Skip to main content

இலக்கியத்தில் அறிவியலும் பிறத் துறைகளும்


இலக்கியத்தில் அறிவியலும் பிறத் துறைகளும்

        


          அமெரிக்கர்களுக்கு வரலாற்றுப் பழமை இல்லை. உருசியர்கள் பழமையைப் போற்றுவதில்லை. புதுமையை உயர்த்திப் பேசுவதில் இருநாட்டவரும் ஒன்றுபடுகின்றனர். இலக்கியங்களையும் அவற்றின் ஊடகங்களாகிய மொழிகளையும் கூட அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்கின்ற போக்கு இன்று வளர்ந்துவிட்டது. இலக்கியத்தை மனிதநேயவியல் (Humanology) என்கிறார் மார்க்சிம் கார்க்கி. கணிப்பொறியின் துணைகொண்டு செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) உருவாக்க இயலும் என்னும் அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளும் பயன்களும் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்குமேயன்றி இனிமையாக்க இயலாது என்றும் அந்த ஆற்றல் இலக்கியத்திற்கே உண்டு என்றும் கூறுகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இலக்கியமும் அறிவியலும் இரு கண்கள் என்று கருதுவதே சாலச் சிறந்தது.

இலக்கியத்தில் அறிவியல்

   சங்க இலக்கியத்தில் அருமையும் எளிமையும் வாய்ந்த குறுந்தொகையில் அம்மூவனார் பாடிய பாடலில் துஞ்சாமையின் கொடுமைகளைக் கூறி அதன் வழி உறக்கத்தின் உயர்வை வலியுறுத்துகிறார்.

         யார்அணங் குற்றனை கடலே பூழியர்

        மீனார் குருகின் காணலம் பெருதுறை

        வெள்வீத் தாறை திரையலை

        நள்ளென் கங்குலம் கேட்கும் நின்குரலே (163;1-5)

என்ற பாடல் மற்றும் கூவன் மைந்தன் (குறுந்தொகை 224) என்னும் புலவர் உளவியல் பகுப்பாய்வாளர்கள் (Phychoanysts) ஆய்ந்து கண்டுபிடித்த துஞ்சா நோயினை (Insomnia) அவர்கள் கருதிய போக்கிலேயே உரைத்திருக்கிறார்.

       கவலை யாத்த அவல நீளிடைச்

       சேன்றோர் கொடுமை எற்றி துஞ்சா

       நோயினும் நோய் ஆகின்றே

என்றார் உளவியல், உளமருத்துவம், இலக்கியம், சமூகவியல், தத்துவம், ஆகிய துறைகளில் மேலைநாட்டவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்ற பூதான இயக்கத்தின் தந்தை வினோபாபாவே உரைத்தமை இங்கு நினைத்துப் பார்த்தற்குரியது.

       பசலை எனும் ஒருவகை குறுகிய காலத் தோலின் நிற மாறுபட்டு நோயினைப் புலவர்கள் குறித்திருக்கிறார்கள். இது பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகவும் உரைத்திருக்கிறார்கள். நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் நீர்களின் வேதியியல் வினை நிகழ்வால் ஏற்படும் மாறுபாடாக இருக்கலாம் என்று பெண் மருத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். உடலில் குருதியோட்டத்தின் அளவில் சிறிது குறைந்தால் தான் தோலின் நிறம் மாறுபடும் என்று மனிதத் தோலியல் குறைபாட்டு நோய் அல்லது ரத்த சோகை (Anemia) என்று அழைக்கலாம். இதில் பல வகை உண்டு. எனவே அறிவு இருந்ததோடு அதனைப் பற்றி இன்றைய அறிவியல் அறிஞர்கள் முழுநேர ஆய்வு நிகழ்த்தவும் குறிப்புகளை விடுத்துச் சென்றுள்ளனர்.

                 நோய்தந் தனனே தோழி

                 பசலை ஆர்ந்த நம்குவளையம் கண்ணே” (குறுந் 13)

மேற்கோளையும் இந்நோக்கில் ஆய்ந்தால் பல நுட்பங்கள் புலப்படும்.

இலக்கியத்தில் இயற்பியல்

        வேகம் (Speed)எனும் கோட்பாட்டினை அக்கால மக்கள் பதிய வைத்திருந்தனர்.

                நீரி மிகிற் சிறையுமில்லை தீமிகின்

                மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை

                வளிமிகின் வலியும் இல்லை

என்ற ஐயூர் முடவனார் பாடல் நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. நியூட்டன் அவர்கள் விசை (Force)  என்பதற்குக் கொடுத்த விளக்கத்தை வைத்து இப் பாடலை உற்று நோக்கும் போது இயக்கத்தினால் விசை உண்டாகிறது என்பது புலனாகிறது. ”ஓய்வு நிலையிலோ, தொடர்ந்த இயக்கத்திலோ இருக்கும் ஓர் ஆற்றலை விசையெனலாம்”. என்பதே நியூட்டனின் முதல் விதி ஒரு மணித் துளிக்கு எவ்வளவு கல் என்ற கணக்கீடுதான் வேகம் எனப்படும். எனவே நீரின் இயல்பான வேகத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்று உய்த்துணரச் சான்றோர்கள் வாய்ப்பளித்துள்ளனர். நியூட்டனின் இரண்டாவது விதி, பொருளின் விசைக்கு ஏற்ப இடமாற்றம் ஏற்படுகிறது என்று உய்த்துணரச் சான்றோர்கள் வாய்ப்பளித்துள்ளனர். நியூட்டனின் இரண்டாவது விதி பொருளின் விசைக்கு ஏற்ப இடமாற்றம் என்பது வினையும் மறு வினையும் அளவில் ஒத்தவை ஆயினும், எதிர் நிலையுடையன என்பது அவருடைய மூன்றாவது விதி.

   நியூட்டனின் அறிவியல் நோக்கு மூன்று விதிகளும் முன்னையோரின் விதிக் கொள்கையோடு முரண்பட்டுச் செல்வதை நோக்கலாம்,

            ……..நீர் வழிப் படூஉம் புணைபோல்

           ஆருயிர் முறைவழிப் படூஉம்  

என்ற கணியன் பூங்குன்றனார் வெளிப்பாட்டில் நியூட்டனின் இரண்டாவது விதியும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” “பிறர்க்கின்னர் முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் வினை விளை காலம்”  “தலைவிதி தடுக்கற்பாற்றோஆகிய இலக்கிய அடிகள் யாவும் நியூட்டன் அவர்களையே அவருடைய நண்பர்கள் வினவிய போதுமுறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட விதிக் கொள்கையே இயற்கை எனக்கு அறிவுறித்திய இவ் அறிவியல் கொள்கைஎன்று கூறினார்.

இலக்கியத்தில் வேதியியல்

   மிக அண்மைக் காலத்தில் தான் வேதியியல் என்பது முழுமையான அறிவியலாக உருப்பெற்றது என்பர். தமிழ் மொழியிலும் இயற்கையிறந்த நிகழ்வுகளைச் சுட்டாத பதினெண்சித்தர் பாடல்கள் சிலவற்றில் வேதியியல் கருத்துக்கள் பதிந்து காணப்படுவதாகக் கொள்ளலாம். கரியும் தண்ணீரும் சேர்ந்த கூட்டுப் பொருள் தான் மனிதன் என்கிறது வேதியியல்  ”காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடாஎன்று கூறியதிலிருந்து காற்றின் அளவு மனிதனுக்கு மனிதன் வேறுபடும் என்ற உண்மையை உணர்த்தினர். காற்றின் இயக்கமே உயிரின் இயக்கம் எனக் கருதினர். மூச்சுக் காற்று நிற்றலே இறப்பு என்றும் அவர்கள் கணித்தனர். உடலினுள் காற்றின் சீரான இயக்கத்தில் தடை ஏற்பட்டால் விரைவில் இறப்பு நிகழ வாய்ப்பு உண்டு என்றும் சுட்டினர்.

               அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

               மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்

               இடப் பக்கமே இறை நொந்தது என்றார்

               கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே

என்று திருமூலரின் திருமந்திரத்தில், மேற்கூறிய கருத்து வலிமை பெறுவதோடு உணவியல் (Dietics), உடலியல், நோயியல், ஆகியன பற்றியும் கருத்திழையோட்டம் இருத்தல் நோக்கத்திறகுரியது.

இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழலியல்

        சுற்றுச் சூழலை உயிரற்ற சூழல் மற்றும் உயிர்ச் சூழல் என இரு வகையாகப் பகுத்துள்ளனர். உயிரற்றதில் நிலம், பொழுது, காற்று, நீர், மலை ஆகியனவற்றையும் உயிர் சூழலில் ஓரறிவு முதல் ஆறறிவுள்ள மனிதன் வரையும் சேர்த்துள்ளனர். இவ் உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் இரையாக இருந்து தட்பவெப்ப நிலைக்கேற்பச் சுற்று சூழலின் சமன்பாட்டைச் சமநிலைப்படுத்துகின்றன (Ecological Balance) என்ற கருத்தே இன்றைய வல்லுநர்களின் முடிவு. தொல்காப்பியர் உரைத்த முதற்பொருளும் கருப்பொருளும் இவ்வறிவியல் உண்மையின் சாயலைப் பெறுகின்றனர்.

   “கோழிலை வாழை கோள்முதிர் பெருங்குலை எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலில் குரங்கின் உணவாக வாழை, பலா, தேன் ஆகியன சுட்டப்பட்டு ஒரு வகை உணவுச் சங்கிலி (Food Chain) குறிக்கப்படுகிறது. இத்தகைய குரங்கு, தன்னை உணவாகக் கொள்ளும் விலங்காகிய மடங்கலைக் கண்டு வெருவியதாக நற்றிணையில்,

         தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிலைக்

         குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென

         துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி

         …………

         …………..மருட்கை உடைத்தே  (நற்றிணை – 57)

என்பன அப்பாடல் அடிகள் மனிதன் தான் சுற்றுச் சூழல் பின்னணியை மாற்றியமைத்துச் சமன்பாட்டை முரணும்படியாகச் செய்கிறான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் மாற்றியமைத்த இயற்கைச் சூழலுக்குச் சிறந்து எடுத்துக்காட்டுகள். கடல் கொந்தளிப்பு, கடுங்காற்று கடுந்தீயினாலும் சூழல் மாறுபடும் என்று ஐயூர் முடவனார்(புறம் -51) பகர்ந்தமை சிந்தித்தற்குரியது.

இலக்கியத்தில் மண்ணியல்

       ஒரு நாட்டின் மேடு, பள்ளம், மலை, கடல், ஆறு ஆகியனவற்றைப் பற்றி ஆராயும் இயல் நில அமைவியல் ஆகும். இந்நாட்டின் அமைவியலைப் படம்படித்துக் காட்டுபவர்போல் காரிக்கிழார் புறநானூற்றில் பாடலொன்றைத் தொடங்கியிருப்பது இந்திய வரைபட ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும்,

          வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

          தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

          குணாஅது கரைபொருதொடு கடற் குணக்கும்

          குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

ஏன்னும் பாடலடிகள் தமிழகத்தின் நில அமைப்பினை நன்கு எடுத்துக்காட்டும்.

         மலையிலிருந்து விழும் அருவி படி போல் அமைந்து மலையைத் துளைப்பதோடு ஓரிடத்திலிருந்து ஒரு பொருளை எவ்வாறு மற்றோர் இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறது என்பதை நக்கீரர் தம் திருமுருகாற்றுப்படை அடிகளால் அறியலாம்.

          வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து

          ……………..

          இழுமென இழிதரும் அருவி    (திருமுருகாற்றுப்படை 207-209)

என்பன அவ்வடிகளாம். மண்ணியல் அறிஞர்கள் சுட்டும் பானைத்துளைகள்  அருவியின் இத்தகு ஆற்றலால்தான் நிலத்தில் தோன்றுகின்றன

நிறைவாக,

        1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 – ஆம் தேதி நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆஸ்கார் ஒயில்டு குறிப்பிட்ட சீன நாட்டுத் தத்துவஞானி இருக்கிறாரா என்று தேடிப் பார்த்தாராம். ஆனால் அவரைக் காண இயலவில்லை. ஆயின் ஒன்று மட்டும் உண்மை ஆஸ்கார் ஒயில்டின் கற்பனை தான் நிலவுப் பயணத்திற்கு உந்துதலாக (Motivation)  இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் மனம் திறந்து ஒப்புக் கொண்டனர். இலக்கியத்தையும் அறிவியலையும் பார்க்கின்ற மனிதன் ஒருவனே! கண்கள் பொதுவானவை. இலக்கியத்தில் ஒன்றாக இணைந்து இவ்வுலகத்திற்கு நன்மை விளைவிக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம். இலக்கியத்தின் நிழலில் அறிவியல் மறையும் என்பதில் ஐயமில்லை.

 

 

 

 

 

 

 

 

  

Comments

Post a Comment

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...