Skip to main content

தமிழர்களின் விளையாட்டுகள்

தமிழர்களின் விளையாட்டுகள்


     தமிழர்களின் விளையாட்டுகள் மக்களிடையே ஒற்றுமையையும், வீர உணர்ச்சியையும், ஊட்டும் ஒரு கருவியாகும். மக்கள் உடல் நலம் பெறுவதற்கு விளையாட்டு அவசியமாகும். விளையாட்டில் வெற்றி தோல்வியும் குறிப்பிட்டச் சட்டத்திட்டங்களும் உண்டுவிளையாட்டுக்களை வீர விளையாட்டுகள் என்றும், பொழுது போக்கு விளையாட்டு என்றும் இரண்டாகப் பிரிப்பர். விற்போர், மற்போர், சிலம்பம், சடுசடு, மஞ்சு விரட்டு போன்றவை வீர விளையாட்டுகளாகும். பந்து , ஆடு புலி விளையாட்டு, பல்லாங்குழி, சில்லி விளையாட்டு, தாயம், சேவல் சண்டை போன்றவை பொழுதுபோக்கு விளையாட்டுகளாகும்.

விற்போர்

          வில்லின் நாணில் அம்பை ஏற்றி எய்வதே அம்பெய்தல்  என்னும்  வில்வித்தை (archery) ஆகும். தொடக்க காலத்தில் அம்பை எய்து விலங்குகளை மக்கள் வேட்டையாடினர். போரிலும் வில்லம்பு முக்கிய கருவியாக விளங்கியது. வில்லைத் தனுசு என்னும் வடசொல்லால் வழங்குவர். தற்காலத்தில் அம்பெய்தல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிவருகிறது.

          வில்வித்தை இணையம், சுவிட்சர்லாந்து நாட்டு லவ்சேனி நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அதில் 140 உறுப்பு-நாடுகள் உள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துத் தன் குழுவில் இணைத்துக்கொண்டுள்ளது.

          ஒலிம்பிக் விளையாட்டில் 1900 ஆம் ஆண்டு முதல் வில்வித்தை விளையாட்டு இடம் பெற்று வருகிறது. கொரிய ஆண், பெண் போட்டியாளர்கள் இதில் முன்னணியில் திகழ்கின்றனர். 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் இந்த முன்னிலை தொடர்ந்தது

   சங்க காலத்தில் வில்வித்தை பெரும் போர் கலையாக கருதப்பட்டது, பல வகையான அம்பெய்தல் முறையும் பின்பற்றப்பட்டதாக தெரிகிறது. சங்ககாலத்தில் வில்லம்பு சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்றாகவும், வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது.

மற்போர்

          படைக்கலன்கள் ஏதுமின்றி இரு உடல்கள் மோதிக்கொள்ளும் வீர விளையாட்டே மற்போர்என்பர். மனித வரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்து எல்லா வகையான மனித இனங்களிடத்திலும் வழக்கத்திலிருந்து வந்துள்ளது. ஒரு குழு அல்லது இனத்தில் வலிமை மிக்க ஒருவன் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த வழக்கத்தின் பின்புலத்தில் இம்மற்போர்க்கலை தோன்றி உள்ளதாகக் கருதுகின்றனர். வலிமையும், ஆற்றலும் மிக்க ஒருவன் தலைவனாக இருந்தால் தான் தங்கள் எதிரிகளிடமிருந்து காக்க முடியும் என எண்ணியதே பலமிக்கவரைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தமைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

எனவே, பெரும்பாலும் மற்போரை ஒத்த மற்போர் முறை இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வந்துள்ளது எனச் சான்றுகள் ரிக்வேதத்திலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மையான காப்பியங்களிலும் கிடைக்கின்றன. சீனாவில் இம்மற்போர் கி.மு 300 க்கு முன் இருந்தே வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பண்டைய கிரேக்கர்கள் ஒலிம்பியா என்னும் சமவெளியில் சீசு என்னும் தம்முடைய தேவதையின் வழிபாடாக நடத்தி வந்த ஒலிம்பிக் ஆட்டங்களில் மற்போர் ஒன்றாக இருந்து வருகின்றது. மற்போரில் வெற்றி பெற்ற மல்லன் அக்காலத்தில் மக்களால் பெரிதும் மதிக்கப் பெற்றான். நாடு, மொழி, இனம், மதம் வேறுபாடு இன்றி அனைவரும் இக்கலையில் பெருவிருப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்யுத்தம் என உலகம் முழுவதும் போற்றிப் புகழப்பட்டு வருகின்ற வீர விளையாட்டு பண்டைய தமிழகத்தில் மற்போர் என்னும் பெயரால் தமிழர்தம் போர் முறைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. மல்என்பது வலிமை எனப் பொருள்படும். ஒருவன் தன் உடல் வலிமையால் செய்யும் போர் மற்போர் என்பர். மற்போர் புரியும் வீரன் மல்லன் என்று அழைக்கப் பெற்றான். தொல்காப்பியம் புறத்திணையில் இடம்பெற்றுள்ள வாகைத் திணையில் மற்போரின் வெற்றியைக் குறிக்கும் ஒரு துறையான மல்வென்றிஎன்னும் துறை இடம் பெற்றுள்ளது. இதனால் மற்போர் தமிழகத்தில் பண்டு தொட்டே நிலவி வந்துள்ளது என அறியலாம். புறநானூற்றில் மற்போர் நிகழ்ச்சி ஒன்று பாடலாக இடம்பெற்றுள்ளது.

இலக்கிய நூல்களில் மல்லரைப் பற்றிய செய்திகள் கலித்தொகை (52, 134) ஐந்திணை ஐம்பது (1) புறப்பொருள் வெண்பாமாலை (9, 4, 12, 3) போன்ற நூல்களில் காணப்படுகின்றன. பாரதப் போரை விவரித்து மகாபாரதத்தின் வீமன், சராசந்தன், கீசகன், கண்ணன் போன்றோர் சிறந்த மற்போர் புரியும் ஆற்றலுடையவர்களாக விளங்குகின்றன. இப்பாடல்களில் இடம்பெரும் செய்திகளைத் திரட்டினால் இந்திய மற்போர்க் கலையின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறிவிடலாம்.

எனவே, இருவர் கைகோத்துக் கால்களாலும், தலையாலும், இடித்தும், உரைத்தும் ஒருவரை ஒருவர் வெற்றி பெற வேண்டிச் செய்யும் போர் மற்போராகும். எனவே மற்போர்களின் வகைகளை எட்டு வகையாகப் பிரிக்கலாம். தொடக்கத்தில் பகைவரைக் கொல்லும் போர் முறைகளில் ஒன்றாக இருந்த மற்போர் பின்னர் வீர விளையாட்டுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மற்போர் கழகங்கள் உள்ளன. அவை நடத்தும் போட்டிகள் இந்தியா மற்போர் பெடரேசன் கண்காணிப்பில் நடைபெறும் முதல் உலகப்போருக்குப் பின் தொழில்முறை மற்போரின் போக்குகளினால் மற்போர் அழியத் தொடங்கியது விழாக்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன.

சிலம்பம்

          சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

          சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன.

          சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.

          மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்று சொல்வதுண்டு. தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர் என்று கூறப்படுகிறது.

          தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.

க‌படி (சடுகுடு) விளையாட்டு

  கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+ பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழுபேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள் சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடு களத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒரு பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக் கோடுகளைத் தாண்டி செல்லலா காது. இவ்விளையாட்டு க்கு ஒரு நடுவரும் தேவை.
         ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட் டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் கபடிக் கபடி” (அல்லது சடு குடு”) என்று விடாமல் கூறிக்கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடி படாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணி யிடம் திரும்பிவரும் ஒரு வகை விளை யாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் கபடிக் கபடிக்’ என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டு விட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் கபடிக் கபடிக்என்று சொல் வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும், பெண் களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.

ஆடுகளம்
           ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரைமண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட் டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத் தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.

பந்து விளையாட்டு

          துணி, ரப்பர் போன்றவற்றால் ஆன கோல வடிவமானப் பொருளை பந்து என்று அழைப்பர். இதை அடித்தும், உதைத்தும், தூக்கி எறிந்தும் விளையாடுவார்கள். கட்டிப்பந்து, எறி பந்து போன்ற பந்து விளையாட்டு கிராமப் புறங்களிலும், கால்பந்து, கைபந்து போன்ற பந்து விளையாட்டு நகர் புறங்களிலும் காணப்படுகின்றது.

ஆடுபுலி விளையாட்டு

          இவ்விளையாட்டைப் பதினைந்தாம் புலி என்றும், புலியும், நாயும் என்றும் அழைப்பார்கள். இவ்விளையாட்டில் மூன்று புலிகளும் பதினைந்து ஆடுகளும் உள்ளன. புலியை எங்கும் நகர விடாமல் கட்டுவதே இவ்விளையாட்டின் தலையாய நோக்கமாகும். புலியே வெட்ட வேண்டும். புலி ஒரு வேளையில் ஒரு வெட்டு வெட்ட வேண்டும். புலியும், ஆடும் நேராகவே நகரவேண்டும் என்பன போன்ற சில விதிகள் இவ்விளையாட்டில் உண்டு. கற்களைப் புலியாகவும், புளியங்கொட்டையை ஆடுகளாகவும் பயன்படுத்துவர். கிராமபுறத்தில் இன்றும் இவ்விளையாட்டு மிகுதியாகக் காணப்படுகின்றது.

பல்லாங்குழி

      இது மரக்கட்டையால் () இரும்பால் செய்யப்பட்டதாக இருக்கும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். இரண்டைக் காசிக் குழிகள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு குழியிலும் 12 காய்கள் போட்டு விளையாடுவர். இதில் இரண்டு பேர் முதல் ஆறு பேர் வரை விளையாடலாம். காலியான ஒரு குழியில் ஆறு காய்கள் சேர்ந்தால் பசு எனக் கூறி அதற்குரியவர் எடுத்துக் கொள்வார்கள். காய்கள் நிறைந்த குழிக்கு முன்னால் குழி காலியாக இருப்பின் நாம் குழியில் போட்டு வரும் காய்கள் காலியான குழிக்கு முன்னால் நிற்குமானால் காலியான குழியை விட்டு விட்டு அடுத்தக் குழியிலுள்ள காய்களையும், அதற்கு எதிர் குழியிலுள்ள காய்களையும் எடுத்துக் கொள்வர்.

         அதே காசிக் குழிக்கு முன்னால் உள்ள குழி காலியாக இருப்பின் அந்த காசிக் குழியைத் தட்ட வேண்டும். அப்படி ஒருவருக்கு மேல் அதே குழியைத் தட்டினால் ஆட்டம் முடிந்தவுடன் அதில் உள்ள காய்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தம் குழிக்கு போட வேண்டிய  அளவ காய்கள் வைத்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்தக் குழியில் வேறு எந்தப் பொருளையேனும் போட்டு வைக்க வேண்டும். இதன்படி விளையாட்டை விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த விளையாட்டு சீக்கிரம் முடியாது. கிராமப்புற மக்கள் விரும்பி விளையாடுவார்கள். இதுவே பல்லாங்குழி விளையாடும் முறையாகும்.

மஞ்சு விரட்டு

        மஞ்சு விரட்டை கிராமப்புற மக்கள் ஒரு விளையாட்டாக கொண்டாடுவார்கள். பொங்கலின் கடைசி நாளன்று வீர விளையாட்டாகக் கொண்டாடுவர். முரட்டுக் காளையை அடக்குவதில் இளைஞர்கள் பங்கு கொள்வார்கள். காளையை அடக்குபவர்கள் கருப்புத் துணியைக் காட்டுவார்கள். உடனே கருப்புத் துணியைக் காட்டும்பொழுது முட்ட வரும். இது போல் அடிக்கடி காட்டி காளை ஒரு நிலையில் சோர்ந்து விடும். காளை சோர்ந்தபின் எளிதாகக் காளையை அடக்கி விடுவார்கள். இதை விளையாடும் பொழுது கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். இதனையே கிராமப் புறங்களில் மஞ்சு விரட்டு என்பர். தமிழ் இலக்கியங்கள் இவ்விளையாட்டை ஏறுதழுவுதல் எனக் குறிப்பிடும்.

சில்லி விளையாடுதல்

          இவ்விளையாட்டில் ஒன்று மேற்பட்டவர் கலந்து கொள்ளலாம். சில்லி விளையாடுவதற்கு சப்பட்டையான சிறு கல்லை உபயோகிப்பர். இது காலுக்குச் சேதம் ஏற்படுத்தாது. இதற்கு நான்கு கட்டங்கள் போடப்பட்டு, அதை இரண்டாகப் பிரிப்பர். இது செவ்வக வடிவில் இருக்கும். இது ஒற்றைக் காலில் விளையாடக் கூடிய விளையாட்டாகும்.

தாயம்

  புராணக் காலத்திலிருந்தே விளையாடப்பட்டு வரும் விளையாட்டாகும். இதில் குறைந்தயளவில் இரண்டு பேர் விளையாடலாம். அதிகமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். இதை பொழுது போக்காக மட்டுமன்றி சூதாட்டமாகவும் விளையாடுவர். இதில் 4 முதல் 6 காய்வரை விளையாடுவதற்கு உபயோகிக்கலாம்.

முதலில் சதுர வடிவமாகப் போட்டுக் கொள்வர். நான்கு பக்கமும் பதினெட்டு, பதினெட்டு கட்டங்கள் இருக்கும்படி போட வேண்டும். இதை விளையாடுவதற்கு பகடையை உபயோகப்படுத்துவார்கள். ஒருவருடைய காய் ஒரு கட்டத்தில் இருக்கும் பொழுது ஒருவர் பகடையை உருட்டி, அந்தக் காயை வெட்டுவதற்கான எண் கிடைத்து விட்டால் அந்தக் காய் வெட்டுப்பட்டு விடும். இப்படி மாறி மாறி விளையாடுவர். இதன் முடிவில் யாராவது வெற்றிப் பெறுவர். மகாபாரதத்தில் இந்த விளையாட்டு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

சேவல் சண்டை

     சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டின் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது சல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது.  

     பட்டினப்பாலைதிருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன. இதே போன்ற விளையாட்டுகள் வட அமெரிக்காஆசியாவின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன.

           சேவல் சண்டை என்பது இரு சேவல்களிடையே நடைபெறும் சண்டையாகும். இயற்கையாக சேவல்கள், பெட்டைகளோடு இணை சேர்வதற்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையில் வெற்றி பெரும் சேவல் பெட்டையுடன் இணை சேர்கிறது. சேவல் சண்டையை சேவல்கட்டு, சாவக்கட்டு என்றும் அழைக்கின்றனர். சண்டைக்காக சேவல்களை தயார் செய்ய சேவல்கள் கட்டுத்தரை எனுமிடத்தில் கட்டப்படுகின்றன. இதனால் சண்டை சேவல்களை "கட்டு சேவல்கள்" என அழைக்கும் வழக்கம் உள்ளது. கட்டு சேவல்கள் சண்டையிட்டுக் கொள்வதால் சேவல்கட்டு என்று அழைக்கின்றனர். இதில் சாவக்கட்டு என்பது சேவற்கட்டு என்ற சொல்லிலிருந்து வந்த திரிபாகக் கருதப்படுகிறது.

          சிந்து சமவெளி நாகரிகத்தில் சேவல் முத்திரைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிறுவப்பட்ட சேவலுக்கான நடுகல் வரையில் சண்டைச் சேவல் குறித்த தகவல்கள் உள்ளன.

          தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகேயுள்ள அரசலாபுரம் என்ற ஊரில் சேவல் நடுகல் ஒன்று கிடைத்துள்ளது.  இதன் காலம் கிபி. ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அதில் முகையூர் என்ற பகுதியில் மேலச்சேரி என்ற பகுதி சார்பாகப் போரிட்டு மாண்ட சேவலுக்காக வைக்கப்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன. பொதுவாக தமிழர்கள் மரபில் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் வைக்கப்படுவது வழக்கம். அதே போல சேவலுக்கும் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சேவல் சண்டைக்கான முக்கியத்துவத்தினை தெரிவிக்கிறது. இந்தளுர் பகுதியில் கிடைத்த சேவல் நடுகல்லில் வீரமரணம் அடைந்த சேவலின் பெயர் "பொற்கொற்றி" என்றும், அச்சேவல் கீழச்சேரி எனும் இடத்தைச் சேர்ந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

       தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகேயுள்ள அரசலாபுரம் என்ற ஊரில் சேவல் நடுகல் ஒன்று கிடைத்துள்ளது.  இதன் காலம் கிபி. ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அதில் முகையூர் என்ற பகுதியில் மேலச்சேரி என்ற பகுதி சார்பாகப் போரிட்டு மாண்ட சேவலுக்காக வைக்கப்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன. பொதுவாக தமிழர்கள் மரபில் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் வைக்கப்படுவது வழக்கம். அதே போல சேவலுக்கும் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சேவல் சண்டைக்கான முக்கியத்துவத்தினை தெரிவிக்கிறது. இந்தளுர் பகுதியில் கிடைத்த சேவல் நடுகல்லில் வீரமரணம் அடைந்த சேவலின் பெயர் "பொற்கொற்றி" என்றும், அச்சேவல் கீழச்சேரி எனும் இடத்தைச் சேர்ந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...