Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1

                                                                   என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1           Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக  வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும்  தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.        மாற்றி யோசி!   புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்!   தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் ச...

கற்க - தாய்மொழியில் கல்வியை...

 

கற்க - தாய்மொழியில் கல்வியை...

 

        சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற, கல்வி ஒரு கருவியாகப் பயன்படுகிறது. எனவே நாட்டிலுள்ள அனைவருக்கும் அடிப்படைக் கல்வியைத் தமிழ்மொழியில் வழங்கினால் மட்டுமே சமூக மாற்றம், சமச்சீர் வாழ்க்கை போன்றவை அமையும். எனவே தாய்மொழி வழிக் கல்வி என்பது ஒரு நாட்டிலுள்ள அனைவரையும் அனைத்து வகையிலும் சமமாக்கும் துலாக்கோலாகும்.  தாய்மொழிக் கல்வி என்பது உலகை எளிதில் புரிந்து கொள்ளவும், வாழ்வில் உயரவும் பயன்படுகிறது.

சமூக மாற்றம்

   ஒரு நாட்டின் கல்வியானது அந்நாட்டுத் தாய்மொழியைச் சார்ந்த இலக்கியங்களையும், நாகரிகங்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்க வேண்டும். கல்வி என்பது அறியாமையை அகற்றுவதோடு அல்லாமல் நாட்டில் வேலை இன்மையையும் போக்குவதாக இருக்க வேண்டும். ‘தாய்ப்பாலுக்கு ஈடு இணை இல்லாதது போல’ தாய்மொழிக் கல்விக்கும் ஈடு இணை இல்லை என்பதை உணரவேண்டும்.

        ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்பித்தால் குழந்தைகளின் மனங்களில் தெளிவாகப் பதியும். அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியைத் தருவதன் மூலம் குழந்தைகள் தெளிந்த அறிவையும், திறமையும் கொண்டிருப்பர். அறிவியல் தமிழ் நூல்கள் மிகுதியாக வெளிவர ஆவணம் செய்வதும் இன்றயமையாதது.

ஜெர்மனி, ரஷியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியலிலும், பொருளாதாரத்திலும் முன்னேறி உள்ளனர். காரணம் அங்கு தாய்மொழி மூலமே கல்வி அளிக்கப்படுகிறது. தாய்மொழி கல்வி கற்பதால்  மாணவர்களின் சிந்தனை ஆற்றல் பெருகும். தமிழ்வழிக் கற்பதால் செலவும், நேரமும் குறையும். இதனால் இன முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புண்டு.

தாய்மொழிக் கல்வியின் நன்மைகளாக..

       மொழியும், பண்பாடும் ஒன்றோடொன்று இணைந்தவை. பண்பாட்டை உணர வேண்டுமானால் குழந்தைகள் தாய்மொழிக் கல்வியில் இலக்கியங்களைப் படிக்க வேண்டும். தமிழ்மொழி பண்பட்ட மொழி. மொழியைச் சரியாகக் கையாள்பவன் தான் தானாகச் சிந்திக்க முடியும். சிந்தனையில் தெளிவிருக்கும். தமிழ் தமிழர்களுக்கு மொழிநிலை மட்டுமல்ல. தமிழ் இனத்தின் அடையாளம்.

          கல்வி என்பது ஒருவருக்கு உடல் என்றால் தாய்மொழி வழிக் கல்வி என்பது உயிராகும். பட்டம், பதவி, பணம் இவற்றோடு அக்கல்வியின் வழி பண்பும் அறமும் சேர்ந்து அமையவேண்டும். நம் முன்னோர்கள் குருகுலக் கல்வி, திண்ணைப் பள்ளி என்று தமிழ் வழியில்  அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு  நாகரிக வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதை அகழாய்வுகள் வழி அறிய முடிகின்றது.

நிறைவாக,

                ”எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

                 கண்என்ப வாழும் உயிர்க்கு”

என்றார் வள்ளுவர். கல்வி என்பது இரண்டு கண்களைப் போன்றது. இந்த உலகில் ஒரு மனிதன் நல்ல நிலையில் வாழவேண்டுமானால் கட்டாயம் அடிப்படைக் கல்வி அவசியமாக்கவேண்டும். ஆங்கிலம் கற்பதால் அறிவாளிகள் கிடையாது என்ற எண்ணம் மாறவேண்டும். எல்லா பள்ளிகளிலும் சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவேண்டும்.

          கணிப்பொறி உலகில் உலகெங்கும் ஒரே மாதிரி விசைப்பலகையை பெற்ற முதல் இந்திய மொழி தமிழ். இத்தகைய சிறப்பு மிகுந்தத் தமிழ் வழி கற்கும் மாணவருக்கு ஊக்கத் தொகை வழங்குவதை விட வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கலாம்.

 

Comments

Popular posts from this blog