இதழ்களின்
இயக்கத்தால் மொழி வளர்ச்சி
·
மனிதனுடைய
அடிப்படைப் பண்பு, எதனையும்
தெரிந்து கொள்ள வேண்டும்.
·
தனக்குத்
தெரிந்த தகவலை,
எண்ணத்தை, செயல்பாடுப் பிறருக்குச் சொல்லவேண்டும்.
· பிறரைப்
பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற பலவகையான அடிப்படை ஆசைகளை உடையவன்.
மனிதனுடைய இந்த
செயல்பாடுகள் தான் ஒரு சமுதாயத்தை ஒற்றுமையுடைய சமுதாயமாக மாற்றிக் கொண்டு
இருக்கிறது.
அறிவியல் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சி என்று மனிதன் பல துறைகளில்
வளர்ச்சியடைந்தாலும் தொடர்பு கொள்வது என்பது மனிதனின் அடிப்படைத் தேவையாகும்.
அச்சுவழிச் சாதனங்களில் செய்தித்தாள்களும்,
பருவ இதழ்களும், முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதில் செய்தியை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். வேண்டுமென்கிற செய்தியைப் பாதுகாக்கலாம்.
செய்தித்தாளை வாசிக்க படிப்பறிவு இருந்தால் மட்டும்
போதுமானது.
இத்தகைய செய்தித்தாள்களின் மூலம் எவ்வாறு தமிழ் மொழி
வளர்ச்சியடைகிறது. மக்களின்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள துணைபுரிகின்றது என்பதையும் விரிவாகக்
காண்போம்.
இதழ்களின்
இயல்பு
வளர்ந்து வரும் நாட்டில் செய்தித்தாள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
செய்தித்தாளின் முதற்பணி செய்திகளை அச்சிடுவதாகும்.
இதழியல் என்பது மனித எண்ணங்களைப் பரிமாறும் ஒரு சிறந்த
சாதனமாக இருக்கின்றது.
செய்திகளை விற்பது என்பது பழமையான தகவலாகும். உலகின் முதல் இதழியலாளர்களுக்கு மக்கள் தங்களுக்குத் தேவையான
செய்திகளை இவர்களே கொடுத்து வந்தார்கள். ஆனால் நாள்தோறும் கொடுக்க முடியவில்லை. நீண்ட இடைவெளி
விட்டே செய்திகளைக் கொடுக்க முடிந்தது. கிட்டத்தட்ட 300 மைல்களுக்கிடையே செய்தி 10 நாளிலிருந்து 15 நாட்கள் ஆகியது. 18 – ஆம் நூற்றாண்டில் அச்சுக்கலையில் பல புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டன. செய்தித்தாள் வெளியிடுவது ஒரு தொழிலாக மாறியது. இன்றைய உலகில் நீங்காத இடத்தை இதழிகள் பெற்றுவிட்டன.
இந்நிலையில் பத்திரிக்கைகள் வளர்வதை அரசு விரும்பவில்லை. அரசு மறைக்க நினைக்கும்
உண்மைச் செய்தியைக் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். 19 – ஆம் நூற்றாண்டில்
பல மாற்றங்கள் ஏற்பட்டன. பத்திரிக்கைக்கென்று
போடப்பட்ட வரிகள் ஒழிக்கப்பட்டன. தந்தி, தொலைபேசிக் கண்டுபிடிப்புகள் அச்சுக்கலைக்குப் பல
உதவிகளைச் செய்தன. அச்சக்கலையில் விரைவும்
மலியும் ஏற்பட்டன. இயந்திர அச்சுச் சாதனங்கள்
கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகள்
பத்திரிக்கைகளைக் கொண்டு செல்வதற்குப் புகை வண்டிகள் உதவி செய்தன. இதனால் குறைந்த வருமானம் உடைய மக்கள் கூடப் பத்திரிக்கைகளை
வாங்கிப் படிக்கத் தொடங்கினார்கள். இருபதாம்
நூற்றாண்டு மக்கள் தொடர்பியலில் புது சகாப்தத்தைப் படைத்தது.
இதழியல் தன்மை
இதழ்கள் நினைத்தால் ஒரு
சமுதாயத்தை ஆக்கமும்,
அழிக்கவும் முடியும்.
சனநாயகத்தை உருவாக்கும்
ஒரு பெரிய
ஆயுதமாக விளங்குகிறது.
செய்தித்தாளின் முக்கியப் பணி
மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாகும். வட்டார,
தேசிய உலகச்
செய்திகளை மக்களுக்கு
முழுமையாகத் தெரிவிக்கின்றது. எல்லாத்துறைகளையும் ஊடுருவி மிகவும்
ஆற்றலுடைய சமுதாய
சக்தியாக உருவெடுக்கின்றன. மக்களின் கண்களாகவும், காதுகளாகவும்
செயல்படுகின்றன.
செய்தித்தாள்களின் முக்கியப் பண்பு
அறிவித்தல் ஆகும்.
அறிவித்தல் மட்டுமின்றி
அறிவுறுத்தல் பணியினையும்
செய்கின்றது. பொதுமக்களின்
செயல்களைக் கவனித்துக்
கொள்ளும் ஆய்வாளர்
போன்றும் மக்கள்
உரிமைகளைப் பாதுகாக்கும்
பாதுகாப்பாளர் போன்றும்
செயல்படுகின்றது. இதனால்
தான் ஹெரால்டு
லாஸ்கி (Herald Lasky) என்பவர், கூறும்போது
”உண்மையான செய்தி
கிடைக்காத மக்கள்
விரைவில் தங்கள்
சுதந்திரத்தை இழந்து
விடுவார்கள்” என்று கூறுகின்றனர்.
செய்தித்தாள்களின் முக்கியத்துவம்
இதழ்களின் முக்கியத்துவத்தை அமெரிக்காவில்
முன்னாள் ஜானதிபதியாக
இருந்த பிரங்கிலி
டிருஸ்வெல்ட் (Frankly D – roosevel) என்பவர் கூறும்போது ஜனநாயகத்தின்
அடிப்படைக் கூறுகளான
கல்விச் சுதந்திரம்,
பேச்சுச் சுதந்திரம்
போன்றவைகள் சுதந்திரமான
பத்திரிக்கை இல்லாவிட்டால்
கெட்டுவிடும் என்கிறார்.
அதே நாட்டின்
இன்னொரு ஜனாதிபதியான
தாமஸ் ஜெபர்சன்
(Thomas Jeffer sun) செய்தித்தாள்களே இல்லாத அரசை
விரும்புகிறீர்களா? அல்லது அரசே
இல்லாத செய்தித்தாள்களை விரும்புவீர்களா?
என்று கேட்டால்
அரசே இல்லாத
செய்தித்தாள்களையே விரும்புவேன்
என்று கூறுகின்றார். இதிலிருந்து இதழ்களின் சிறப்பிடத்தை
நாம் புரிந்து
கொள்ள முடியும்.
போர்க்காலங்களில் செய்தி இதழ்களின்
பணிகள் மிகவும்
நேர்மையுடையதாகும். பெரிய போர்
வீரரான நெப்போலியன்
கூறும்போது, ”நான் ஆயிரம்
குண்டுகளுக்குப் பயப்படவில்லை. ஆனால், நான் செய்தித்தாள்களுக்குப் பயப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
பருவ இதழ்கள்
மக்கள்
தொடர்பு சாதனங்களில்
ஒன்றான அச்சுவழிச்
சாதனம் பருவ
இதழ்கள் மிக
முக்கியமான இடத்தினை
வகிக்கின்றன. பருவ
இதழ்களை இரண்டு
பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கலாம்.
1.
அரசியல்,
பொருளாதாரம், அன்றாட
நடப்புப் பிரச்சனைகள், கலை அறிவியல், கலாச்சார
இதழ்கள்.
2.
சந்தை இதழ்கள், விளம்பர
இதழ்கள், வாணிப
இதழ்கள், கல்லூரி
இதழ்கள், தொழிலாளர்
இதழ்கள், வீட்டு
இதழ்கள்.
ஒரு குறிப்பிட்ட
கால இடைவெளியில்
வருவதை ஒட்டிப்
பருவ
இதழ்களை வாரம் ஒரு
முறை, காலாண்டுக்கு
ஒரு முறை,
அரையாண்டுக்கு ஒரு
முறை, ஆண்டுக்கு
ஒரு முறை
எனப் பகுக்கலாம்.
இதழ்களில் வெளிவருகின்ற செய்திகள்,
படைப்புக்கள், ஆகியவற்றைக்
கொண்டு பருவ
இதழ்களைப் பல்வேறு
வகைகளில் பிரித்துப்
பார்க்கலாம்.
1.
பொழுது போக்கு இதழ்கள்
2.
அரசியல் இதழ்கள்
3.
இலக்கிய இதழ்கள்
4.
கவிதை இதழ்கள்
5.
சிறுவர் இதழ்கள்
6.
அறிவியல் இதழ்கள்
7.
மருத்துவ இதழ்கள்
8.
கல்வி இதழ்கள்
9.
மகளிர் இதழ்கள்
10.தொழில்
இதழ்கள்
11.வளாக
இதழ்கள்
12.கொள்கை
விளக்க இதழ்கள்
13. வாணிப
இதழ்கள்
14. எழுத்தாளர்
இதழ்கள்
15. விளையாட்டு
இதழ்கள்
16. செய்தி
இதழ்கள்
17. சமய
இதழ்கள்
18. திரைப்பட
இதழ்கள்
19. புலனாய்வு
இதழ்கள்
20. சோதிட
இதழ்கள்
என்று பல இதழ்கள்
வளர்ச்சி அடைந்து
வருகின்றன. செய்தித்தாள்களைப் போல் செய்திகளை அறிவித்தல்
செய்யாமல் மகிழ்வூட்டலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
எல்லா வாசகர்களின் விருப்பங்களையும், நிறைவு செய்கின்ற வகையில்
பருவ இதழ்கள்
தகவல்களைத் தருகின்றன.
Comments
Post a Comment