தமிழர்களின்
வெறியாடல் வழிபாடு
சங்கமக்கள் பலி கொடுத்துசெய்த வழிபாட்டின்
வளர்ச்சியே வெறியாட்டாகும். இது சங்கமக்களின்
அகவாழ்வில் மிக இன்றயமையாத் திருப்புமுனையாகும். களவொழுக்கத்தில் இடம் பெண்ணின்
(தலைவியின்) உடலிலும் செயலிலும் மாற்றங்கள் ஏற்பட அவளுடைய நோயின் காரணத்தை அறிய அன்னையர்
நிகழ்த்தவதே வெறியாட்டு வழிபாடாகும். இது முருகனுக்குரிய வழிபாடாகும். முருகன் வேலன்
என்னும் பூசாரி வடிவில் வெளிப்படுவான் என்ற நம்பிக்கையே இதற்கு அடிப்படையாகும். பிற்கால
இலக்கியங்களில் இடம் பெறக்கூடிய தெய்வமேறல் போன்றவற்றிற்கு இதுவே தோற்றுவாயாகும்.
வேலன்
தலைவியின் மெலிவிற்கு முருகனே காரணம் என்பான். எனவே வேலன் வழியே முருகனை அழைத்தப்
பலிக்கொடுத்து வணங்கி தலைவியின் நோய்தீர நிகழ்த்தப்பட்டதே வெறியாட்டாகும். இதற்கு இடவரையறையும்
உண்டு. நள்ளிரவு நேரம் இதற்குரிய நேரமாகக் கருதப்பட்டது. வீட்டில் நல்லதோர் இடத்தில்
தினையையும் பலியிடப்பட்ட விலங்கின் இரத்தத்தையும் கலந்து தூவி, வேலனை அழைத்து வெறியாடல்
நிகழ்த்தப்பட்டு இதில், அவனது உணர்வுகளை மிகுவிக்கும் வகையில் இசைக்கருவிகள் முழங்கப்பட்டன.
இதற்குச் சான்றாக அகநானூற்றிலிருந்து,
”களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடி பலிக் கொடுத்
துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்”
என்பதாகும்.
இவ்வாறு சங்கமக்கள் செய்த வழிப்பாட்டிலிருந்து பின்வரும் செய்திகள் பெறப்படுகின்றன.
அவை,
·
இயற்கையோடு
இணைந்து வாழ்ந்த சங்கமக்கள் இயற்கைக் கூறுகளான, ஒளி, நிலம், கடல, காடு, மலை போன்றவற்றையும்
வழிபடுப் பொருள்களாகக் கொண்டிருந்தனர்.
·
இயற்கையைப்
பல்வேறு உருவில் வழிப்பட்டனர்.
·
மாயோன்,சேயோன்
என்றும் கடவுளுக்குப் பெயரிட்டு வணங்கினர்.
·
புராணங்களைப்
பற்றிய நம்பிக்கைகள், சங்க காலத்தில் இருந்தன. அதற்கு அடையாளம் சிவனுக்கு அவர்கள் வழங்கிய
பெயர்கள்.
·
கூட்டு வழிபாட்டு
முறையைப் பின்பற்றினர்.
·
நல்லக் கணவனை
அடைவதற்கு விலங்குகளின் எச்சில் உண்ணுதலையும் வழிபாடாய்க் கொண்டிருந்தனர்.
·
பலிக்கொடுத்தும்
வெறியாட்டயர்ந்தும் கடவுளை வணங்கினர்.
நிறைவாக,
சங்க மக்களின் வாழ்க்கை முறை வழிபாட்டில்
எதிரொலித்தது. இதற்கு, பலி கொடுத்து கடவுளை வணங்கியது சான்றாகும். அதாவது இனக்குழு
மக்களின முக்கியத்தொழில் வேட்டையாடுதல், எனவே அத்தாக்கத்தால் தோன்றியதே பலிக்கொடுத்துக்
கடவுளை வணங்கியதாகும். வெறியாட்டிலும் அத்தன்மை வெளிப்படுகிறது.
தலைவியின் மெலிவிற்கு முருகனே காரணம் என அஞ்சி வெறியாடு அயர்ந்தனர். இதில் தினையோடு
பலியிட்ட விலங்கின் குருதியைக் கலந்து வழிபாடு செய்தனர். அதன் மூலம் தலைவியின் நோயைத்
தீரக்கமுடியும் என நம்பினர். முருகனாகிய தொய்வம் வேலனாகிய பூசாரி வழி வெளிப்படும் நம்பிக்கையின்
அடிப்படையில் ஏற்பட்ட இவ்வெறியாடலே பிற்கால சிலம்பு முதலான இலக்கியங்களில் இடம்பெற்ற
தேய்வமேறல் என்பதற்குத் தோற்றுவாயாகும்.
Comments
Post a Comment