விநாயகரின்
அறுகம்புல் -வரலாறு
தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி, அவர்களின்
இறைத்தேடுதலுக்கு முட்டுக்கட்டையாய் நின்று வன்மை புரிந்தான் அனலாசுரன். தேவர்களின்
நலம் காக்கும் பொருட்டு, அனலாசுரனை விநாயகர் விழுங்கினார். அப்போது விநாயகருக்கு ஏற்பட்ட
வெப்பத்தைத் தணிக்க, முனிவர்கள் அறுபம்புல்லைக் கொண்டு வந்து விநாயகருக்குச் சாற்றி
பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனால் விநாயகரின் வெப்பம் நீங்கியதாய் விநாயகப் புராணம்
கூறுகிறது.
விநாயகருக்கு உகந்த மூலிகைகளாக, எருக்கம்பூ,
செம்பருத்திப்பூ, அறுகம்புல் ஆகியவற்றை தமிழ்மரபு முன்நிறுத்தியது.
மேலும், மாவிலை, வில்வ இலை, மாதுளம் இலை,
தங்க அரளி இலை இவற்றாலும் விநாயகரைப் பூஜித்து வழிபடலாம். ஆனால் விநாயகர் சதுர்த்தியன்று
துளசி இலைகளால் மட்டும் பூஜிப்பது கூடாது.
அறுகம்புல்லின்
மருத்துவ குணங்கள்
· துவர்ப்புத்
தன்மை கொண்டுள்ளதால், உடலைப் பேணி வளர்க்கும் தன்மை கொண்டது.
·
இயல்பாகவே சிறுநீர்
பெருக்கும் தன்மை கொண்டது.
·
காயம்பட்ட இடத்தில்
உண்டாகும் இரத்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டது.
·
சொறி, சிறங்கு,
படர்தாமரை போன்ற குறைகளை வேரறுப்பதில் அறுகம்புல்லுக்கு நிகர் எதுவுமில்லை.
·
வயிற்றுப்பூச்சிகள்,
கிருமிக்கோளாறுகள் தீர்ப்பதில் இதுவே முன்னோடி எனலாம்.
அறுகம்புல்லில் தீராத வியாதி ஏதுவுமில்லை
என்றே சொல்லலாம். இது சர்வரோக நிவாரணி. தெய்வ வழிபாடுகள் நம் வாழ்வியலுக்கான வழிகாட்டி
எனலாம்.
Comments
Post a Comment