திருக்குறள்
– கலைஞர் உரையில் சில புதுமைகள்
திருக்குறள்
கலைஞர் உரை
‘முரசொலி‘ நாளேட்டில்
நாள்தோறும் எழுதப்
பெற்று ‘திருமகள்
நிலையம்‘ சார்பில்
1996 – ஆம் ஆண்டு
நூலாக வெளியிடப்பட்டது. ”இமய
மலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான்”
எனத் தமக்கே
உரித்தான முறையில்
திருக்குறளுக்கு உரை
எழுதுவதன் அருமைப்பாட்டைக் கலைஞர் அழகுற விளக்கியுள்ளார். கலைஞர் நடைமுறைக் கேற்றவாரும், திருவள்ளுவரின் உள்ளத்தைப்
புரிந்து கொண்டும்,
இதுவரை யாரும்
கூறாத புதிய
உரைகளைப் பல
குறள்களுக்கும் வழங்கியுள்ளார். அவை கலைஞரின் நடைமுறை
அறிவுக்கும், பல்துறை
அனுபவங்களுக்கும், அறிவு
நுட்பத்திற்கும், தனித்தன்மைக்கும் சான்றாக விளங்குகின்றன.
முப்பாலும் புதிய பார்வைகளும்
இருபதாம் நூற்றாண்டில்
தமிழகத்தில் புதிய
சிந்தனைகள் தோற்றம்
பெற்றன. இந்த
நூற்றாண்டின் பகுத்தறிவு
இயக்கமும், தமிழியக்கமும்
முப்பாலைத் தம்
பண்பாட்டுக் குறியீடாகத்
தேர்ந்தெடுத்துக் கொண்டதில்
வியப்பில்லை. முப்பாலின்
பண்டைய உரைகள்
கண்டனத்துக்கு உள்ளாயின.
ஆரிய சார்புடைய
பரிமேலழகர் உரை
வள்ளுவர் உள்ளத்திற்கு
இட்ட திரையே
ஆனது (பாரதிதாசன்)
எனக் கடுமையானத்
தூற்றப்பட்டது. பகுத்தறிவு
நோக்கத்தில் புத்துரைகள்
வழங்கப்பட்டன. புலவர்
குழந்தை, அறிஞர்
கா. அப்பாதுரை,
பாவேந்தர் பாரதிதாசன்,
நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி (1996) ஆகியோர்
முப்பாலுக்குப் பகுத்தறிவு
நோக்கில் உரை
வகுத்தனர். பெரியார்
ஈ.வெ.ரா.ராமசாமி
1940 ஆம் ஆண்டுகளிலேயே
முப்பாலுக்குப் பகுத்தறிவு
நோக்கில் விளக்கம்
சொல்லி வந்துள்ளனர். பெரியாரைப் பின்பற்றிய பகுத்தறிவாளரின் கொள்கைகளை,
”கடவுள்
ஆத்மா சிறுதெய்வங்கள் மறுப்பு
மோட்சம் சொர்க்கம் நகரம் மறுப்பு
கருமபலன் பலபிறப்பு மறுப்பு
பூசை
பண்டிகை பக்தி
விரதம் மறுப்பு
வருணாசிரம தருமம் மறுப்பு”
எனப்படுபவை ஆகும். இவற்றுக்கு
ஏத்த வகையிலேயே
பகுத்தறிவாளர்கள் முப்பாலுக்கு
உரை வரைய
முயன்றனர்.
அதிகாரப் பெயரில் புதுமை
கடவுள்
நம்பிக்கை என்று
தொடங்கியது என
உய்த்துணர முடியாத
அளவிற்கு மக்களினத்தில்
வாழ்வியல் பேரிடம்
பெற்று ஊடுறுவியுள்ளது. இந்நம்பிக்கையற்றவரை காண்பதரிது எண்ணுமளவிற்கு
மனித குலத்தில்
பெற்றுள்ளது. கடவுள்
வாழ்த்து இல்லாத
நூல்களே இல்லையெனும்
அளவிற்கு இஃது
இல்லாத நூல்களைக்
காண்பது மிகமிகக் கடினமாயுள்ளது.
இந்நிலையில் வள்ளுவர்
வகுத்தளித்த திருக்குறளுக்கும், ‘கடவுள்
வாழ்த்து‘ என்ற
அதிகாரம் காணப்படுகிறது. சமயவாதிகள் தங்கள் கடவுளையே
வள்ளுவர் வாழ்த்துவதாகக் கூறினாலும்,
குறளைக் கொண்டு
எந்தக் கடவுளை
வள்ளுவர் குறிப்பிடுகிறார் என அறிய இயலவில்லை.
ஆயினும் திருக்குறளுக்கு உரைகண்டோர் அனைவரும். கடவுள்
வாழ்த்து, இறை
வாழ்த்து என்ற
பெயர்களாலேயே இவ்வதிகாரத்தைக் குறிப்பிடுகின்றனர்.
தந்தைப் பெரியாரின்
அணுக்குத் தொண்டராய்
இருந்து ‘பெரியார்த் தொண்டர்‘, ‘கருப்புச் சட்டைக்காரர்‘ என்றழைக்கப்பட்ட பகுத்தறிவாளரான புலவர் குழந்தை அவர்கள்,
மக்களுக்குத் தேவையான,
மேன்மையான உயர்ந்த
குணங்களின் சிறப்புக்களைக் கூறுவது.
எனவே இறைநலம்
என இவ்வதிகாரத்திற்குப் பெயர் கூறினார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை
பெரியாரின் பேரன்பினைப்
பெற்று அவர்
வழியில் வாழ்ந்து
வரும் கலைஞர்
அவர்களோ, இவ்வதிகாரத்திற்கு ‘வழிபாடு‘
எனப் பெயர்
தந்து, வள்ளுவர்
எப்படி கடவுள்
பெயரைச் சுட்டவில்லையோ
அதைப் போன்றே
கடவுள் பெயரைக்
கூறாமல் விட்டதோடு
விட்டதோடு, இவ்வதிகாரக்
குறட்பாக்களுக்கும் நடுநிலையோடு
பொருள் தந்து
தானோர் பகுத்தறிவாளர்
என்பதை நிறுவியுள்ளார்.
குறட்பாக்களின் உரைப் புதுமைகள்
உலக மக்களனைவருக்கும் தேவையான
அறமனைத்தையும் பகரும்
குறளுக்கு அனைத்து
மக்களும் எளிதில்
பொருள் அறியும்
வகையில் காலத்திற்கேற்ப எளிய உரைகள் அவசியமானவை.
அவற்றின் மெய்பொருள்
அறிதல் மக்கள்
கடமை. இத்தகு
முயற்சியில் எவ்வித
சார்புமற்ற எளிய
உரையைப் பலர்
ஆக்கியிருப்பினும் கலைஞரின்
உரை இன்றைய
உலகுக்கேற்ற உரையாக
அமைந்துள்ளது. இக்கால
தேவையைச் சரியாக
ஈடுசெய்ய வல்லதாய்
எழுந்த்தே கலைஞர்
உரை என்னும்
தெரியுரையாகும் என்ற
மா.நன்னன்
கருத்து நோக்கத்திற்குரியதாகிறது.
”கற்றதனால் ஆய பயனென்கொள் வாலறிவன்
நற்றார் தொழாஅர் எனின்”
இக்குறளில் ‘வாலறிவன்‘ என்பதற்குத் தூய அறிவு
வடிவாகிய இறைவனெனப்
பொருள்கொண்டு, ஒருவன்
கல்வி கற்றதன்
பயன் இறைவனின்
திருவடிகளைத் தொழுதலே
என்றே பலரும்
உரைக் கூறியுள்ளனர். பகுத்தறிவாளராகிய புலவர் குழந்தை,
உண்மையறிவினை உடையவனது
நல்லதாள்களைத் தொழாராயின்
ஒருவர்க்குக் கற்றதனால்
உண்டாகிய பயன்
ஒன்றுமில்லை எனக்
கூறியுள்ளார்.
அறிவில் மூத்தவர்களை மதிக்கும்
பண்பாளாரகிய கலைஞர்,
”தன்னைவிட அறிவின் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான்
ஒருவர்
கற்றிருந்தாலும் அதனால் என்ன
பயன்?
ஒன்றுமில்லை”
என உரை கூறி
அறிவில் மூத்தவரே
உயர்ந்தோன், அவரிடம்
பணிந்து நடத்தலே
ஒருவர்க்குப் பயனுடையதாகும்
என்று அறிஞர்
அண்ணாவின் அறிவாற்றலின்
முன் பணிந்து
நின்று செயற்பட்டதனாலேயே தன் நிலை உயர்ந்துள்ளதைச் சுட்டாமல் சுட்டுகிறார்.
”வேண்டுதல் வேண்டாமை இறைவனடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”
வேண்டுதல் வேண்டாமையற்றவன் இறைவன்
என்றே இத்தனைக்
காலமும் கருத்துரைக்கப்பட்டு வந்த்தை மாற்றி கலைஞர்
அவர்கள்,
”விருப்பு வெறுப்புற்றுத் தன்னலமின்றித்
திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு
எப்போதும் துன்பம் ஏற்படுவதில்லை”
எனத் தெரிவித்து, தன்னலமின்றி
திகழ்பவர்க்கு மட்டுமன்று
அவர்வழி நடப்பவருக்கும் துன்பம் இல்லை. எனவே
தன்னலமற்ற வாழ்வு
உயர்ந்தது என்ற
சிந்தனையைத் தோற்றுவிக்கிறார்.
மேற்காட்டிய
புதியபொருள் உரைகள்
சொற் சிதைவிற்கோர்
மாற்றத்திற்கோ உட்படாமல்
நயமாக அமைந்திருப்பது கலைஞரின் புலமை நலத்திற்குச்
சான்றாக உள்ளன.
இவ் எளிய
உரை திருக்குறனின்பால் கலைஞர் கொண்ட பற்றின்
வெளிப்பாடாகும். குறளோவியமும், வள்ளுவர் கோட்டமும் கண்ட
கலைஞர் குறள்
முழுமைக்கும் உரை
வரைந்திருப்பது குறித்து,
”திருக்குறள் வகுத்திட்ட வாழ்க்கை நெறியொன்றே
திருவிடத்தின் பண்பாட்டு ஊற்றுக்கண்;
ஆகலின்
திருமறை உரைபொருள் எவரும் எளிதுரை
திருக்குறள் கருத்துரை வரையலானார் கலைஞர்
குறட்பா மொழிந்திடும் பொருளொன்றே எனினும்
குறள்பொருள் தெளிவார் உணர்திறன் வேறாகலின்
குறட்பா சொற்றொடர் புணர்வகை யாலன்றிக்
குறள்நெறி உளத்தூன்ற உரைத்தார் கலைஞர்”
பேராசிரியர் க. அன்பழகன்
அவர்கள் குறிப்பிடுவது
மிகையன்று, அவ்வாறே
முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ.விசுவநாதம்,
”கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைசிறந்து விளங்குவதற்குக் காரணம் அவர்
திருக்குறளை நன்கு படித்தனால்தான்” எனப் பாராட்டுகிறார். இத்தகு சிறப்பிற்குரிய டாக்டர்
கலைஞர் அவர்கள்
பல வழிகளிலும்
தம் திறனை
வெளிப்படுத்தியதோடு, திருக்குறளுக்கு உரையெழுதியதன்
மூலம் தாம்
ஓர் எளிய
சிறந்த உரையாசிரியர்
என்பதையும் நிரூபித்துள்ளார்.
சொற்பொருள் விளக்கம்
கலைஞர்
உரைகூறிச் செல்லும்போது
கையாளும் சொற்கள்
உரையின் தனித்தன்மையைப் புலப்படுத்துகின்றன.
‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து‘ (90)
என்ற குறளில்
உள்ள ‘முகந்திரிந்து‘ என்ற சொற்களுக்கு ‘முகங்கோணி‘
என்றும், ”நன்றி
மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று”
(108)
என்ற குறளில்
‘அன்றே‘ என்ற
சொல்லுக்கு ‘அக்கணமே‘
என்றும் கூறியுள்ளார். புணர்ச்சி பழகுதல் வேண்டா
(785) என்ற குறளில்
உள்ள ‘புணர்ச்சி
பழகுதல்‘ என்ற
தொடருக்கு ‘தொடர்பும்
பழக்கமும்‘ எனப்
பொருளைத் தெளிவாக
விளக்கியுள்ளார். அறம்
சூழும் (204) என்பதில்
உள்ள ‘சூழும்‘
என்ற சொல்லுக்கு
‘முற்றுகையிட்டு விடும்‘
என்றும் பொருள்
கூறுகிறார்.
கவிதை நடை
நட்பு என்ற அதிகாரத்தில்
உள்ள (786) ஆம்
குறளுக்குக் கலைஞர்
‘இன்முகம் காட்டுவது
மட்டும் நட்புக்கு
அடையாளமல்ல இதயமார
நேசிப்பதே உண்மையான
நட்பாகும்‘ என
கவிதை நடையில்
உரை கூறியுள்ளார். பகைமாட்சியில் உள்ள (864) ஆம்
குறளுக்குக் கலைஞர்
‘சினத்தையும்‘ மனத்தையும்
கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும் எப்போது
வேண்டுமானாலும் எளிதில்
தோற்கடித்து விடலாம்
எனக் கவிதை
நடையில் உரை
கூறியுள்ளார். ”குறிப்பறிவுறுத்தல்” என்ற அதிகாரத்தில் உள்ள
‘(1275) ஆம் குறளுக்குக்
கலைஞர் ‘வண்ணமிகு வளையல்களை அணிந்த என்
வடிவழகியின் குறும்புத் தனமான பார்வையை விட என்னை துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது”
எனக் கவிதை
உரை கூறியுள்ளார்.
நிறைவாக,
இதுகாறும்
கூறியவற்றால் திருக்குறள்
கலைஞர் உரை
நடைமுறைக்கேற்றது. பொருத்தமான
புத்துரை கொண்டது.
பகுத்தறிவால் இயன்றது;
உரைவளம் உடையது;
நடை நலம்
வாய்ந்தது; என்பவை
உறுதியாகும். உலகப்
பொதுமறையாம் வள்ளுவர்
செய்த வான்புகழ்
திருக்குறளுக்கு என்று
இன்று வரை
உரைகண்டோர் பலர்.
பொய்யாமொழிக்கு தம்
கருத்தை வலிந்தேற்றி
உரை கூறியோர்
சிலர். செந்நாப்போதகரின் செவ்விய வழியிலேயே உரைகண்டோர்
சிலர். இதில்
வள்ளுவர் நோக்கறியும்
முயற்சியிலே உரை
பகன்றுள்ளார் கலைஞர்.
Comments
Post a Comment