உடும்பு
உடும்பு ஊர்வன இனத்தைச் சேர்ந்தது. ஒவ்வொன்றும்
இரண்டு கிலோ எடைக்குக் குறைவில்லாமல் ஐந்து கிலோ வரையிலும் கிடைப்பன. இவை பெரும்பாலும்
வரப்போரங்களின் வளைகளிலும், திடல் திட்டுகளில் உள்ள வளைகளிலும் வாழும் தன்மையுடையன.
மரங்களிலும் தங்கும் தன்மை கொண்டன. இவற்றைப் பிடிப்பது மிகவும் எளிதல்ல.
இந்த உடும்புகள் மனிதர்களைக் கண்டு அவ்வளவாக அச்சம் கொள்வதில்லை. நின்று திரும்பிப்
பார்க்கும் இயல்பு கொண்டது. அந்த நேரங்களில் அதன்மீது துணி வீசினால் அந்த துணிக்குள்ளேயே
சிக்கிக் கொள்ளும். அது தங்கும் வளைகளைக் கண்டறிந்து மண்ணைக் கிளறிப் பிடிப்பதும் உண்டு.
எவ்வாறு இருந்தாலும் உடும்பைப் பிடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால்
பிடிப்பவர்களைக் கவ்விப் பிடித்துக் கொள்ளும். இரத்தத்தை உறிஞ்சிவிடும். அதன் பிடியில்
இருந்து விடுபடுவதும் எளிதல்ல. அதனால்தான் ‘உடும்புப்பிடி’ என்ற சொல்லாடல் இருக்கிறது.
உடும்பின் பயன்கள்
·
உடும்புகளின்
மேல் தோல் காத்திரமானது. பிரமிப்பை வெளிப்படுத்தும் ‘குறும்பறை’க்குப் பயன்படுத்துவார்கள்.
இந்தத் தோல்களைப் பயன்படுத்தும் பறை துல்லியமான ஒலியை வெளிப்படுத்துக் கூடியது.
·
உடும்புக் கறி
பொன்கறி என்ற சிறப்பைப் பெற்று இருக்கிறது. இதில் இரும்புச் சத்தும், சுண்ணாம்பு சத்தும்
கூடுதலாக இருக்கும்.
·
இக்கறியைப்
பெரியவர்கள் மட்டும் உண்பார்கள். குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை.
·
இந்தக் கறியை
உண்டால் இரண்டு நாட்களுக்கு உணவின்றி வாழ முடியும்.
·
இந்தக் கறியை
உண்பவர்களுக்கு எதிர்க்களித்தல் கூடாது. அப்படி ஆகிவிட்டால் செரிப்பு ஏற்படாமல் வயிறு
உப்பி மரித்து விடக் கூடிய அபாயமும் உண்டு. அப்படி உணர்வைப் பெற்றால் உடனே முறி இலையை
மென்று சாற்றைக் கொள்வார்கள்.
Comments
Post a Comment