Skip to main content

உமிழ்நீர்

 

உமிழ்நீர்


    உமிழ்நீரானது மனித, மிருக வாய்களிலிருந்து ஊறும் நுரை நிறைந்த நீராளமான பொருளாகும். இது வாய்சார்ந்த நெகிழ்ச்சிப் பொருளான ஓர் ஆக்கக் கூறாகும். உமிழ்நீர் மூன்று வாயூறல் சுரப்பிகளில் ஒன்றிலிருந்து மறைபொருளாய்ச் சுரந்த வண்ணமுள்ளது. மனித உமிழ்நீரில் 98 சதவீதம் தண்ணீரும், மிகுதி 2 சதவீதம் பல்சிறைப் பொருள்களான மின்பகுப்புக்கு உதவும் நீர்மப் பொருளும், சளி, கோந்து, பிசின் போன்றனவும், எதிர்ப்பு நுண்மங்களைச் சார்ந்த பல்சினைப் பொருள்களும், பல்வேறுபட்ட செரிமானப் பொருள் வகைகளும் இணைந்த ஆக்கமாகும்.

உமிழ்நீரின் பயன்கள்

   உணவு செரிமானத்தின் முதற்பகுதியாக உமிழ்நீரில் உள்ள செரிமான பொருள்கள் உணவிலுள்ள சில மாச்சத்தையும் கொழுப்பையும் கூறுக் கூறாக உடைத்து அணுத்திரண்சார்ந்த  சமதள நிலைக்குக் கொண்டு வருகின்றன. உமிழ்நீரும் பற்களுக்கிடையில் அகப்படும் உணவை உடைத்துப் பொடியாக்கி நுண்ணுயிர்கள் பற்களைச் சிதைவுறுத்துவதிலிருந்து பாதுகாக்கின்றது. மேலும், உமிழ்நீர் பற்களுக்கு எண்ணெய் பூசி உராய்வைக் குறைத்துப் பாதுகாத்து வருகின்றது.

    பறவைகள் பிசின் மிகுந்த உமிழ்நீரைக் கூடுகட்டுவதற்குப் பயன்படுத்துகிறது. நாகப்பாம்பு, விரியன், வேறு நஞ்சு கொண்ட இனங்கள் வெளியில் போகும்பொழுது நஞ்சைத் தங்கள் பற்களில் செலுத்திக் கொள்கின்றன. இவற்றிற்கு இடர் ஏற்படும்பொழுது நஞ்சைப் பாய்ச்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. உயிரினங்களின்  வகையான சிலந்தி (Spider), மயிர்கொட்டி (Caterpillar) ஆகியவை தம் வாயூறல் சுரப்பிகளிலிருந்து நூல் உருவாக்கித் தம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றன.

செரிமானம் (Digestion)

  நாம் உண்ணும் உணவை நீர்நயப்பாக்கி உணவுப் பெருங்குளிகையாக உருவாக்கிச் சுலபமாக விழுங்கப் பயன்படுவதுதான் உமிழ்நீரின் செரிமானச் செயற்பாடாகும். உமிழ்நீரின் செரிமானப் பொருள்கள் மாச்சத்தைச் சீனியாக மாற்றும் தன்மை கொண்டவை. இவ்வாறு உணவின் செரிமானம் வாயில் தொடங்குகின்றது. உமிழ்நீர்ச் சுரப்பியானது கொழுப்புச் செரிமானத்தை ஆரம்பிப்பதற்கு உமிழ்நீர் ‘லைப்பஸ்’ (Lipase) என்பதைக் கசியச் செய்கின்றது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் கணையம் முதிர்ச்சியடையச் சிலகாலம் தேவைபடுமிடத்து ‘லிபேசி’ என்பது கொழுப்புச் செரிமானத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. மேலும் பற்களில் ஏற்படும் நுண்மங்களைத் தடுத்தும் அவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத் துகள்களை அகற்றியும் ஒரு தடுப்புச் செயற்பாட்டை ஆற்றுகின்றது.

தொற்று மருந்தாகப் பயன்படல்

    வாயில் ஊறும் உமிழ்நீரில் இயற்கையாகத் தொற்றுத்தடை மருந்து இருப்பதாகப் பொது நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அதே போல் மிருகங்களில் நாய்கள், பூனைகள், விலங்குகள், மனிதக் குரங்கினம் உட்பட்ட அனைத்தும் காயங்களை நக்குகின்றன. நாயின் வாயூறல் காயங்களைக் குணப்படுத்துகின்றது.

  கெயின்ஸ்வில்லாவிலுள்ள புளோரிடாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புரதப் பொருளான நரம்பு வளர்ச்சி ஆக்கக் கூறினை சுண்டெலிகளின் வாயூறலில் கண்டுபிடித்துள்ளனர். இப்புரதப் பொருள் தோய்ந்த காயங்களை விரைவில் குணமடைய செய்ததைக் கண்டறிந்தனர்.

         நோய் உண்டுபண்ணக்கூடிய அதிக நுண்மங்கள் மிருக வாயை உறைவிடமாகக் கொண்டுள்ளன. தோல் நோய் போன்ற சில நோய்கள் வாய் மூலம் செலுத்தப்படக் கூடியவை. குருதி நச்சூட்டு அபாயம் கருதி மனித, மிருக கடிகாயங்களுக்கு முறையான உயிர் எதிர்ப்பு மருத்துவம் புரிய வேண்டும்.

வாயுலர்வு (Dry mouth)

    உமிழ்நீர்ச் சுரப்பிகள் தேவையான உமிழ்நீரை உருவாக்க முடியாத பொழுது வாயுலர்வு ஏற்படும். இது ஒரு பொதுப் பிரச்சனை, அழுத்தம் காரணமாக ஏற்படுகின்றது.

·    தடிப்பான உமிழ்நீர் காரணமாக முறையாகக் கதைக்கவும், விழுங்கவும் முடியாத உணர்வு ஏற்படுதல்.

  1.      வாயிலும், தொண்டையிலும் உலர் உணர்வு தோன்றுதல்.
  2.     வாயில் எரிவுணர்ச்சி தோன்றுதல்.
  3.     வாய்ப்புண் ஏற்படும் பொழுது, கட்டுப்பல் அணிவதில் சிரமம்   ஏறுபடும் பொழுது இவ்வாறு இருத்தல்.

வாயுலர்வின் காரணிகள் (Causes of dry mouth)

  •        வேறு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு.
  •       அழுத்தம்.
  •         தவறான குடிவகை.
  •      நரம்புச் சிதைவு.
  •       வாத நோய், நீரழிவு நோய், புற்றுநோய் சிகிச்சை, நரம்புசார் சீர்குலைவு

உமிழ் நீர் நாளொன்றுக்குச் சாதாரண மனிதனுக்கு 0.75 இல் இருந்து1.5 லிட்டர் வரை மதிப்பீடு செய்துள்ளனர். ஆனால் நித்திரை கொள்ளும் பொழுது இதன் அளவு பூச்சியம் நிலையில் உள்ளது.

நிறைவாக,

    நாம் அவசர உலகில் உணவை மென்ற சாப்பிடுவதில்லை. அதனால் அந்த உணவுடன் உமிழ்நீர் சேருவதில்லை. பாம்பு விழுங்குவது போல் நாமும் உணவை விழுங்குகின்றோம். செரிமானத்திலும் சிக்கலை உண்டுப் பண்ணி நாம் நோய்வாய்ப்படுகின்றோம். நல்ல உணவைக் கண்டால், நினைத்தால் நம்மிடம் உமிழ்நிரானது சுரக்கத் தொடங்கிவிடும். அதனை நாம் பக்குவமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி நாம் உணவை அமைதியாக மென்று உமிழ்நீரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நம் வாழ்நாளை அதிகரிக்கச் செய்து இன்ப வாழ்வினை அடையலாம்.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...