சமயமும் தமிழும்
சமயம், மொழி
இரண்டும் உலகில்
மக்களினத்தையும் அதனோடு
தொடர்புடைய பிற
உயிரினங்களையும் துன்பமற்ற
நல்ல நெறியில்
வாழ்விக்க அடிப்படைச்
சாதனங்களாக அமைவன.
உயிர்களின் தோற்ற வளர்ச்சியை
வரலாற்று எல்லையில்
ஆராய்கின்ற பொழுது,
அவ்வளர்ச்சியின் உச்சியில்
இன்று சிறந்து
விளங்குகின்ற மனிதன்
தன் இனவாழ்வின்
நெடுங்கால எல்லையில்
தனது இரண்டு
கண்களென இவ்விரண்டையும் உரிமையாக்கிக் கொண்டான்.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்‘
என்ற ஔவையின்
வாக்கும் ‘எண்ணென்ப ஏனை எழுத்தென இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு‘ என்ற வள்ளுவர்
வாக்கும் புலவரிடையில்
பல்வேறு பொருள்களைத்
தருகின்றன
என்றாலும் எண்ணப்படுகின்ற சமயநெறிகளையும்,
எழுதப்படுகின்ற மொழிமரபும்
மனிதனுக்குச் செம்மை
நெறிச் செல்ல
வழிகாட்டியாக அமைகின்றன.
இந்த அடிப்படையில்
எண்ணுதலாகிய சமயத்தையும்
எழுத்தாலாகிய மொழியையும்
இணைத்து,
“ எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தால்
மொழித்திறத்தின் முட்டாறுப் பானாகும்
மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதுநூல்
கலைதெரிந்து
கட்டறுத்த வீடு பெறும்;”
என்று எழுத்தில் தொடங்கி, அதனால் உணர்த்தப்
பெறும் மொழியில் நிலையறிந்த நல்லவனைச் சமய எல்லையில் எல்லா உயிர்களையும் ஏற்று அருளும்
வீட்டின்பத்தைப் பெற வழிபாட்டுகின்றன.
அவ்வவர் பொருளாய் வேறாம்
குறியது உடைத்தாய் வேதா
கமங்களின் குறியி றந்தங்
கறிவினில் அருளான் மன்னி
அம்மையோ டப்ப னாகிச்
செறிவொழி யாது நின்ற
சிவனடி சென்னி வைப்போம்
என்றுக் கூறிச் சமயங்களின் அடிப்படையாகவும், யாண்டும் நீக்கமற நிறைந்தாகவும் இறைவனைக் காட்டுவர். ஆக வழிபாட்டு முறைகள் எத்தனை வகையில் மாறுபட்டு இருப்பினும், அம் மாறுபாடுகளால் பல்வேறு போராட்டங்கள் உலகில் நடைபெற்றனவாக வரலாறு காட்டினாலும் அவற்றை ஒதுக்கித் தள்ளி அறிஞர்கள் அனைத்தையும் கடந்து நின்று ஆண்டவனை அன்பெனும் பிடியில் அகப்படும் மலையாகக் கண்டு போற்றுவர். அம்மொழிவழி எழுந்த இலக்கியங்களுக்குமே உரியதாகும்.
இலக்கியமும்
சமயமும்
மணிமேகலை
யசோதர காவியம்
முதலான பிற
இலக்கியங்கள் பௌத்த
மதத்தையும், சிந்தாமணியும், சூளாமணியும் பிற இலக்கியமும்
சமண சமயத்தையும், இடைக்காலத்தில் எண்ணற்ற காவியப்
பேரிலக்கியங்களும், கணக்கற்ற சிற்றிலக்கியங்களும் வைதீகச் சமயத்தையும் நம்
நாட்டில் வாழ
வைக்கின்றன. மேலும்
கித்தேரி அம்மானை,
இட்சணிய மனோகரம்,
இரட்சணிய யாத்தீரிகம், திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற
இலக்கியங்கள் கிறித்துவ
சமயத்தை வாழவைக்கின்றன
சீறாப்புராணம். மஸ்தான்
சாகிபு கவிதைகள்,
மேலும் பல
இலக்கியங்கள் இசுலாமியத்தை
வாழ வைக்கின்றன. இவைகள்
மட்டுமல்லாமல் ஊர்தோறும்
வாழ்கின்ற சிறுதெய்வ
வழிபாட்டு முறைகளையும், விகற்பங்கள் அடிப்படையில் எழுந்த
சமயப் பிரிவுகளும், அவ்வவ் வட்டாரத்தில் வழங்குகின்ற
வாய்மொழிப் பாடல்களும்
தமிழ் மொழி
வளர்ச்சிக்கு உறுதுணையாக
உள்ளன. தமிழ்நாட்டில்
பரந்த எல்லைக்குட்பட்ட மொழிக்கும் சமயத்துக்கும் உள்ள
தொடர்பினை அறிந்தோம்.
மொழி ஆய்வு
முறைகள்
இருபதாம் நூற்றாண்டில் இதுவரையில் நடைபெறாத அளவில் மொழி ஆராய்ச்சி நடைபெற்றது. மேலை நாட்டில்
இத்துறையில் வல்ல அறிஞர்கள் பற்பல அடிப்படை உண்மைகளை ஆயந்து நாள்தோறும் வெளியிட்டுக்
கொண்டே வந்தனர். அடக்கிக் காணுகின்ற
உலக மொழிகளை ஒரு சில குடும்பங்களில் அறிஞர்கள் அக்குடும்பங்களுக்கெல்லாம் அடிப்படைப்
பிறப்பிடமாக ஒரு மொழி இருந்திருக்க வேண்டும் என்ற உணர்வினைப் பெற்று அதை நிலைநாட்ட
முயன்று வருகிறார்கள். சித்தியார் காட்டிய அறுவகைப் பெருஞ்சமயங்கள் போலவும் இன்றைய உலகில் வாழுகின்ற அறுவகைப்
பெருஞ்சமயங்கள் போலவும் மொழி அறிஞர்கள் பிரித்துக் காண்கின்றார்கள். அவற்றின் உட்பிரிவுகளும்
இவ்வெல்லைத் தாண்டிப் பல்கி பெருகுவது போன்றே எத்துணையோ மொழிகள் இவ்வெல்லையில் சிதைந்தும், அப்பாற்பட்டும், உறழ்ந்தும் பலவாகி
விரிந்து கிடப்பதை அம்மொழி நூற் புலவர்கள் அறிந்து வியக்கிறார்கள். கடவுளின் தன்மையை
ஆராய்கின்ற புலவர்கள் அறிதோறும் அறியாமை கண்டவற்றால் இறைவன் அனாதித் தன்மையை வியந்து
போற்றுகின்ற நிலையிலே மொழி ஆய்வாளர்களும் அம்மொழி மூலத்தின் அனாதித் தன்மையை வியந்து
போற்றுகிறார்கள். இவ்வாறு வியந்து பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், முதுமொழி நீ அனாதியென மொழிவதும் அற்புதமாமே என்று வாய்திறந்து
பாராட்டினார்.
அம்மொழியினை
இறைவன் தன்மையோடு இணைத்த அப்பெரும் புலவர்,
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தறித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி
இருப்பது போல்”
என்ற உவமைக் காட்டி
மொழியினைத் தம்
தாய்மொழியினை வாயாரப்
புகழ்கின்றார். இறைத்தன்மையையும், அவ்விறைவனது இயல்பான நாதவொலியையும், அவ்வொலிக்கிடையில் பெருநடம் புரியும்
அருளாட்சியையும், எண்ணிப்
போற்றும் பேரறிஞர்
அவர்கள் இறைவனுடைய
இயற்கைத் தன்மையையும், இனிய வடிவையும் மொழியினுடைய
இயற்கைத் தன்மை
இனிய வடிவு
இவற்றோடு பிணைத்து,
“இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச
செயற்கை கடந்து இயல்யிசையில் செய்நடமே
வாழியவே”
என்று வாயாரப் புகழ்ந்துள்ளார். இந்த அடிப்படையிலேயே
பண்டுதொட்டு இன்று வரை உலகில் வாழ்ந்த பன்மொழிப் புலவர்களும் சமயத்தையும், மொழியையும் இணைத்துச்
சிறக்கப் பாராட்டியுள்ளதை அறிகின்றோம்.
நிறைவாக,
மொழியும் சமயமும் தோன்றிய காலமும் நிலையும் அறிய முடியாது நீண்ட எல்லைக்குட்பட்டன
எனக் கண்டோம். இந்தப் பேரெல்லையில்
இரண்டும் எத்தனையோ மாற்றங்களைப் பெற்றுவிட்டன. உண்மை மறையுமோ என்ற அளவுக்கு பொய்யும் வழுவும் புகுந்த இடைக்காலங்கள்
பல இரண்டும் நிலைகெட்டு அழிந்து விட்டனவோ என்று எண்ணுமாறு கழிந்த இருண்ட காலங்கள் வரலாற்றில்
பல கிளைத்தெழுந்த பல்வேறு சமயங்களும் மொழிகளும் தம்முள் நடத்திய போராட்டத்தின் காரணமாக
மறைந்த உண்மைகள் கணக்கில. எனவே மனிதன் மனிதனாக வாழ்வதற்கும், மனித அடிப்படையே சமயமும், மொழியும் இவையிரண்டும் இன்று நாட்டில் அமையவேண்டிய வழியில் ஆக்கப்
பணியாற்றும் நெறியில் அமைந்தால் மக்கள் வாழ்வு வளமாகும்.
Comments
Post a Comment