Skip to main content

தமிழ் இலக்கியத்தில் பொருளாதார மேலாண்மை

   தமிழ்  இலக்கியத்தில் பொருளாதார மேலாண்மை

 

          பொருளியல் ஓர் அறிவியலாக மலரத் தொடங்கிய காலம் 18 – ஆம் நூற்றாண்டாகும்இக்காலத்தில் தோன்றிய அறிஞர் ஆடம்ஸ்மித் என்பவர் பொருளியலின் தந்தை எனப் போற்றப் பெற்றவர் செல்வத்தைப் பற்றிக் கூறுவதே பொருளியல் என்று பொருளியலுக்கு முதன் முதல் இலக்கணம் வகுத்தவரும் இவரேஇதன்பின் ஜே.எஸ்.மில் என்பார் செல்வத்தின் இயல்பையும் அதன் ஆக்கம்பகிர்வுதுய்ப்பு ஆகியவற்றைப் பேசுவதே பொருளியல் என்றார்எனவே பொருளியல் செல்வத்தைப் பற்றிய இயல் என்றே கருதப்பட்டதுகார்லைல்ரஸ்கின்டிக்கன்ஸ் போன்றோர் செல்வ ஈட்டம் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது என்றனர். ”செல்வத்தையும் மக்கள் நலத்தையும் பற்றியதே பொருளியல்” என ஆடம் ஸ்மித்துக்குப் பின் மாற்றல் பொருளியலுக்கு இலக்கணம் கூறினார்இதை ஒட்டியே கானன்பிகு போன்றோரும் பொருளியலுக்கு இலக்கணம் கண்டனர்.

   பொருளியல் அறிவியலாக மலர்ச்சி பெற்றது 18- ஆம் நூற்றாண்டில் தான்ஆயின அதற்கு முன்பே நம் முன்னோர்கள் பொருளியல் சிந்தனையில் வல்லவர்களாக வாழ்ந்தனர் என்பதைப் பண்டையத் தமிழ் இலக்கியங்கள் விளக்கிக் காட்டுகின்றனபொருளைப் பற்றிய கருத்துக்களைத் தமிழ் இலக்கியங்களில் ஆராயப் புகுந்தால் அவை அறவழிப் பொருளையே பெரிதும் வலியுறுத்துகின்றன.

தமிழ் இலக்கியங்களில் பொருளியல் 

      மனிதன் உலகில் வாழ்வதற்கும்அவனுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கும் அவனுக்குப் பொருள் தேவைப்படுகின்றதுதேவை கருதிய வாழ்வில் பொருளும் இடம்பெற்றுவிட்ட நிலையை இலக்கியங்கள் உணர்த்துகின்றனபிரிவு வகைகளைக் கூறும் தொல்காப்பியர்பொருள் ஈட்டுவதன் காரணமாக மேற்கொள்ளும் பிரிவினையும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடுவர்இதனை,

     மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய

      முல்லை முதலாச் சொல்லிய முறையாற்

      பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்

      இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே  (தொல்.பொருள்அகத்.30)

என்ற நூற்பா தெளிவுப் படுத்துகின்றதுஅடிப்படைத் தேவைகளான உணவுஉடைஉறையுள் போன்றவற்றைப் பெற்றுவையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும்ஈதல் முதலிய அறங்களைச் செய்து இம்மை மறுமைப் பேறு பெறுவதற்கும்இன்றயமையாதது பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்றும்,

     பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

      பொருளல்ல தில்லை பொருள்” (குறள்.751) 

என்று பொருளின் சிறப்பினைப் பாடினார் வள்ளுவர்.

பொருளீட்டும் நெறி

    பொருளானது ஒண்பொருள்நன்பொருள்அரும்பொருள்தீதின்றி வந்த பொருள் எனவும் சிறப்பாகப் பேசப்பட்டதுபொருளை ஈட்டும் நெறியும்செலவிடும் நெறியும் அறநெறியாக – செம்மை நெறியாக இருத்தலே நன்று என்று புலவர்கள் போற்றினர்.  திறமையறிந்து பொருளை ஈட்டவேண்டும்தீய நெறிகளை விலக்கிநேரிய வழிகளை மேற்கொண்டுஅவ்வழியிலேயே பொருளைப் பெற வேண்டும்அவ்வாறு பெறும் பொருளே அறத்தையும்இன்பத்தையும் நல்க வல்லது என்ற கருத்தை,

      அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து      

       தீதின்றி வந்த பொருள்        (குறள்.754)

என்று வள்ளுவர் அறிவுறுத்துவர்இவ்வாறே நாலடியாரும்,

       வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

         நடுவண் தெய்த இருதலையும் எய்தும்   (நாலடி – 114)

என்று குற்றமில்லாத பொருளைப் பெற்றால் அறமும் இன்பமும் பெறலாம் என்று  வலியுறுத்துகின்றது.

         பழியொடு பெறும் பொருளினும் வறுமை நிலையே சிறந்தது என்பர் வள்ளுவர் தீய நெறியில் ஈட்டிய பொருளைக் காக்க எண்ணுதல்பசிய மண்ணால் செய்த கலத்தில் நீரைப் பெய்து அதைக் காப்பாற்ற முற்படுதற்குச் சமம் என்று உவமை நயத்துடன் எடுத்துக்காட்டுவர்,பொருளின் தன்மையை,

     சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

      கலத்துணீர் பெய்திரீஇ யற்று    (குறள் -60)

என்ற குறள் விளக்கிக் காட்டுகின்றது.

இல்லறமும் பொருளும்

          அன்போடு கூடிய இல்லறம் பொருளின்றிச் சிறப்புப் பெறாது என்பதையும்அப்பொருளையும் அறவழியில் ஈட்டுதல் வேண்டும் என்பதையும்அகப்பாடல்கள் வலியுறுத்துகின்றனவாழ்க்கையில் அறம் பல புரிவதற்கும்பிறரிடம் இரந்து செல்லாது வாழ்வதற்கும் பொருள் தேவை என்பதை,

     அறன்கடைப் படாஅ வாழ்க்கையு மென்றும்

      பிறன்கடைச் செலாஅச் செல்வமு மிரண்டும்

      பொருளி னாகும்          (அகம் . 155:1-3)

என்ற கொள்கை அகவாழ்க்கையில் வளர்ந்ததுமுன்னோர் ஈட்டிய பொருள் கொண்டு வாழ்தலும்பொருள் முயற்சியின்றிச் சோம்பியிருத்தலும் அறமன்றுஇரத்தலினும் இழிவானது என்பதை,

      உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர

       இல்லோர் வாழ்க்கை யிரவினு விளிவு” (குறுந்.283:1-2)

என்று குறுந்தொகை சுட்டுகின்றதுகடத்தற்கரியன என்று கருதாது சுரநெறிகள் பலவற்றைக் கடந்தும்உயிரினும் இனிய தலைவியைப் பிரிந்தும்கடமை காரணமாக ஆடவர் சென்றதைப்பொருள்வயிற் பிரிவு என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றனகளவுகற்பு ஆகிய இருநிலைகளிலும் இப்பிரிவு நிகழ்ந்ததுகளவு காலத்தில் திருமணத்திற்கு வேண்டிய தலைவன் பிரிந்து சென்றதை பொருளீட்டத் தலைவன் பிரிந்து சென்றதை வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிவு என்றனர்கற்புக் காலத்தில் இல்லறக் கடமைகளை நிறைவேற்றத் தலைவன் சென்றதை,

        அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்

         பேரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்

         புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்

         பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்

                                                                                                      (கலி.11:1-4)

என்று கலித்தொகை கூறுகின்றது         

அரசும் பொருளும்

           பண்டைக் காலத்தில் முடியாட்சி வழக்கிலிருந்ததுஆயினும் மக்கள் நலம் பேணும் குடியாட்சிப் பண்புகளே அம்முடியாட்சியிலும் சிறந்து விளங்கினமன்னனை உயிராகக் கொண்டு வாழ்ந்தனர்மன்னர்தாம் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்து செங்கோல் ஆட்சி செலுத்தினர்அரசாட்சி நன்கு நடைபெறப் பொருள் இன்றியமையாதது என்பதை உணர்ந்த வேந்தர் நிலவரிசுங்கவரி முதலான வரிகளின் வாயிலாக மக்களிடமிருந்து பொருள் பெற்றனர்மக்களிடமிருந்து பெரும் பொருளானது வரிபுரவுஇறை என்ற பெயரில் வழங்கப்பெற்றது.

    உல்குவரி என்ற சுங்கவரியும் அரசு வருவாயுள் ஒன்றாக இருந்ததுஏற்றுமதிப் பண்டங்களுக்கும், இறக்குமதிப் பண்டங்களுக்கும் விதிக்கப்படும் வரியே உல்கு என்பதாகும்சோழ நாட்டில் சுங்கக் காவலர் பண்டங்களுக்குச் சுங்கவரி விதித்தனர்அவர்கள் பண்டங்களை நெஞ்சாலே மதித்து ஆராய்ந்த பின்னரே அவற்றிற்கு வரி விதித்தனர்அவர்களை,       

      நல்லிறைவன் பொருள்காக்கும்

      தொல்லிசைத் தொழின்மாக்கள்  (பட்டினப்.120-121)

என்றும்அவர்கள் சூரியனுடைய தேரிலே பூட்டப்பெற்ற குதிரைகள் போல இடையறாது செயல்பட்டனர் என்றும் பட்டினப்பாலை பகர்கின்றதுமக்களிடமிருந்து அரசன் பெற்ற வரியைப் ‘படுவது‘ என்று புறநானூறு குறிக்கின்றதுமன்னர் மக்களின் நிலையை அறிந்து அதற்கேற்ப வரி வாங்குதலைச் சிறப்பெனக் கருதினர்மேலாக வரி வாங்கும் முறைமைக்கு வேந்தனை,

       குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்

        சிறியோன்               (புறம்.75:4-5)

என்று சோழமன்னன் நலங்கிள்ளி இகழ்ந்துரைத்துள்ளான்பகைவரை இப்போரில் வெல்லோனாகில்,

      கொடியனெம் மிறையெனக் கண்ணீர்ப் பரப்பிக்

      குடிபுழி தூற்றுங் கோலே னாகுக    (புறம்.72:11-12)

னப் பாண்டியன் நெடுஞ்செழியன் வஞ்சினம் மொழிந்துள்ளான்இவற்றினின்றும் மக்களின் நல்வாழ்வைக் கருத்திற்கொண்டுவரிப்பொருள் பெற்று அறநெறி தவறாது மன்னர் நாடாண்டனர் என்பது தெளிவாகின்றது. ‘பொருள் செயல் வகை‘ என்ற அதிகாரத்தில் அரசு பொருளீட்டும் வழிவகையினை வள்ளுவர் தொகுத்தும் விரித்தும் காட்டுகிறார்.

      பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

      எண்ணிய தேயத்துச் சென்று    (குறள் 753)

என்று பொருளின் ஆற்றலை விதந்தோதுகிறார்பொருள் என்பது அழியுந் தன்மைதாக இருப்பினும்தன்னை உடையவரின் எண்ணத்தை முடித்து வைக்கும் இயல்புடையதாக இருப்பதால் அதனை ‘பொய்யா விளக்கம்‘ என்று குறிப்பிட்டுள்ளார்மன்னர்க்கு அரசியல் நடத்தப் பொருள் வேண்டப்படுவது என்றாலும்அப்பொருளையும் அறநெறியிலேயே பெற வேண்டும்அப்போது தான் அது அறப்பயனையும் இன்பத்தையும் நல்கவல்லது என வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

வணிகமும் பொருளும்

           அறநெறியில் பொருளீட்டும் வணிகரே ஈண்டுத் தாழ்விலாச் செல்வர் என்று குறிப்பிடப் பெற்றோர்சங்க காலச் சமுதாயத்தில் வணிகர் தமக்கோதிய அறநெறியினின்று தவறாததும்இல்லற நெறியினின்று பிறழாததும் மணிபொன்முத்து ஆகிய பல்வேறு பண்டங்களை விற்போராக விளங்கினர்வணிகர் நடுவுநிலைமை தவறாதவர் என்ற கருத்தைப் பட்டினப்பாலை மொழிகின்றது.

    வணிகத் தொழில் புரியும் வணிகர் அறம் நிலைபெற்ற நன்னெஞ்சினை உடையவர்அவ்வணிகர் உழவரின் நெடிய நுகத்திலே தைக்கப் பெற்ற பகலாணி போல நடுவு நிலைமை மாறாத நன்னெஞ்சினர் பொருளையும்பிறருடைய பொருளையும் ஒப்ப மதிக்கும் மனத்தவர் தம் குடிகளுக்குக் குற்றம் ஏற்படும் என்று அஞ்சி உண்மையே பேசும் இயல்பினர் என்பதை,

           நெடுநுகத்துப் பகல்போல

           நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

           வடுவஞ்சி வாய்மொழிந்து

           தமவு பிறவு மொப்ப நாடிக்

           கொள்வதூஉ மிகைகொளாது 

           கொடுப்பதூஉம் குறைகொடாது

           பல்பண்டம் பகர்ந்து வீசும்   (பட்டினப்.206-211)

எனப் பட்டினப்பாலை வணிகர் இயல்பினை விதந்தோதுகிறதுஊதியம் ஈட்டுவதை, அறநெஞ்சினை உடையவர்களாகவும்அவ்வணிகர் திகழ்ந்தனர்வாணிகம் இவர்களை அறநெறி பிறழாது இயற்றும் வேத வாணிகம் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் குறிப்பிடுவர்.

         இவர்களின் நேர்மை தவறாத பண்பினால் வடமலைப் பிறந்த மணியும்பொன்னும்குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்குணகடல் துகிரும்கங்கை வாரியும்காவிரிப் பயனும்ஈழத்துணர்வும் காழகத்து ஆக்கமும் போன்ற பன்னாட்டுப் பண்டங்களும் குவிந்து வளம் தலைதடுமாறிக் கிடக்கும் அகன்ற தெருக்களையுடையதாகக் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியதுவாணிகர் நடுவுநிலைமை தவறாமல் கொள்வதூம் குறைகொடாது வாணிகஞ் செய்து வந்தது தமிழர் தம் பெருமைக்கு மணிவிளக்காக ஒளிர்கின்றதுதமிழ் மக்கள் எந்நிலையில் நின்றாலும் எத்தொழிலைச் செய்தாலும் அறம் என்னும் வேலியிட்டு மானம் என்னும் கொடியேற்றி வைத்தே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்று டாக்டர் மு.வரதராசனார் குறிப்பிடுவர்இக்காலத்தைப் போலக் கள்ளச் சந்தையும்கலப்படமும்கறுப்புப் பணமும் போற்றாது அக்கால வணிகர் அருள் உள்ளமும் அறநேர்மையும் உடையோராகத் திகழ்ந்தனர்.

அறத்தின் மேன்மை

   அரசின் வெற்றிக்கு நாற்படையினும் அறமே நிலைத்த வெற்றியை விளைக்க வல்லது என்று புறநானூறு புகழ்கின்றது.

        சிறப்புடை மரபிற் பொருள மின்பமும்

        ஆறத்து வழிப்படூஉத் தோற்றம் போல

        இருகுடை பின்பட வோங்கிய ஒருகுடை

        உருகெழு மதியி னவந்துசேண் விளங்க

என்று சோழன் நலங்கிள்ளியின் வெற்றிச் சிறப்பினை அறத்தோடு சார்த்திக் கோவூக்கிழார் வியந்துரைக்கிறார்பண்டைத் தமிழர் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றவல்லது செல்வம் என்று கருதினர்எனவே செல்வமுடையோர் அறஞ்செய்தல் வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பெற்றதுஅங்ஙனம் பயன்படாச் செல்வ மேம்பாடு உடையோர் பாவத்தின் விளைவுகளாகக் கருதப்படும் ஊமைகுருடுஅறிவுத்துறைகூன்தசைப் பிண்டம்செவிடுவிலங்குகுறள் ஆகிய எண் பெரெச்சங்களை அடைவர் என்ற நம்பிக்கை நிலவியதுசுற்றாத்தாரை மகிழ்ச்சியுறச் செய்யவும்புகழை நிலைபெறச் செய்யவும் பொருள் பயன்பட வேண்டும் என்ற அறநெறியைப் புலவர் அறிவுறுத்தினர்அறவினை செய்தல் வேண்டும்நாம் செய்யும் அறவினையே தெப்பமாகும் என்று பரமனார் என்னும் அறிவுறுத்துகின்றார்.

நிறைவாக,

         பண்டைத் தமிழர் தம் வாழ்வில் அறம் பாவினுள் நூலிழைபோல் ஊடாடிக் கிடப்பதை இலக்கியங்கள் மூலம் அறியலாம்மக்களாட்சி மலர்ந்துள்ள இன்றைய சமுதாயத்தில் கொலையும்கொள்ளையும்பஞ்சமும்பட்டினியும்சூதும் களவும்பதுக்கலும்கள்ளச் சந்தையும்கறுப்புப் பணமும்ஊழலும் கையூட்டும்நியாயமற்ற விலைகளும்அதிக வட்டியும்ஒழுக்கக் கேடுகளும் மலிந்து கிடக்கின்றனஇவற்றிற்கெல்லாம் மூலக் காரணம் என்னஏன் இத்தகைய இழிநிலைஎன்ற வினாக்கள் எழுகின்றனஇவற்றிற்கு விடை காண முயல்வோமானால் மக்களிடம் அறவுணர்வுநீதி நெறி இவையில்லாமையே என்பது தெளிவாகும்.

    இப்படிதான் வாழவேண்டும் என்ற வரையறை இல்லாமல் எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் ஏற்படக் காரணம் என்னமனத்தின்கண் தூய்மையைத் தோற்றுவிக்கும் அறம் என்ற நல்லுணர்வு இல்லாததுதான் மக்களிடம் ஒழுக்கம்நேர்மைஅன்புபண்புவாய்மைபழிபாவங்களுக்கு அஞ்சும் தன்மை போன்ற நற்பண்புகள் ஓங்கி வளர அடிப்படையாக நிற்பது அறவுணர்வே இல்லாத காரணத்தால் நீதி நெறியும் அறவுணர்வு அறிவை திரிக்கும் போதைப் பொருட்களில் திளைத்துபொய்கூறிபுறம் பேசிப் பின் சென்றுஅவர் ஏவற்கு பணிந்து வாழ்தலே பெரும்பான்மையோர் நிலையாகிவிட்டதுஇத்தகைய சமுதாயச் சீர்கேடுகளெல்லாம் நீங்கமக்கள் மனதில் அறவுணர்வு தழைக்க வேண்டும்அறநெறியில் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும்அறவியலும்பொருளியலும் இணைந்து செயல்பாட்டால் தான் வாழ்வியல் செம்மையுறும்.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...