ்ஞான
அடிப்படையில் பார்த்தால், இயற்கையில் நமக்குப் பல வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றது.
அரச மரம் அதிக அளவான பிராண வாயுவை வெளியிடக் கூடியது. அதனால் மரத்திற்கு அரசன் என்ற
பொருளில் அரசமரம் என்று பெயர். அதே போல் வேப்பமரம் அசுத்தத்தை, (Pollution) சுத்தரிகரிக்கக்
கூடிய தன்மை கொண்டது. வேப்பமரக்கன்று உடல் நலத்திற்கும் நல்லது. ஒரு கிருமி நாசினியும்
கூட, அதைப்போல அரசமரக்காற்றும், வேப்பமரக்காற்றும் சேர்ந்து வீசும் இடத்தில் வைட்டமின்
E சத்து அதிகமாகக் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் ஹார்மோன் பக்குவநிலை
பெற்று, கர்ப்பம் தரிக்கச் சாதகமான சூழ்நிலை ஏற்படுகின்றது.
இப்படி மெய்ஞ்ஞானக் கருத்தான வேம்பு,
அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உண்டாகும் என்ற நம்பிக்கை விஞ்ஞான
ரீதியான உண்மை என்பதை உணரலாம். இப்படி ஒவ்வொரு மெய்ஞ்ஞான நிகழ்ச்சியும் விஞ்ஞான அடிப்படையில்
ஆராய்ந்தால், ஆழ்ந்த தத்துவங்களை அறியலாம்.
ஆத்மாவையே ஆராய்ச்சிப் பொருளாகக் கொண்டு ஆழ்ந்த, தெளிந்த ஆணித்தரமான உண்மைகளைக்
கூறுவது மெய்ஞ்ஞானம். அழியக்கூடிய பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்து விளக்கம் தருவது
விஞ்ஞானம். மனிதனுக்குப் பதிலாக, எதையும் செய்யக்கூடிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து
இயந்திர உலகத்தில் வாழ்பவர்கள் மேலை நாட்டு மக்கள். ஆனால், அமைதிக்காக, மெய்ஞ்ஞானத்தைத்
தேடி, நம் நாட்டை நோக்கி வருகிறார்கள். விஞ்ஞானத்தால் கிடைக்காத அமைதி, பல ஆயிரம் ஆண்டுகளாக
உள்ள மெய்ஞ்ஞானத்தில் கிடைக்கிறதென்று உணர்கிறார்கள்.
Comments
Post a Comment