நெற்றிப்பொட்டின்
மகத்துவம்
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். சிரசில்
மிக முக்கியமான நரம்புகள் நெற்றியின் நடு பொட்டில் சந்திக்கின்றன. நமக்கு ஏதாவது மறந்து
விட்டால் , அந்த இடத்தை அல்லது இரண்டு ஓரங்களையும் அழுத்தி யோசித்தால் ஞாபகம் வந்துவிடும்.
இந்த இடத்தை நெற்றிப்பொட்டு என்று கூறுவர். இந்த இடத்தில் பொட்டு வைப்பதால்தான் இதற்குப்
பொட்டு என்ற பெயரும் வந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
நமது சிரசில் நாசிக திருஷ்டி, பூமத்திய
திருஷ்டி என்ற மிக வலிமை வாய்ந்த இடம் உள்ளது. எப்படி பூமியில் பூமத்தியரேகை மிக
முக்கியமோ, அதுபோல் நமது நெற்றியில் பூமத்திய இடம் என்ற நடுப்பொட்டு மிக முக்கியம்.
இதுதான் மெஸ்மரிசப்புள்ளி(அரஸ்தானம்). இதைக் கொண்டுதான் பிள்ளைகளை மெஸ்மரிசம் செய்து
அழைத்துப் போய் விடுகிறார்கள். நாம் அந்த இடத்தில் பொட்டு வைத்துக் கொண்டால் நம்மை
மெஸ்மரிசம் செய்ய முடியாது. அதனால்தான் ஆண்களும் திருமண், ஸ்ரீசூரணமும் வலிமையையும்,
உஷ்ணம் அதிகம் உள்ள அந்த இடத்திற்குக் குளிர்ச்சியையும் கொடுக்கிறது.
சிறு குழந்தைகளுக்கு ஜவ்வரிசியில் சாந்து செய்து பொட்டாக வைப்பர். இது
குளிர்ச்சி தருவதுடன், திருஷ்டிபடாது என்பர். அதே போல் கரிசிலாங்கண்ணி இலை கழுவி சாறெடுத்துத்
தூய்மையான துணியை அதில் ஊற வைத்து, துணியை உலர்த்தி மீண்டும் பல முறை ஊறவைத்து காயவைத்தத்
துணியை த் தடியான திரியாக்கி, பெரிய மண் அகல்விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றித் திரியாக்கி,
ஒரு மண் சட்டியைச் சற்று காற்றுப் புகும்படி கவிழ்த்து வைத்தால் கெட்டியான கரும்புகை
படியும். இதனைச் சுத்தமான விளக்கெண்ணெயில் குழைத்து, கண்ணுக்கிட்டாலும், பொட்டாக இட்டாலும்
மிகவும் குளிர்ச்சியைத் தரும். விளக்கெண்ணெய் குளிர்ச்சியைத் தரவல்லது. குங்குமமும்
மஞ்சளால் செய்யப்படுகிறது. இது ஒரு கிரிமி நாசினி. இப்படி எத்தனையோ வகையில் கவசமாகவும்,
நல்ல ஆரோக்கியத்தையும் முகத்திற்கு அழகையும் தரவல்லது.
Comments
Post a Comment