Skip to main content

நிமித்தம்

 

நிமித்தம்

          பின்னர் நிகழப்போவதை முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகளையே நிமித்தம் என்று கூறுவர். இதனையே சகுனம் (Omen) என்றும் அழைப்பர். நிமித்தம் என்பது வாழ்வில் பின் நிகழவிருக்கும் நன்மைத் தீமைகளைச் சில குறியீடுகளின் வாயிலாக முன் உணர்த்துவதாகும்”. நன்னிமித்தம், தீ நிமித்தம் என நிமித்தம் இருவகைப்படும். தொல்காப்பியர் நாள் நிமித்தம், புள் நிமித்தம், பிறவகை நிமித்தம் என மூன்று வகையான நிமித்தங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.“    

          அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

          நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

          காலங் கண்ணிய ஓம்படை உளப்பட

          ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்

          காலம் முன்றொரு கண்ணிய வருமே” (தொல்.பொருள்.90)

அச்சம்தீமை வரும் என்று அஞ்சுதல், உவகைநன்மை வரும் என்று அஞ்சுதல், நாள்நன்னாள், தீ நாள் , புள்ஆந்தை முதலியன, காலங் கண்ணியவருங்கால குறித்தல் என்று உரைக் கூறியுள்ளார்.

நாள்கோள் பார்த்தல்

          மக்கள் ஒரு செயலை செய்வதற்கு முன் நாளும் கோளும் பார்த்தனர். கற்பு மணம் செய்து கொள்பவர்கள் கெட்ட நாளிலும் கெட்ட ராசியிலும் புணர்ச்சி நிகழ்த்த மாட்டார்கள். ஆனால் களவு மணத்தில் ஈடுபட்டுள்ள தலைவன் தலைவிக்கு இந்த நாள் கோள் பார்க்கும் வழக்கமில்லை.

          மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

           துறந்த ஒழுக்கம் கிழவோர்க்கு இல்லை  (தொல். பொருள் 135)

என்று தொல்காப்பியர் நூற்பா குறிப்பிடுகிறது.

          போர்வீரர்கள் போர் செய்வதற்குச் செல்லும் முன் நிமித்தம் பார்ப்பதற்குரிய மரமாக உன்ன மரம் விளங்கியது. இந்த மரம் தளிர்த்து இருந்தால் அரசனுக்கு நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையும், காய்ந்திருந்தால் தீமை ஏற்படும் என்ற நம்பிக்கையும் அக்கால மக்களிடத்தில் நிலவியது. இதனை,

          வாடா வள்ளி வயவர் ஏத்திய

           ஒடா கழல்நிலை உளப்பட ஒடா

           உடல்வெந்து அடுக்கிய உன்ன நிறையும்”(தொல்.பொருள்.புறத்)

என்னும் தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கிறது.

விரிச்சி கேட்டல்

       விரிச்சி கேட்கும் வழக்கம் அக்கால மக்களிடம் காணப்பட்டது. தொல்காப்பியர் இதனை, பாக்கத்து விரிச்சி என்று கூறுகிறது. நிரை கவர்வதற்காக செல்பவர்கள் அவ்வாறு செல்வதற்கு முன் மக்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களை அறியாமல் வந்த வாய்ச்  சொற்களை நிமித்தமாகக் கொள்வர். இதனை விரிச்சி  என்பதற்கு,

     ஒருவர் ஏதேனும் ஒரு செயலைப் பற்றிச் சிந்திக்கவோ அல்லது செயலாற்றவோ நினைக்கும் நேரத்தில் அயலிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளம் சொற்கள் தான் சிந்தித்த வற்றை இயைந்த்தாகவோ அல்லது இயையாத்தோ அமைந்து, மேற்கொள்ளப் போகும் செயலின் பயனை நிச்சயிக்கும் என நம்பிக்கை கொள்ளுதலே விரிச்சி எனப்படும்

விரிச்சி பார்க்கும் நம்பிக்கையை,

          படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

           புடைகெடப் போகிய செலவே புடைகெட”(தொல்.பொருள்.58)

தொல்காப்பிய நூற்பா விளக்கிக் கூறுகிறது. கட்டுப் பார்க்கும் நம்பிக்கையும், கழங்கு பாரக்கும் நம்பிக்கையும் தொல்காப்பியர் காலத்தில் இருந்தது.

         தொல்காப்பியர் காலத்தில் நல்ல நாள் பார்க்கும் நம்பிக்கையும், புள் நிமித்தம் பாரக்கும் பழக்கமும், விரிச்சி பார்க்கும் பழக்கமும் வழக்கிலிருந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...