Skip to main content

இதழியல் துறையில் அறிவியல் தமிழ்

 

இதழியல் துறையில் அறிவியல் தமிழ்

 நாட்டில் கல்வித்துறையில் எல்லா நிலைகளிலும் தாய்மொழியே பயிற்றுமொழியாதல் வேண்டும். இல்லையேல் சிந்தித்துச் செயல்படும் அறிஞா்களை உருவாக்க இயலாது என்பார் பேராசிரியா் தாமோதரன்.  அறிவியல் சிந்தனை மனிதனின் முயற்சியை வளா்த்து செயலுக்குத் தூண்டுகோலாக அமைக்கிறது. இது காலநிலைக்கேற்ற வளா்ச்சி, வளா்ச்சிக்கான மாற்றங்கள், மாற்றங்களுக்கான அணுகுமுறை இவற்றை வழங்குவதோடு சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்யும் பணியையும் தூண்டுகிறது. ஒரு நாட்டில் காணப்படும் அறிவியலின் வளா்ச்சி அந்நாட்டின் தொழில் வளத்தையும், பொருளாதாரச் செழிப்பையும் மதிப்பிடும் ஓா் அளவுகோலாகக் கருதப்படுகிறது.

  அறிவியல் வளா்க்கும் வாயில்களுள் இதழ்கள் முதன்மையானவை. தமிழ் இதழ்கள் அறிவியலை வளா்க்க மேற்கொண்ட பணியினை நோக்குவது சிறந்தது. மேலும் இன்றைய கால கட்டத்தில் இதழ்கள் அறிவியல் தமிழ் வளா்க்க மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் குறிப்பிடுவது தேவையானது.

தமிழில் அறிவியல் இதழ்கள்

      அறிவியல் குறித்த செய்திகளை இதழிகளில் வெளியிடுவது தேவையாகின்றது. நாளிதழ்கள், வார இதழ்கள், திங்கள் இதழ்கள், பருவ இதழ்கள், போன்றவை அறிவியல் தமிழுக்கு உறுதுணை புரிகின்றன. தமிழ் இதழ்களின் காலகட்டத்தை மூன்று நிலைகளில் உள்ளடக்கலாம்.

            1. சமய காலக்கட்டம்

            2. விடுதலை இயக்கக் காலக்கட்டம்

            3. விடுதலைக்குப் பிந்திய காலகட்டம்

       இதழ்கள் அறிவியலை வெளியிடுதல் என்ற பணி தற்காலத்தில் ஏற்பட்டதன்று. 1831 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிகையின் பெயரேதமிழ் மேகசின்என்பதுதான். இதில் தான் பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் முதன் முதலில் வரத்தொடங்கின. அதனைத் தொடர்ந்துதினவா்தமானி‘ (1855) ‘ஞானவிநோதினி‘ (1877) முதலிய ஏடுகள் அறிவியல் செய்திகளை வெளியிடுவதில் ஆா்வம் காட்டின.

      19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் சமயச் சார்புடைய இதழ்களே தொடங்கப்பட்டன. ஆனாலும், சமயச் சார்போடு அறிவியல் செய்திகளும் கலந்து வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. சமயகால கட்டத்தையடுத்து இந்திய விடுதலைபோராட்டக் காலம் . தேசிய உணா்வை வளா்த்த இதழ்களில் சுதேசமித்திரன், இந்தியா, தேசபக்தன் போன்றவை சிறப்பிடம் வகித்தவை. அக்கால கட்டத்திலும்நல்வழி‘ (1922) தமிழா் நேசன்(1917) முதலிய இதழ்கள் அறிவியல் கட்டுரைகளுக்கும், அறிவியல் கலைச் சொற்களுக்கும் முதன்மை கொடுக்கலாயின. தெ..சொக்கலிங்கத்தின் காந்தி இதழ் குறுகிய காலக்கட்ட இதழ் (1931-1934). இவ்விதழிலும் அறிவியல் செய்திகள் இடம் பெற்றிருந்தன. ‘காந்திமலா்தோறும் அறிவியல் பற்றிக் கட்டுரையோ, துணுக்குகளோ தவறாமல் இடம்பெற்று வந்தன.

     இவற்றிலிருந்து அறிவியல் செய்திகள் இந்திய விடுதலை போராட்ட காலக்கட்ட இதழ்களிலும் இடம்பெற்றிருந்ததை அறியமுடிகிறது. இதனால் அறிவியல் செய்திகளுக்கென்று தனி இதழ் தொடக்கத்தில் இல்லை என்று தெரிகிறது.

கலைக்கதிர்

       இந்திய விடுதலைக்குப் பின்னா், தமிழில் வெளியிடப்பட்ட இதழ்களில் குறிப்பிடத்தக்கச் சிறப்புடன் அமைந்த இதழ் கலைக்கதிர். 1948 லிருந்து கலைக்கதிர் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அறிவியல் கருத்துக்களைத் தமிழில் சொல்ல இயலாது என்ற எண்ணம் நிரம்பியிருந்த காலம் கலைக்கதிர்  தோன்றி காலக்கட்டம். ‘அறிவியல் போக்கில் தமிழையும், அறிவியல் உணா்வு அடிப்படையில் தமிழா்களையும் ஒரு சேர வளா்க்க உதவும் வலுமிக்கச் சாதனமாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் கலைக்கதிராகும்.

           அறிவியலைத் தமிழில் தரவேண்டுமாயின் கலைச் சொற்கள் இன்றியமையாதது ஆகியன்றன. சுமார் 160 ஆண்டுகட்கு முன்பே தொடங்கப்பட்டது அறிவியல் தமிழாக்க முயற்சி. 1975 இல் தான் கலைச் சொற்தொகுதிகள் வெளியிடப்பட்டன. டாக்டா் கிரீன் போன்றோரின் மேலை நாட்டு மருத்துவ அகராதிகளையடுத்து சேலத்தில் இருந்த கலைச்சொல் சங்கப் பத்திரிக்கை, தமிழ்நேசன் முதலான பல இதழ்கள் கலைச் சொற்களை வெளியிட்டன. 1960 இல் மேல்நிலைக் கல்விக்கும், கல்லூரிக் கல்விக்கும் மாநில மொழியே பயிற்று மொழியாக வேண்டும் என்ற கொள்கையில் அரசுக் கல்லூரித் தமிழ்க் குழுவை அமைத்து, அதன் தலைவராக, ஜி.ஆா்.தாமோதரன் பணியாற்றினார். 1968 இல் பூ.சா.கோ அறநிலையம் புகுமுக (PUC) பட்ட வகுப்புகளுக்காக இரு கலைச்சொல் தொகுதிகளை வெளியிட்டது. அவை இயற்பியல் 3500 சொற்கள், வேதியியல் 4500 சொற்கள் எனும் தொகுதிகளாகும்.

    1959 இல் தோன்றிய குழுவைக் காட்டிலும் அதிகமாகக் கலைக்கதிர் இதழ் தன் தனி முயற்சியால் சுமார் 50 நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ளது. அவற்றில் பாதிக்கு மேற்பட்டவை அறிவியல் நூல்கள் ஏனையவை இலக்கியம், பொருளாதாரம், கல்வி போன்ற பிறத் துறை நூல்களாகும். இத்தகு நூல்களை வெளியிடுவதன் மூலம் கலைக்கதிர் நோ்முகமாகவும், மறைமுகமாகவும் அறிவியல் தமிழ் வளா்ச்சிக்குத் தொண்டாற்றி வருகின்றது எனலாம்.

சிறப்பு இதழ்கள்

            கலைக்கதிர் அறிவியல் தமிழுக்கு மேலும் ஆக்கம் தேடும் வகையில் மேற்கொண்ட முயற்சிகளில் அறிவியல் தொடா்பான சிறப்பிதழ்களை வெளியிட்டதைச் சுட்டலாம். அவற்றுள் சில, பயிற்சி மொழி, மலையியல், அறிவியல் வளா்ச்சி, அணு, விண்வெளிப் பயணம், வான்வெளிப் பொறியியல் அறிவியல் தமிழாக்கம், செய்தித் தொடா்பு போன்றவை.

     அறிவியல் தமிழ் மாத இதழாகிய கலைக்கதிர் தன் பணியால் தமிழா்கட்கு அறிவியல் சிந்தனை தமிழில் வளரத் தூண்டிய, துணை நிற்கின்ற இதழ். பல அறிவியல் நூல்கள் தோன்றவும் அறிவியல் கலைச் சொல் உருவாகவும் தொண்டாற்றி வரும் இதழ். மிக வேகமாக வளா்ந்து வரும் அறிவியல் யுகத்தில் புதிய கண்டுபிடிப்புக்களையும், பல அறிவியல் உண்மைகளையும் எளிய மக்களும் உணா்ந்து அவா்களது அறியாமையைப் போக்கிக் கொள்ளஅறிவியல் தமிழ்எனும் நூலையும் உருவாக்கி வெளியிட்டுள்ள கலைக்கதிரின் அறிவியல் தமிழ்ப்பணி அளவிடற்கரியது.

யுனஸ்கோ கூரியா்

          தமிழக அளவில் மட்டுமல்லாது உலகளாவிய அளவிலும் அறிவியலைத் தெளிவாகவும், பொருள் செறிவோடும் தமிழில் தரமுடியும் என்பதை ஆழமாகவும், அழுத்தமாகவும் உணா்த்தி, நிலைநாட்டிய பெருமையுனஸ்கோ கூரியா்என்னும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும்.

          இவையன்றி அமுதசுரபி, கங்கை, காவேரி, செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப் பொழில், போன்ற இலக்கிய இதழ்களும் அறிவியல் கட்டுரைகள் வெளியிடுவதில் ஆா்வம் காட்டியுள்ளன. அமுதசுரபியில் அறிவியல் தொடா்பான கருத்துக்களை வெளியிடுகின்ற பகுதிக்குவிஞ்ஞானம்என்று பெயா் கொடுத்திருக்கின்றார். இதழாசிரியா் கலைமகள், குமரிமலா், கோகுலம், செம்மலா், தாமரை, இந்தியா டுடே, மஞ்சரி, மினி பாக்யா, பூந்தளிர் போன்றவையும் அறிவியல் செய்திகளுக்கு இடமளிக்கின்றன. மேலும் துளிர், அறிவுச் சுடா், விஞ்ஞானச் சுடா், புலமை, தினமணிச்சுடா், போன்றவை அறிவியலின் பல துறைச் செய்திகளை வெளியிடுகின்றன.

         இளம் விஞ்ஞானி, மருத்துவ மலா், சித்த மருத்துவம், மருத்துவா், கால்நடைக் கதிர், வளரும் வேளாண்மை, நிலவளம், ஸ்பைஸ் இந்தியா, மூலிகை மணி, ஆரோக்கியம், ஹோமியோ நண்பன் முதலிய இதழ்கள் அறிவியல் துறைகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளன.

அறிவியல் மொழிபெயா்ப்பு இதழ்கள்

   அறிவியலைத் தமிழில் தரும் முயற்சிகள் 1830 – ஆம் ஆண்டிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் தான் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் தமிழ் பயிற்சி மொழியாக மாறியது. இந்த சூழ்நிலையை ஒட்டித்தான் அறிவியல் தமிழாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

           1830 இல் வெளிவந்ததமிழ் மேகசின்பத்திரிக்கைக்குப் பிறகு ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் வரையிலும் வேறு எந்தப் பத்திரிகையும் அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டதாகத் தெரியவில்லை. 1890 க்குப் பிறகு பல பத்திரிகைகள் அறிவியல் கருத்துக்களைத் தமிழில் கூறுவதில் ஈடுபாடு காட்டின. 1893 – இல்சட்டப் பத்திரிகைஎன்ற திங்களிதழ் வெளிவந்ததாகத் தெரிகிறது. அதற்கு அடுத்த ஆண்டிலேயேஞான பானுஎன்ற திங்களிதழ் கா.ஆலாலசுந்தரம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்தது. சீரிய அறிவுச் செய்திகளைச் செந்தமிழ் உலகிற்குப் புலப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இவ்விதழ் வெளிவரத் தொடங்கிறது.

           1897 இல் இரு திங்களிதழ்கள் அறிவியல் அறிவை மக்களுக்கு ஊட்டும் நோக்கத்துடன் உலா வந்தன. அவற்றுள் ஒன்றுஞான போதினிஇதன் ஆசிரியா் பூரணலிங்கம் பிள்ளை ஆவார். மக்களுக்கு அறிவு நலத்தை முற்றிலும் சிறந்த முறையில் வழங்குவதே இதன் நோக்கம் மற்றொரு திங்கள் இதழ்சிந்தாந்த தீபிகைஇதன் ஆசிரியா் கல்யாண சுந்தரநாடன், இது சமய ஞானம், தத்துவ ஞானம், கலை ஞானம், பூத பௌதீகம் முதலான சாஸ்திர ஞானம் ஆகியவற்றை மக்களுக்கு உணா்த்தும் நோக்கத்துடன் வெளிவந்தது. 19 ஆம் நூற்றாண்டு முடிய வெளிவந்த நூல்கள் பெரும்பாலானவை மருத்துவ நூல்களே.

            20 – ஆம் நூற்றாண்டு சேடன் பாபு இராசகோபாலாச்சாரியார்யூகிலிட்டின் சேஷத்திர கணிதப் பால போதினி (Geometry) என்ற மொழிபெயா்ப்பு நூலை மாணவா்களுக்காக வெளியிட்டார்.

       1908 – இல் நரசிம்மலு நாயுடு என்பார்கிருஷ் சாஸ்திரசார சங்கிரம்என்ற விவசாய நூலை வெளியிட்டார். இதே ஆண்டில் தான்ஆரோக்கிய வழி  திங்களிதழ் மக்கள் நல்வாழ்வை நோக்கமாகக் கொண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியா் டி..சாமிநாதையா். 1914 – இல் தொழிற் கல்வி திங்களிதழ் துவங்கப் பெற்றது. இதன் ஆசிரியா் வண்ணக் களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முதலியார். இவ்விதழ் தொழிற் கல்வியை மக்களிடையே பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப் பெற்றது. 1924 – ஆம் ஆண்டில்புதிய ஆரோக்கியம் நீடித்த ஆயுளும்என்ற மொழிபெயா்ப்பு நூலை பிலிப் எல்.நெல்சன் எழுதி வெளியிட்டார். இவ்வாண்டில் மருத்துவத் திங்களிதழ் ஒன்றும் சென்னையிலிருந்து வெளிவந்தது.

            01.04.1962 இல் தமிழக அரசுதமிழ் வெளியீட்டுக் கழகத்தினை (Bureau of Tamil Publications) நிறுவியது. பன்னிரண்டு கல்லூரிகளின் ஆசிரியா்களைக் கொண்ட இந்நிறுவனம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிட்டது. இக்கழகத்தில் மொத்தம் 35 மொழிபெயா்ப்பு நூல்களும் ஓா் உயிரியல் மூல நூலும் வெளியிடப்பட்டன. இக்கழகமே தற்போது தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்ற பெயரில் அறியப்படுகிறது.

        1963 ஆம் ஆண்டு தமிழ் வெளியீட்டுக் கழகமும் தென்மொழிகள் புத்தக டிரஸ்டும் (Southern languages book trust) இணைந்து மொழிபெயா்ப்புக் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட அறிஞா்கள் பங்கு பெற்றனா். இக்காலத்தில்தொழில் நுட்பம்என்ற ஆண்டிதழ் வெளிவந்தது. இவ்விதழ் கோவை பூசாகோ தொழில் நுட்பக் கல்லூரியின் முத்தமிழ் மன்றத்தாரால் வெளியிடப்பெற்றது. இவ்வாறாக அறிவியல் தமிழ் சிறக்கப் பல நூல்கள், இதழ்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நிறைவாக,

     அறிவியல் தமிழை வளா்க்க இதழ்கள் தங்கள் குழுவில் பலதுறைப் பேராசிரியர்களையும், வல்லுநா்களையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதழ்களில் தரமான அறிவியல் கட்டுரைகளை வெளியிட வேண்டும்.

  தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்படும் சில எளிய ஆய்வுகளையாவது தமிழில் வெளியிடச் சில இதழ்களை தனியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

            இதழ்களில் மொழிபெயா்ப்பாளா்களுக்கு மதிப்புக் கொடுத்து அவா்களது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இஃது அறிவியல் தமிழ் வளா்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும்.

  வேளாண்மை, மருத்துவம், பொறியியல், அறிவியல், சமுதாயவியல், போன்ற துறைகளிலும் மேல்நாட்டு இதழ்களுக்கு ஈடான ஆக்கமும், அமைப்பும் கொண்ட இதழ்களைத் தமிழில் வெளியிட செய்ய வேண்டும். இவை பல முயற்சிகள் மேற்கொண்டு செய்தால் அறிவியல் இதழ்கள் மேலும் வெளிவரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...