மலர்களினால்
பெயர் பெற்ற தலப்பெயர்கள்
மலர்களின் சிறப்பினாலும் தலங்கள் பெயர் பெறுகின்றன.
வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் மலர்கள் தொடர்பாகப் புராணங்கள் பலகதைகளைத் தருகின்றன.
இறைவனின் பூசைக்கென்றே தனியாகத் தாமரைக் குளங்கள் பராமரிக்கப்பெற்றன. அவைகளும் மலர்களின்
சிறப்பினால் பெயர் பெற்றிருக்கக் கூடும்.
நீலோற்பலம்
தணிகையில் மலரும் நீலோற்பல மலரைக் கொண்டு
அத்தலத்தில் தேவர்களும் முனிவர்களும் வழிபாடியற்றினர், எனத் தணிகைப் புராணம் குறிப்பிடுகிறது.
நாள்தோறும் இறைவனுக்கென்று மலரும் நீலோற்பல மலரின் பெருமைக் குறித்து அத்தலம் காவித்தடவரை,
நிலவரை, நீலவிலங்கல், அல்லகாத்திரி, உற்பலவரை, காவியத்திரி, குவளைக்கிரி, காவியங்கிரி
என்ற பெயர்களைப் பெற்றதாகத் தணிகைப்புராணம் பாடுகிறது.
செவ்வந்திப்பூ
சரபமுனிவர் தாயுமானவரைச் செவ்வந்திப் போதினால்
வழிபட்டமையால் அத்தலம் செவ்வந்திபுரம் என்றாயிற்று எனச் செவ்வந்திப் புராணம் விவரிக்கின்றது.
முல்லை
முல்லைக்கொடியின் மறைவினின்று இறைவன் வெளிப்பட்டமையால்
திருமுல்லைவாயில் எனும் தலம் பெயர் பெற்றதோடு முல்லைக்கொடியே தலமரமாகவும் வணங்கப் பெறுகிறது.
இறைவனும் முல்லைவனநாதர் எனும் பெயர் பெற்றுள்ளமையும் நினையத் தகும்.
பூளை, எருக்கு
பூளைச்செடியைத் தலத்திற்குரியதாகப் பெற்றுள்ள
தலம் திருஇரும்பூளை எனும் தலமாகும். எருக்கம்பூவினையும் எருக்கஞ்செடியையும் சிறப்பாகப்
பெற்றுள்ள தலம் திருஎருக்கத்தம்புலியூர் ஆகும்.
Comments
Post a Comment